"ஐயோ... தன்யாவைக் காணோம்' என அந்தத் தாய் கதறியது... கோவை கஸ்தூரி நாயக்கன்புதூரை அதிர வைத்தது. மார்ச் 25-ந் தேதி இரவு முழுவதும் 6 வயது சிறுமி தன்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல் லோரும் தேடினர்.

பன்னிமடை, தடாகம், துடியலூர் எனப் பல இடங்களிலும் தேடுதல் நடந்தது. போலீசும் களமிறங்கியது. "குடுகுடுப்பைக்காரன் ஒருத்தன் இந்த வழியா போனான்'’என்ற தகவலால் அந்த நபரைப் பிடித்து வெளுத்தனர். தன்யா கிடைக்கவில்லை. தன்யா வீட்டுப் பக்கத்தில் மூதாட்டி அய்யம்மாள் இறந்ததால் அதற்கான வேலைகளையும் அக்கம்பக்கத்தினர் பார்க்க வேண்டியிருந்தது.

c

மார்ச் 26-ந் தேதி காலை 7.30 மணியளவில் பால் வாங்க வந்த தனலட்சுமியின் பெருங்குரல்தான், தன்யாவை அடையாளம்காட்டியது. உயிருடன் அல்ல, பிணமாக. வீட்டிற்கு அருகே ஒரு சந்தில் டி-சர்ட்டால் மூடப்பட்டுக் கிடந்த சிறுமி தன்யாவின் உடலெங்கும் ஓநாய்களால் குதறப்பட்டது போன்ற பல காயங்கள். கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தாள் சிறுமி. வாயில் மணல் திணிக்கப்பட்டிருந்தது. கை- கால்கள் கட்டப்பட்டிருந்தன. அந்தக் கொடூரக் கோலத்தைப் பார்த்த அம்மா வனிதாவும், அப்பா பிரவீனும் அழுது துடித்தார்கள். ஊரே ஆவேசம் கொண்டது.

Advertisment

தன்யாவின் பெற்றோர் துப்புரவுப் பணி மேற்கொள்பவர்கள். அவர்கள் வீட்டின் பின் வீட்டு பையன் விஜயகுமார் காணாமல் போனதால் சந்தேகம் வலுவானது. வீட்டைச் சுற்றியுள்ள சில விடலைப் பசங்களை விசாரணைக்குள் கொண்டு வந்தனர் போலீசார். தன்யாவின் அம்மா வனிதா, விஜயகுமாரை குற்றம்சாட்டினார். என்ன நடந்தது என்ற விசாரணை தொடர்ந்தது.

தன்யாவின் அப்பா பிரவீன், அம்மா வனிதா ஆகியோர் ""ஸ்கூல் முடிஞ்சதும் தன்யா தன் தாத்தாகூட வீட்டுக்கு வந்திருக்கா. தங்கச்சிகூட விளையாடிட்டு இருக்கும்போது, தன்யாகிட்ட கொள்ளுப்பாட்டி கமலாம்பாள் வெத்தலை வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கு. தன்யாவும், அவ தங்கச்சியும் சேர்ந்துதான் கடைக்கு போய்ட்டு வந்திருக்காங்க. அதுக்கப்புறம் பக்கத்திலே உள்ள சந்தோஷ்குமார் வீட்டுப் பக்கம் விளையாடப் போனவ காணாமப் போயிட்டா.

என் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டவன் இவனு களாத்தான் இருக்கும்னு நாங்க சொன்னதையடுத்து விஜய குமார், சந்தோஷ்குமார், கௌதமன், துரைராஜ், நந்தகுமார், திவாகரன்னு 6 பேரை விசாரணைக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்காததால நாங்க துடியலூர் பஸ் ஸ்டாண்ட் முன்னால சாலை மறியல் பண்ணினோம்.

Advertisment

c

தன்யா உடலை வாங்க மறுத்து, ஜி.ஹெச். முன்னால சாலை மறியல் செஞ்சோம். அதுக்கப்புறம் இப்பதான் சந்தோஷ்குமாரை கைது பண்ணியிருக்காங்க.

அவனோட நெறைய பேர் இதுல இருக்கறாங்க... அவுங்களையும் கைது பண்ணணும்... அவனுகளுக்கு கொடுக்கற தண்டனையால இனி எவனும் குழந்தைக பக்கம் நெருங்கறதுக்கே யோசிக்கணும்'' என்கிறார்கள் கோப மாய்.

ஊரில் உள்ளவர்களிடம் இந்தக் குற்றச்சாட்டில் உள்ள இளைஞர்களைப் பற்றிக் கேட்டோம். ""குழந்தை தன்யா வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற வீட்டுக்கு 3 வருசத்துக்கு முன்னால குடி வந்தவன்தான் விஜயகுமார். சொந்தமா லோடிங் ஆட்டோ ஓட்டுறான். இப்ப சிக்கியிருக்கற 6 பேரும் பட்டத்தரசியம்மன் கோவில் வாசல்ல தான் உட்கார்ந்து தண்ணி, கஞ்சான்னு போதையில கிடப்பானுங்க. செல்போன்ல எதை எதையோ பார்த்துக்கிட்டிருப் பானுங்க. இவனுகளோடு சம்பந்தப்பட்ட இன்னும் முக்கியமான சில பேரைத் தப்பிக்க விடப் பார்க்கிறர்கள் போலீசார்'' என்கிறார்கள் கோரஸாய்.

தன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில்... ஒன்றுக்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடூரம் செய்து, கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது.ஆனால், சந்தோஷ்குமார் மட்டுமே கைதாகியுள்ளான். போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, விஜயகுமார் அப்பா சந்திரன் அ.தி.மு.க.காரர். கட்டிட வேலை எடுத்து செய்து பணம் சம்பாதிச்சாரு. அதிலேதான் விஜயகுமாருக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்தாரு. விஜயகுமாருக்கு இந்து அமைப்புகளோடு தொடர்பு உண்டு. இந்து பாரத் சேனாவுலதான் இருந்தான். இந்த ஏரியாவுக்கு அவன் குடி வந்ததுக்கு கௌதமன்ங்கிறவன்தான் காரணம். அவனோட அப்பா அ.தி.மு.க. கண்ணப்பன் வீட்டுலதான் விஜயகுமார் குடிவந்தான். விஜயகுமார், கௌதமன் இரண்டு பேரும் சந்தோஷ்குமார்கூட பழக்கம் வச்சுக்கிட்டாங்க. பொண்டாட்டிய பிரிஞ்சு வாழுற சந்தோஷ்குமாருக்கு ஆபாச வீடியோக்களை காட்டி, ஆசையைத் தூண்டிவிட, அந்த வெறியில்தான் தன்யாவை கொடுமைப்படுத்திக் கொன்னுட் டானுங்க.

x

தன்யா கொலை சமயத்துல செத்துப் போன அய்யம்மாளால எழுந்து நடக்க முடியாது. சந்தோஷ்குமார் அப்பாவின் சகோதரிதான் அய்யம்மாள். சந்தோஷ்குமார் வீட்டில்தான் அவர் இருந்தார். அங்கேதான் சந்தோஷ்குமார் மூலமா விஜயகுமார், கௌதமன் உள்ளிட்ட ஆறு பேரும் கூடியிருக்கானுக. சாயங்காலம் 6 மணிக்கு தன்யாவைத் தூக்கிட்டு வந்து சீரழிச்சிருக்கானுங்க. அய்யம்மாள் எழுந்துக்க முடியாத நிலையிலும்... இவனுக எதித்தாப்ல இருக்கற அந்த ரூம்ல அந்த சின்னக் குழந்தைய பாடாப்படுத்துறதை பார்த்து கோபமாக கத்த, அந்தப் பாட்டியின் வாயைப் பொத்தி கழுத்தை நெரித்து கதையை முடித்துவிட்டது இந்தக் கும்பல். பாட்டியையும் கொன்னாச்சு... தன்யாவையும் சீரழிச்சாச்சி... வெளிய விட்டா மாட்டிக்குவோம்னு முடிவுபண்ணி கத்தியால அந்த சின்னக் குழந்தையோட கழுத்தை அறுத்துட்டானுக. தன்யா வாயில் திணிக்கப்பட்டிருந்த மண்கூட சந்தோஷ்குமார் வீட்டு மண்தான்.

x

அன்னைக்கு நைட்டு, ஊரே தன்யாவைத் தேடி அலைவதை அறிந்து சந்தோஷ்குமாரின் வீட்டிலிருந்து பத்து அடி தூரமே இருக்கிற விஜயகுமாரின் வீட்டிற்குள் தன்யாவை டீ- சர்ட்டைப் போர்த்தி தூக்கிக்கொண்டு சந்து வழியாக கொண்டு போய் விட்டார்கள். அதற்கு பின்னரே அய்யம்மாள் உடல்நிலை சரியில்லாமல்போய் இறந்துவிட்டதாக செய்தி பரப்பினான் சந்தோஷ்குமார்.

அதற்குப் பின்னால் ஊரே இப்படி திரளும் என அந்தக் கும்பல் எதிர்பார்க்கவில்லை. தன்யாவின் உடலை வெகு இலகுவாய் ஏதேனும் ஒரு காட்டுப் பகுதியில் வீசி விடலாம்'' என நினைத்த அந்த கும்பலுக்கு நேரம் போகப்போக பயமாகிவிட்டது.

அதன்பின்னரே விடிகாலை 4 மணியளவில் மாடிப் படிகளில்லாத விஜயகுமாரின் வீட்டின் மேலே பக்கத்து வீட்டு சன்னல்களில் ஏறி அந்த சந்திற்குள் தூக்கிப் போட்டு விட்டு அப்போதே அவர்கள் தனித்தனி யாய் பிரிந்து அவரவர் வீட்டுக்கு போய் விட்டார்கள்.

தன்யாவின் வாயிலிருந்த மண்ணும், சந்தோஷ்குமாரின் வீட்டிலிருந்த மண்ணும் ஒன்று எனக் கண்டறிந்தது தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் கிரைம் ஸ்டேஷனில் பணியாற்றும் ஏட்டு ஆனந்த் ஈஸ்வர்தான்.

x

அத்துடன், போலீசாரின் விசாரணையில் சிறுமி தன்யாவுக்கு பல முறை பாலியல் துன்பம் தரப்பட்டுள்ளதும், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தரப்பிலும் இது குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதையும், மகளை இழந்த வேதனையில் இருக்கும் பெற்றோரின் ஒத்துழைப்புக்காகக் காத்திருப்பதையும் தெரி வித்தனர்.

இதில் அரசியல் பலமாக விளையாடுகிறது. இந்து அமைப்பைச் சேர்ந்த விஜயகுமாரும், அ.தி.மு.க. பிரமுகரான கண்ணப்பனின் மகனான கௌதமனும் இந்த தன்யா கொலையில் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், "தேர்தல் நேரம் என்பதால் மேலிடத்தின் உத்தரவுப்படி எஸ்.பி. பாண்டியராஜனே இவர்களைக் காப் பாற்றுவதற்காகப் பலவற்றை மறைக்கிறார் எனப் புகார் எழுந்து, துடியலூரில் எஸ்.பி.யை மாற்றக் கோரி போராட்டங்களும் நடந்தன.c

இந்நிலையில், எஸ்.பி.பாண்டியராஜனும், பொள்ளாச்சி டி.எஸ்.பி. ஜெயராமனும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. .

வீரராஜாஜி என்பவரால் தொடங்கப்பட்ட இந்து பாரத் சேனா அமைப்பில்தான் விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் செயல்பட்டனர். இவர்களுக்கு லோக்கல் பா.ஜ.க. பிரமுகர்களின் ஆதரவு உண்டு. கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படு கொலையின்போது இந்துத்வா அமைப்பினர் உருவாக்கிய கலவரத்தில் விஜயகுமார் மீதும் வழக்கு உள்ளது. தன்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் அதியமான் நம்மிடம், “""இந்து முன்னணியைச் சேர்ந்த காடேஸ்வரா சுப்பிரமணியம், தன்யா வீட்டிற்கு வந்து, "யார் பேச்சையும் கேட்க வேண்டாம் எனச் சொல்வது ஏன்?' தாழ்த்தப் பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் ஏன் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை''’எனக் கேள்விகளை எழுப்புகிறார்.

பொள்ளாச்சி போலவே உண்மைகளைப் புதைக்கும் நடவடிக்கைகள் கோவையிலும் நடக்கின்றன.

-அ.அருள்குமார்