பொதுக்குழுவே’ என போஸ்டர் ஒட்டியதற்காகத்தான், கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தி.மு.க.விலிருந்து கட்டம் கட்டப்பட்டார் மு.க.அழகிரி. ஒருசிலரைத் தவிர அழகிரியின் ஆட்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டனர். இதனால் கொஞ்ச நாட்கள் பெருத்த அமைதி கா
பொதுக்குழுவே’ என போஸ்டர் ஒட்டியதற்காகத்தான், கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தி.மு.க.விலிருந்து கட்டம் கட்டப்பட்டார் மு.க.அழகிரி. ஒருசிலரைத் தவிர அழகிரியின் ஆட்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டனர். இதனால் கொஞ்ச நாட்கள் பெருத்த அமைதி காத்தார் அழகிரி. ரஜினியுடன் இணையப் போகிறார், பா.ஜ.க.வில் சேரப் போகிறார் என்றெல்லாம் பரபர நியூஸ்கள் கிளம்பின.
2021 ஜன.03-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் பேசும் போது, எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என கர்ஜித்தார். ""நான் எடுக்கப் போகும் முடிவை நீங்களெல்லாம் ஏற்றுக் கொள்ளவேண்டும், ஆனால் அந்த முடிவை எடுக்க காலதாமதமாகும்'' என தனது ஆதரவாளர் களிடையே பேசினார் அழகிரி. இந்த நிலையில் கடந்த ஜன.30-ஆம் தேதி அழகிரியின் பிறந்த நாள் வந்தது. டிசைன் டிசைனான போஸ்டர்களாலும் அல்லுசில்லான வாசகங்களாலும் மதுரையே கதிகலங்கியது. ஐபேக் தேவையில்லை கலைஞரின் மூளையான உங்க அண்ணனே போதும், ‘உலகத்துல நல்லவன் கடைசில தான் ஜெயிக்கிறான், அதுக்குள்ள கெட்டவன் வாழ்ந்துட்டுப் போயிடுறான், மக்களை ஆட்சி செய்கிறவர்கள் வேண்டாம், மனங்களை ஆட்சி செய்கிறவன்தான் வேணும்’ இப்படியெல்லாம் சிந்தித்து போஸ்டர் வாசகங்களை ரெடி பண்ணியவர்கள், ’சேர்த்தால் உதயம், தவிர்த்தால் அஸ்தமனம்’ என திமுக தலைமைக்கு சாபம்விடும் அளவில் சூடு கிளப்பினார்கள்.