கடந்த ஏப்ரல் 6, வாக்குப்பதிவு நாளன்று
நடிகர் அஜித், மாஸ்க் அணியாமல் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல் ஃபோனை வாங்கி வைத்து பிறகு கொடுத்த சம்பவம் நடந்தது. தற்போது மீண்டும் ஒரு செல்ஃபி சர்ச்சையில் அடிபடுகிறது அஜித் பெயர். கடந்த ஆண்டு மே மாதம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்கச் சென்ற அஜித்தை தூரத்திலிருந்து வீடியோ எடுத்து வெளியிட்டார் மருத்துவமனை ஊழியரான ஃபர்சானா. அவரே அஜித்துடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். "மருத்துவ மனைக்கு வந்த வி.ஐ.பி.யை வீடியோ எடுத்து பொதுவெளியில் வெளியிட்டார்' என, அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். பின்னர் சில நாட்களில் பணிநீக்கம் செய்துள்ளது. இத னால், அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவை அணுகி உதவி கேட்டுள்ளார் ஃபர்சானா. அவரது விண்ணப்பத்தைக் கேட்டு, அவரது மகளின் பள்ளிக் கட்டணத்தை கட்டத் தயாரான அஜித் தரப்பிடம், தனது அக்கவுண்டில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அந்தப் பெண். "பள்ளிக்கட்டணத்தை நேரடியாக மட்டுமே செலுத்த முடியும்' என்று தெரிவித்துவிட்டது அஜித் தரப்பு. தொடர்ந்து அஜித்தை சந்திக்க ஒரு அப்பாயிண்ட் மெண்ட் வேண்டு மென்றும், தனது வேலையை திரும்பப் பெற அவர்கள் உதவ வேண்டுமென்றும் கேட்டு வந்த ஃபர்சானாவிடம் "தாங்கள் முயன்றதாகவும் கொரோனா காலமென்பதால் பலரையும் நிறுத்தியிருக்கிறோ மென்று' நிர்வாகம் கூறியதால் எதுவும் செய்ய முடியாதென்று கூறிவிட்டது அஜித் தரப்பு. சமீபத்தில் சுரேஷ்சந்திரா மீது "உதவுகிறேன் என்று கூறி தன்னை நம்பிக்கை மோசடி செய்ததாக' காவல்துறையில் புகார் அளிக்கச் சென்ற ஃபர்சானாவின் புகாரை ஏற்க வில்லை காவல்துறை. ஊடகங்களில் செய்தி வர, அந்தப் பெண் தன்னுடன் பேசிய வாட்ஸ்-அப் சாட் பதிவை வெளியிட்டிருக்கிறார் சுரேஷ் சந்திரா. "அஜித்தை சந்திக்க அப்பாயிண்ட் மெண்ட் வேண்டும், தனக்கு உதவி வேண்டும்' என்று மீண்டும் மீண்டும் கேட்டிருக் கிறார் அந்தப் பெண். இதிலிருந்து அந்தப் பெண்மீதுதான் தவறு என்பது தெரிகிறது. "அமைதி யாவே இருந்தாலும் அஜித்தை தேடி வருகின்றன சர்ச்சைகள்...' என்கின்றனர் ரசிகர்கள்.
மரங்களில் வாழும் விவேக்!
விவேக்கின் திடீர் மறைவை அவ்வளவு எளிதில் மறக்காது திரையுலகம். அப்துல்கலாமின் அறிவுரையை ஏற்று ஒரு கோடி மரங்களை நட வேண்டுமென செயல்பட்டுவந்தார் விவேக். அந்தப் பாதையின் பாதி தூரத்தில் அவர் மறைந்துவிட, ரசிகர்களும் திரையுலகினரும் மீதி தூரத்தை கடக்கவேண்டுமென செயல்படுகின்றனர். விவேக் மறைவின்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல ரசிகர்கள் மரக்கன்றுடன் வந்தனர். திருவள்ளூரில் எஸ்.பி. அரவிந்தன் முன்னிலையில் ரம்யாபாண்டியன் கலந்து கொண்ட நினைவேந்தல் விழாவில், விவேக் வாழ்ந்த ஆண்டுகளை குறிப்பிடும் வகையில் 59 மரங்கள் நடப்பட்டன. சிம்பு, வெங்கட் பிரபு, ஸ்டன்ட் சில்வா, பிரேம்ஜி உள்ளிட்ட "மாநாடு' படக்குழு விவேக் நினைவாக மரம் நட்டனர். அருண் விஜய், நடிகை ஆத்மிகா உள்பட பலர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மரம் நட்டுள்ளனர். விவேக்கின் நெருங்கிய நண்பரான மயில்சாமி தினமும் ஒரு மரக்கன்றை நடவிருப்பதாக சபதம் எடுத்துள்ளார். இப்படி, மறைந்தாலும் மரங்களில் வாழ்கிறார் விவேக்.
ஜனநாதன் நினைவாக...
மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படமான "லாபம்' படத்தின் சிங்கிள் பாடலொன்று வெளி யிடப்பட்டுள்ளது. "யாமிலி யாமிலியா...' என்ற அந்தப் பாட லின் லிரிக்கல் வீடியோ வடிவம், ஜன நாதனுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஜனநாதனுடன் மிகுந்த நெருக்கமாக இருந்து வந்தார்.
ரிப்பீட்...
"கர்ணன்' வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜுடன் மீண்டும் இணைவதாக அறிவித்துள்ளார் தனுஷ். ஏற்கனவே சுப்ரமணிய சிவா, பூபதி பாண்டியன், சுராஜ், பாலாஜி மோகன், வெற்றி மாறன் ஆகியோருடன் ஒரு படத்துக்கு மேல் இணைந்து பணியாற்றியுள்ள தனுஷின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளார் மாரி செல்வராஜ். தனுஷின் அண்ணன் செல்வராகவன் ஸ்பெஷல்.
டும் டும் டும்...
நடிகர் விஷ்ணுவிஷால் தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்தார். பின்னர் அவரும் அமலாபாலும் நேசிப்பதாக செய்திகள் வந்தன. அவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பிறகு "பேட்மிட்டன் வீராங்கனையான ஜ்வாலா கட்டாவை தான் காதல் செய்வதாக' அறிவித்த விஷ்ணு, தற்போது அவரை மணந்துகொண்டார். கொரோனா காலமென்பதால் கூட்டமில்லாமல் முடிந்திருக்கிறது திருமணம்.
-வீபீகே