Advertisment

ராங்கால்! கவர்னர் அழைப்பு புறக்கணித்த அஜித்! ராஜ்பவன் மூவ்! விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு!

rr

"ஹலோ தலைவரே, தமிழகத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் பரபரப்பா இருக்கே.''”

"உண்மைதாம்பா, ராஜ்பவனின் மாண்பைக் கெடுத்துவரும் கவர்னர் ஆர்.என்.ரவியின் அழைப்பை, நடிகர் அஜித்குமாரும் புறக்கணித்திருக்கிறாரே!''”

Advertisment

ajith

"ஆமாங்க தலைவரே, அண்மையில் ஒன்றிய அரசு நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட தமிழகப் பிரபலங்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கியது. இவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து சிறப்பு செய்ய நினைத்த கவர்னர் ரவி, 15ஆம் தேதி இவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களில் நடிகர் அஜித், கவர்னரின் அழைப்பைப் புறக்கணித்துவிட்டார். இதுகுறித்து ராஜ்பவனுக்குக் கடிதம் அனுப்பிய அவர், ‘"பொதுவாக எந்த ஒரு விழா விலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனால் உங்கள் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்'’என அதில் குறிப்பிட்டிருக்கிறாராம். தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் பேசும்போது, "கவர்னர் என்பவர் மத்திய அரசின் ஊழியர். அவர் அர சியல்வாதிபோல் நடந்துகொள்வதால், அவர் விழாவில் கலந்துகொண் டால், என்மீதும் அரசியல் சாயம் படியும். நான் ராஜ்பவன் விழாவில் கலந்துகொள்ளாவிடில் கவர்னருக்கோ, மற்றவர்களுக்கோ எந்த வருத்தமும் இருக்கப்போவதில்லை'’என்றாராம் ஒரு புன்னகையோடு. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.''”

Advertisment

"த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்க்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பை டெல்லி வழங்கியிருக்கிறதே?''’

"மோடி அரசின் உள்துறை அமைச்சகம். த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்க்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. இதன்மூலம், துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 11 பேர், மூன்று ஷிப்டுகளில் இனி விஜய்க்கு பாதுகாப்பை வழங்குவார்கள். 1 ஷிப்டுக்கு 3 பேர் வீதம் 9 பேர்போக மீதமுள்ள 2 வீரர்கள் விஜய்யின் பர்சனல் செக்ட்யூரிட்டி ஃபோர்சாக இயங்குவார்கள். தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறையிடம், விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு ரிப்போர்ட்டை வாங்கி, அதன் அடிப் படையிலேயே இந்த "ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கியதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், உண்மையிலேயே அச்சுறுத்தல் இருக்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பு தராத ஒன்றிய அரசு, விஜய்க்கு மட்டும் இப்படி உயர்தர பாதுகாப்பைத் தரவேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் அவரது நல்லெண்ணத்தைப் பெற்று, அவரை விரைவில் பா.ஜ.க. கூட்டணிக்கு அழைக்க முனைக

"ஹலோ தலைவரே, தமிழகத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் பரபரப்பா இருக்கே.''”

"உண்மைதாம்பா, ராஜ்பவனின் மாண்பைக் கெடுத்துவரும் கவர்னர் ஆர்.என்.ரவியின் அழைப்பை, நடிகர் அஜித்குமாரும் புறக்கணித்திருக்கிறாரே!''”

Advertisment

ajith

"ஆமாங்க தலைவரே, அண்மையில் ஒன்றிய அரசு நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட தமிழகப் பிரபலங்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கியது. இவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து சிறப்பு செய்ய நினைத்த கவர்னர் ரவி, 15ஆம் தேதி இவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களில் நடிகர் அஜித், கவர்னரின் அழைப்பைப் புறக்கணித்துவிட்டார். இதுகுறித்து ராஜ்பவனுக்குக் கடிதம் அனுப்பிய அவர், ‘"பொதுவாக எந்த ஒரு விழா விலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனால் உங்கள் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்'’என அதில் குறிப்பிட்டிருக்கிறாராம். தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் பேசும்போது, "கவர்னர் என்பவர் மத்திய அரசின் ஊழியர். அவர் அர சியல்வாதிபோல் நடந்துகொள்வதால், அவர் விழாவில் கலந்துகொண் டால், என்மீதும் அரசியல் சாயம் படியும். நான் ராஜ்பவன் விழாவில் கலந்துகொள்ளாவிடில் கவர்னருக்கோ, மற்றவர்களுக்கோ எந்த வருத்தமும் இருக்கப்போவதில்லை'’என்றாராம் ஒரு புன்னகையோடு. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.''”

Advertisment

"த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்க்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பை டெல்லி வழங்கியிருக்கிறதே?''’

"மோடி அரசின் உள்துறை அமைச்சகம். த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்க்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. இதன்மூலம், துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 11 பேர், மூன்று ஷிப்டுகளில் இனி விஜய்க்கு பாதுகாப்பை வழங்குவார்கள். 1 ஷிப்டுக்கு 3 பேர் வீதம் 9 பேர்போக மீதமுள்ள 2 வீரர்கள் விஜய்யின் பர்சனல் செக்ட்யூரிட்டி ஃபோர்சாக இயங்குவார்கள். தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறையிடம், விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு ரிப்போர்ட்டை வாங்கி, அதன் அடிப் படையிலேயே இந்த "ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கியதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், உண்மையிலேயே அச்சுறுத்தல் இருக்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பு தராத ஒன்றிய அரசு, விஜய்க்கு மட்டும் இப்படி உயர்தர பாதுகாப்பைத் தரவேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் அவரது நல்லெண்ணத்தைப் பெற்று, அவரை விரைவில் பா.ஜ.க. கூட்டணிக்கு அழைக்க முனைகிறார்களோ? என்றெல்லாம் பல்வேறு கோணத்திலும் விவாதங்கள் நடந்துவருகின்றன.''”

"ஆனால், நடிகர் விஜய்யே தனக்கு இப்படி ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டிருக் கிறாரே?''”

vijay

"ஆமாங்க தலைவரே, தனக்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பு கேட்டதே விஜய்தான். அதாவது, தி.மு.க. அரசுக்கு எதிரான புகார் மனுவை கொடுக்க கடந்த டிசம்பர் மாதம் ராஜ்பவனுக்கு விஜய் சென்றபோது, கவர்னரிடம் பேச்சுவாக்கில் தனக்கு உயர்தர பாதுகாப்பை அவர் கேட்டார் என்கிறார் கள். இதனையடுத்து, பாதுகாப்பு வழங்கு வது பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்தாராம் கவர்னர். பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு தீர்மானித்த நிலையில், விஜய் தரப்பிடம் இதனை தெரிவித்த ராஜ்பவன், முறைப்படி விஜய் தரப்பிலிருந்து ஒரு கடிதத்தையும் பெற்று டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்தவகையில், விஜய்க்கு தெரிந்துதான் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் மாநில உளவுத்துறையினர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சி.ஆர்.பி. எஃப். வீரர்கள் பாதுகாப்பில் இனி விஜய் இருக் கப்போவதால், அவரின் ஒவ்வொரு மூவ்மெண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அப்பட்ட மாகத் தெரியவரும். அந்த வகையில், மத்திய அமைச்சர் அமித்சாவின் கட்டுப்பாட்டில் விஜய், தானாகச் சிக்கிக்கொண்டார் என்கிற விமர்சனமும் மாநில உளவுத்துறை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.''

"த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வளைத்துவருவதாக டாக் அடிபடுகிறதே?''”

"தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர் விஜய்யை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறது என்கிறார்கள். நடிகர் ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவர இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்து தோற்றபோதே, அவர்களின் அடுத்த இலக்காகப் பார்க்கப் பட்டவர் விஜய்தானாம். அன்றிலிருந்தே அவரை அரசியலுக்குக் கொண்டுவர, அவர்கள் தார்க்குச்சி போட்டு வந்திருக்கிறார்கள். அதனடிப் படையில்தான் விஜய்யின் அரசியல் பிரவேசமே நடந் தது என்கிறார்கள். இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, விஜய்யின் நெருங்கிய உற வினரான தொழிலதிபரை வளைத்திருப்பதோடு, விஜய்க்கு மிக நெருக்கமான, பிராமண சமூகத்தைச் சேர்ந்த அந்த நடிகையை யும், தங்கள் நட்பு வளையத்துக்குக் கொண்டு வந்துவிட்டதாம். இதன்மூலம் விஜய்க்கு கிடுக்கிப் பிடி போடப்பட்டிருக்கிறதாம். அந்த நடிகையோ விஜய்யை வைத்து முதல்வர் கனவு காண்கிறா ராம். விஜய்யின் உறவினரான அந்த தொழிலதிபர் லயோலா கல்லூரி நிர்வாகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவராம். விஜய் படங்களைத் தயாரித்திருக் கும் இவர், ஹவாலா விவகாரத்திலும் இல்லீகலாக ஈடுபட்டவர் என்கிறார்கள் இவர் ஜாதகத்தை அறிந்தவர்கள். இந்தத் தொழிலதிபரும், கவர்னர் மாளிகையில் இருக்கும் அவரது நட்புக்குரிய திருஞானசம்மந்தம் என்கிற ஒரு முக்கிய அதி காரியும்தான் விஜய்க்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பு கிடைக்க ஆர்வமாகக் காய்களை நகர்த்தினார் களாம். இதற்கிடையே வரும் 26ஆம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் தனது கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டவிருக்கிறார். இன்னும் பல மாவட்டங்களுக்கு மா.செ.க்கள் நியமிக்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தை விஜய் கூட்டுகிறார் என்கிறார்கள்.''”

"தி.மு.க. மா.செ.க்கள் சிலர் அதிரடியாக மாற்றப் பட்டிருக்கிறார்களே?''

"ஆமாங்க தலை வரே, வரப்போகும் பொதுத் தேர்தலை உத்தேசித்து தி.மு.க.வில் அதிரடியாக 16 மா.செ.க்கள், மற்றும் நிர்வாகிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதோடு, அ.தி.மு.க. வில் இருந்து வந்தவர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், பல்வேறு புகாரில் சிக்கிய செஞ்சி மஸ்தான் மீண்டும் விழுப் புரம் வடக்கு மா.செ.வாக நியமிக்கப்பட்டி ருக்கிறார். இது அமைச்சர் பொன்முடியை சங்கடப்படுத்தியதால், அவரைக் குளிர்விக் கும் வகையில் அமைச்சர் கண்ணப்பனிடம் இருந்த கதர் துறையை பொன்முடியிடம் கொடுத்திருக்கிறாராம் ஸ்டாலின். இன் னொரு பக்கம், திருவள்ளூர் கிழக்கு மா.செ. வாக இருந்த எம்.எல்.ஏ. கோவிந்தராஜனுக்கு பதில் ரமேஷ் ராஜ் மா.செ.வாக ஆக்கப் பட்டிருக்கிறார். சென்னையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மா.செ.வாக ஆக்கவேண்டும் என்கிற கோரிக் கை எழுந்த நிலை யில், திருவள்ளூ ரில் அப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம் அறிவாலயம்.''”

"அ.தி.மு.க. மா.செ.க்கள் பலரின் பதவியையும் பறிக்கத் திட்டமிட்டிருக்கும் எடப்பாடி, அந்த முடிவைத் தற்சமயம் ஒத்திவைத்திருக்கிறார் என்கிறார்களே?''”

rr

"சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, மாவட்ட அளவிலும் தொகுதிகள் அளவிலும் கட்சிக் கட்டமைப்பைச் சீரமைக்க நினைக்கிறார் எடப்பாடி. இதற்காக 4 மாதங்களுக்கு முன்பே 10 பேர் அடங்கிய கள ஆய்வுக் குழுவை அமைத்தார். இவர்கள் 5 குழுவாகப் பிரிந்து தமிழகம் முழுவதும் ஆய்வுகளை நடத்தி, அதன் ரிப்போர்ட்டை சமீபத்தில் எடப்பாடியிடம் ஒப்படைத் தனர். அந்த ரிப்போர்ட்டில் 40-க்கும் மேற்பட்ட அ.தி. மு.க. மா.செ.க்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஷாக்கான அவர், இது குறித்து ஆய்வுக் குழுவினரிடம் விசாரித்தார். அப்போது நிறைய விபரங்களை எடப்பாடிக்கு அவர்கள் தெரிவித் தனர். இவற்றின் அடிப்படையில் 40 மா.செ.க்களின் பதவிகளைப் பறித்துவிட்டு, மாற்றாகப் புதிய மா.செ.க் களை நியமிக்க முடிவு செய்திருந்தாராம் எடப்பாடி. இதில், சென்னையைச் சேர்ந்த 3 மா.செ.க்களும் அடக்கம். இந்த நிலையில் தற்போது தனக்கு எதிராகக் கலகக் குரலை எழுப்பியதால், மா.செ.க்கள் மீதான நடவடிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டாராம்.''”

"எடப்பாடி ரொம்பவே அரண்டுபோயிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி. மு.க.வில் தனக்கு எதிராக நடந்து வரும் குழிபறிப்பு நடவடிக்கைகளால் அரண்டுபோயிருக்கிறார் எடப்பாடி. விரைவில் எடப்பாடியிடமிருந்து அ.தி.மு.க.வைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று காய் நகர்த்து கிற செங்கோட்டையனுக்கு, பின்னால் சசிகலா இருந்து வரு கிறார். சசி மீது விசுவாசம் கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் பலரையும் நீலாங்கரையில் உள்ள ஒரு பீச் ரெசார்ட்டுக்கு சமீபத்தில் அழைத்து ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். சரியான தருணத்துக்கு அவர் காத்திருக்கிறார் என்கிறார்கள்.''”

"தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் உட்கட்சி விவகாரத்தை கராத்தே தியாக ராஜன் பகிரங்கப்படுத்தி இருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, வடசென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில், மைக் பிடித்த கராத்தே தியாகராஜன், "நம் கட்சி யைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், தன்னி லை மறந்து தமிழக முதல்வருடன் கொஞ் சிக் குலவுகிறார். சட்டமன்றத்தில், மத்திய பா.ஜ.க. அரசையும் பிரதமர் மோடியையும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அதை ஆமோதிப்பதுபோல் நயினார் அமர்ந்திருந் தார். அதேபோல, நெல்லையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட ஸ்டா லின், நெல்லை அல்வான்னா உலக அளவில் ஃபேமஸ். மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வான்னா, அதைவிட ஃபேமஸ் என்கிறார். இதையும் அந்த மேடையில் இருந்த நயினார் எதிர்க்கவில்லை. நயினாரின் இந்தப் போக்கைக் கொஞ்சமும் சகிக்க முடியவில்லை'’என்று அட்டாக் செய்தார். இதன்மூலம் தமிழக பா.ஜ.க.வுக்குள் இருக்கும் உட்கட்சி மோதல் அதிரடியாக அம்பலத்திற்கு வந்திருக்கிறது.”

"தமிழக பா.ஜ.க. நிர்வாகிக்கும், ஒன்றிய நிதியமைச்சருக்கும் தெரியாமல் கராத்தே இப்படிப் பேசியிருக்கமாட்டார்னு கமலாலயத் தரப்பே சொல்கிறதே?''”

r

"உண்மைதாங்க தலைவரே.. தமிழக பா.ஜ.க. நிர்வாகிக்கும் ஒன்றிய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமனுக்கும் நெருக்கமான வர் கராத்தே தியாகராஜன் என்பதால், அவர்களின் அனுமதி இல்லாமல் இப்படிப் பேசியிருக்கமாட்டார் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க.வில் வெடித்துள்ள இந்த கலகக்குரல், இனி ஒவ் வொரு கூட்டத்திலும் விசுவரூபம் எடுக்கும் என்றும் கூறுகிறார்கள். இதுகுறித்து கராத்தே தியாகராஜனிடம் நாம் பேசிய போது, ‘’"பிரதமர் மோடியையும், நிர்மலா சீதாராமனையும் ஸ்டாலின் விமர்சித்தபோது, நயினார் நாகேந்திரன் எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அவர் இருப்பதைப் பார்க்கும் போது, அவர் பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்துகொண்டி ருக்கிறார் என்பது உறுதியாகிறது. நயினார், தி.மு.க.வில் இணைவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க.வுடன் நயினார் போட்டுக்கொண்டிருக்கும் பல டீலிங்குகள் இனி ஒவ்வொன்றாக வெளியே வரும்' என்றார் அழுத்தமாகவே.''”

"ஜெ.விடம் இருந்து கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த நகைகளும் சொத்துக்களும் தமிழகம் வந்துவிட்டதே?''”

"ஆமாங்க தலைவரே, வருமானத்துக்கு அதிகமான சொத்துசேர்த்த புகாரின் அடிப்படையில், ஜெ. உயிருடன் இருந்தபோது அவரது போயஸ் கார்டனில் ரெய்டை நடத்தி, பறிமுதல் செய்த பொருட்களையும் சொத்து ஆவணங்களையும், தமிழக லஞ்சஒழிப்புத் துறையிடமே ஒப்படைத்திருக்கிறது கர்நாடக நீதிமன்றம். இதில் ஜெ.வின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் தொடங்கி, போயஸ் கார்டனின் சொத்துப்பத்திரங்கள் வரை அடக்கம்.''

"ஜெ.வின் இந்த சொத்துக்கள் அத்தனையும் தனக்கு வேண்டும் என்று ஜெ.வின் அண்ணன் மகள் தீபா கொடுத்த முறையீட்டைத் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம். தமிழகத்தில் இருந்து வாரி எடுக்கப்பட்ட சொத்துக்களில் ஒரு பகுதி இதன்மூலம் தமிழக அரசின் கஜானாவுக்கே திரும்புகிறது. இதற்கு அடித்தளமாக இருந்த கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவை, மகிழ்வோடு பாராட்டுகிறது தமிழக அரசு வழக்கறிஞர்கள் தரப்பு.''”

’"பா.ஜ.க. தரப்பிலிருந்து என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் இங்கே பகிர்ந்துக்கறேன். தமிழக பா.ஜ.க.வில் மாவட்டத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில்... மாநில தலைவர் பற்றிய நியமன அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வரப்போகிறது என்கிறார்கள்.''”

nkn190225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe