முதல் கட்ட ஊரடங் குக்கு முன்பாக இந்தியாவில் சில நூறு பேருக்கே கொரோனா நோய்த்தொற்று இருந்தது. 5ஆம் கட்ட ஊரடங்கில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊரடங்குக்கு முன் விரல்விட்டு எண்ணும் நிலையிலிருந்த நோயாளிகளின் எண் ணிக்கை இப்போது கால் லட்சத்தைக் கடக்கிறது. உயிரிழப்புகளும் இரட்டை சதம் அடித்த நிலை.
இந்தியாவிலும் தமிழகத்திலும் ஏன் இந்த நிலை என்பது பற்றி பிரதமர் மோடியிடம் கடிதம் வாயிலாக ஓர் அறிக்கை தரப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, சேவைகளின் துணை இயக்குநர்- ஜெனரல் டாக்டர் அனில்குமார், எய்ம்ஸ் சமூக மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் புனித் மிஸ்ரா, எய்ம்ஸ் சமூக மருத்துவ மய்யத்தின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் கபில் யாதவ் உள்ளிட்டோர் கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு கூட்டறிக்கை ஒன்றை அனுப்பி யுள்ளார்கள்.
கொரோனாவைக் கட்டுப் படுத்துவதிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையிலும் காட்டப்பட்ட அலட்சியமே தற்போதைய நிலைக்கு காரணம் என்பதையும், நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், அதிகாரிகளை மட்டுமே நம்பாமல் மருத்துவத் துறையினரின் முழுமையான பங்களிப்பிலேயே அரசாங்கத்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா நோயாளிகளுக்காக மாநகராட்சி தொடங்கி நகராட்சிகள் வரை தாராளமாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், சமூகப் பரவல் நிலை நோக்கி கொரோனா பாதிப்பு சென்றுள்ள நிலையில், நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. புதிதாக உருவாக்கப்படும் படுக்கை வசதிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி கிடைப்பதால், அது குறித்து கணக்குப் போடப்படுகிறது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வீட்டு வேலைத் தொழிலாளர்கள் போன்றவர்களிடம் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், “ஒரு பத்து நாளைக்கு அந்த வார்டில் வந்துபடுத்திருங்க. மூணு வேளை சத்தான சாப்பாடு உண்டு. டிஸ்சார்ஜ் ஆகும் போது 1000 ரூபாய் தர்றோம்.லாக்டவுனில் வேலை இல்லாமல் இருக்கிறதுக்கு இது நல்லது தானே’’என்று ஆள் பிடிக்கும் வேலை நடக்கிறது. ஆனால், கொரோனா பெட்டில் படுப்பதா என்ற பயத்தின் காரணமாக மக்கள் அங்கு செல்லத் தயங்குகிறார்கள்.
முறையான பரிசோத னைகள் இல்லை, சரியான கட்டுப்பாடுகள் இல்லை. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிறது. இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் என்று காட்டுவதற்காக முதல்வர் அலுவலகம், சுகாதாரத்துறை அமைச்சகம், உள்ளாட்சி நிர்வாகம் மூன்றும் சேர்ந்து, ஆயிரம் ரூபாய்க்கு ஆள் பிடிக்கும் வேலையைத் தொடங்கி, மத்திய அரசின் பணத்தைப் பங்கு பிரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என் கிறார்கள் உண்மை அறிந்தவர்கள்.
-கீரன்