சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் மற்றும் இன்ஸ் பெக்டர் ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைது செய்து சிறையில் அடைத் துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் "யாரைக் காப்பாற்ற காவல்துறை இவ்விவகாரத்தை மூடிமறைக்கப் பார்க்கிறது?' என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி எழுப்பினார். தற்போது அவ்விவகாரத்தில், அ.தி.மு.க. 103வது வட்டச் செயலாளர் ப.சுதாகர் என்பவர் சம்பந்தப்பட்டி ருப்பதும், அவர் கைது செய்யப்பட்டிருப்பதும் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. இதையடுத்து, சுதாகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த பத்து வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியைப் பரி சோதித்துப் பார்த்த மருத்துவர், அதிர்ச்சி யடைந்து அந்த குழந்தைக்கு பாலியில் வன் கொடுமை நிகழ்ந்திருப்பதை உறுதி செய்துள் ளார். உடனடியாக அந்த சிறுமியிடம் பெற் றோர் விசாரித்ததில், சிறுமியின் பக்கத்து வீட்டு சிறுவனும், வாட்டர் கேன் போடும் சதீஷ் என்பவனும் செய்திருப்பதாகத் தெரியவந்த தும் உடனடியாக அண்ணா நகர் மகளிர் காவல் நிலை யத்திற்கு புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அவர்களை அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் மற்றும் இன்ஸ் பெக்டர் ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைது செய்து சிறையில் அடைத் துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் "யாரைக் காப்பாற்ற காவல்துறை இவ்விவகாரத்தை மூடிமறைக்கப் பார்க்கிறது?' என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி எழுப்பினார். தற்போது அவ்விவகாரத்தில், அ.தி.மு.க. 103வது வட்டச் செயலாளர் ப.சுதாகர் என்பவர் சம்பந்தப்பட்டி ருப்பதும், அவர் கைது செய்யப்பட்டிருப்பதும் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. இதையடுத்து, சுதாகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த பத்து வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியைப் பரி சோதித்துப் பார்த்த மருத்துவர், அதிர்ச்சி யடைந்து அந்த குழந்தைக்கு பாலியில் வன் கொடுமை நிகழ்ந்திருப்பதை உறுதி செய்துள் ளார். உடனடியாக அந்த சிறுமியிடம் பெற் றோர் விசாரித்ததில், சிறுமியின் பக்கத்து வீட்டு சிறுவனும், வாட்டர் கேன் போடும் சதீஷ் என்பவனும் செய்திருப்பதாகத் தெரியவந்த தும் உடனடியாக அண்ணா நகர் மகளிர் காவல் நிலை யத்திற்கு புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அவர்களை அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி, வழக்கு பதிவு செய்ய விடாமல் அலைக்கழித்ததோடு, அவ்விவகாரத் தில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரது பெயரை நீக்கும்படி போலீசார் அவர்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் தனக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதன்பிறகு விவகாரம் பெரிதாகவே, இந்த குற்றத்தில் தொடர்புடைய சதீஷ் மற்றும் 14 வயது சிறுவனை போக்சோ வில் கைது சிறையில் அடைத்தனர்.
சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையில் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்தது. மேலும் இந்த வழக்கில் துணை ஆணையர் சிநேகபிரியா மற்றும் மகளிர் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் எதிர் மனுதாரராக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு இன்ஸ்பெக்டர் ராஜி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து, விசாரிக்க உத்தரவிட்டது. அந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் ராஜியை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்காததாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாலும் ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதோடு, போலியான குற்றவாளியை கைது செய்ய வைத்த அ.தி.மு.க. வட்டச் செயலா ளர் சுதாகரை சிறப்பு புலனாய்வுக் குழு போலீ சார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறைச்சாலையில் அடைத்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. வட்டச்செயலாளர் சுதாகரின் மனைவி அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். சிறைக்கு செல்லும் ரவுடிகளை வெளியில் கொண்டு வருவதும், அவர்களை வைத்து கட்டப்பஞ்சா யத்து செய்வதும், யாராவது புது வீடு கட்டினால் மிரட்டி வசூலிப்பதுமான மோசடி வேலைகளைத்தான் இவர்கள் இருவரும் செய்து வந்திருக்கிறார்கள். இப்படியான கட்டப்பஞ்சா யத்து வசூல் மூலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்த சுதாகர், தன் மனைவியின் மூலமாக கோகுலஇந்திராவை நட்பாக்கி, பொன்னையன் மூலமாக இருவரும் கட்சிப் பொறுப்புகளைப் பெற்றதோடு, கட்சியில் அவர் களின் விசுவாசிகளாகவும் வலம் வந்துள்ளனர்.
இப்படி அண்ணா நகர் பகுதியில் அ.தி.மு.க.வில் வளர்ச்சிகண்ட சுதாகருக்கு ஆல் இன் ஆலாக அனைத்து உதவிகளையும் செய்து தருபவன்தான் சதீஷ். இவன் அந்த பகுதியி லுள்ள வீடுகளுக்கு வாட்டர் கேன் சப்ளை செய்துவந்தான். அரசியலைப் பொறுத்தவரை சுதாகர் சொல்லும் செயலையெல்லாம் செய்துகொடுத்து சுதாகரின் நம்பிக்கைக்குரியவ னாக இருந்துள்ளான்.
அதுபோக, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கூவம் ஓரமாக கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களிடம் மாமூல் வசூல் செய்து, அவர்களைப் பிடிக்க காவல் துறையினர் வரும்போது அவர்களை அலர்ட் செய்து காப் பாற்றும் வேலையையும் சதீஷ் செய்திருக்கிறான். இப்படி அனைத்திலும் கெத்துக்காட்டியவன் தான் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அதோடு, இவ்விவகாரத்தை விசாரித்த அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் ராஜியிடம் பேரம் பேசி அவ்விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்துள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோ ரிடம் நாம் பேசியபோது, "தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த இந்த குழந்தையை இப்படி செய்ததை நினைத்து தினம் தினம் மனம் நொந்துகிடந்தோம். தற்போது இவர்களின் கைதுக்கு பிறகு சற்று மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. இதுதொடர்பாக நாங்கள் காவல் நிலையத்தில் புகாரளித்த போது எங்களையே போலீசார் அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தினார்கள். இதில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரின் பெய ரையும் நீக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். எங்களை அனைத்து போலீசாரும் அப் போது ஏளனமாகப் பார்த்தனர். ஆனால் தற்போது நாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எனவும், உண்மையை மறைக்க போலீசார் முயன்றனர் என்பதும் வெளி உலகத்துக்கு தெரியவந்துள்ளது. இனியாவது இதுபோன்ற குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படாமல், போலீசார் மனசாட்சியோடும், மனிதாபிமானத் தோடும் நடக்க வேண்டும். இதுபோன்ற கொடுமை வேறெந்த குழந்தைக்கும் இனி நடக்கவே கூடாது'' என்று புலம்பினார்கள்.
இவ்விவகாரம் குறித்து கடந்த புதனன்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "அண்ணாநகர் வழக்கைப் பொறுத்தவரையில், பத்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களைத் தவறாக நடத்தியதாகவும், குற்றம் செய்த சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அவ்வழக்கு கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் குற்றஞ்சாட்டப்படும் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ. விசா ரணைக்கு மாற்றியது.
இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை செய்த மேல்முறையீட்டில், சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்ற முடிவிற்கு வந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு காவல் துறையிலிருந்தே மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு இப்போது இந்த வழக்கில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் கைது செய்து, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். குற்றச்செயல் எதுவாக இருந்தா லும், குற்றவாளி யாராக இருந்தாலும், நேர்மை யாக, நியாயமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்துவரும் இந்த அரசைக் குறை கூறாமல், பெண்களின் பாதுகாப்பிற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை அனைவரும் இந்த அரசுக்கு வழங்கிட வேண்டும்'' என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
-சே