"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.''”
"ஆமாம்பா, தமிழ்நாடு தொடங்கி இந்தியா முழுதும் முதல்வரின் பிறந்தநாள் எதிரொலித் ததே?''”
"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை மார்ச் 1ஆம் தேதி, தமிழகம் முழுக்க தி.மு.க.வினர், கோலா கலமாகக் கொண்டாடினார்கள். முதல்வருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி தொடங்கி, தேசிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவிக்க, தமிழக அரசியல் தலைவர்களும் அனைத்துத் தரப்பு பிரமுகர்களும் அவரை மனதார வாழ்த்தி இருக்காங்க. வழக்கம்போல் தி.மு.க. சீனியர்கள், அமைச்சர்கள், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசின் உயரதிகாரிகள், தொண்டர்கள் என அனைவரின் வாழ்த்துகளையும் அறிவாலயத்திலும், வீட்டிலு மாக மாறி, மாறி மகிழ்வோடு பெற்றுக்கொண் டார் ஸ்டாலின். அமைச்சர்கள் மா.செ.க்கள்னு ஒவ்வொருவரும் மக்கள் நலத் திட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என அவரது பிறந்தநாளைக் கொண்டாடித் தீர்த்துவருகிறார்கள். பிறந்தநாள் செய்தியாக, ’இந்தியைத் திணிக்கும் முயற்சியைத் தடுப்பதும், தமிழகத்தின் உரிமையை காப்பதும்தான் நம்முடைய ஒரே இலக்கு! இதற்காக, தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்’ என்பதையே உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின். கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தமிழகம் முழுக்க தொடருது.''”
"முதல்வரை வாழ்த்தியோர் நடுவே மு.க.அழகிரியையும் பார்க்க முடிந்ததே?''”
’"ஆமாங்க தலைவரே, முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அண்ணனான மு.க. அழகிரியும் அவரை சந்தித்து, தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார். தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்ட பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அழகிரி, கலைஞர் மறைவுக்கு பிறகு, கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் பலமாக எதிர்பார்த்தனர். ஆனால், அப்படியொரு வைபவமே நடக்கவில்லை. இந்தச் சூழலில் அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, நிலைகுலைந்து போன அழகிரியைச் சந்தித்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின். தற்போது தயாநிதி ஓரளவு குண மடைந்து, மேல்சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இருந்துவருகிறார். அவரது உடல்நலம் முழுமையாகத் தேறிவிட்டது. அவரை அருகில் இருந்து பார்த்துக்கொண்ட அழகிரி, சமீபத்தில்தான் சென்னை வந்தார். இப்படிப்பட்ட சூழல்களால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவரை.. சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து, மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர நினைக்கிறாராம் ஸ்டாலின். அதற் காகத்தான், ஸ்டாலினை பிறந்தநாளில் அழகிரி சந்தித்தார் என்கிறார்கள். விரைவில் அப்படியொரு செய்தி வரும் என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள்.''”
"முதல்வர் கூட்டும் ஆலோசனைக் கூட்டத் தில் அ.தி.மு.க., பா.ம.க.வெல்லாம் கலந்துக்குதே?''”
"தொகுதி மறு சீரமைப்பு என்கிற பேரில் தமிழகத்தின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக் கையைக் குறைக்க, ஒன்றிய அரசு திட்டமிடு வதைத் தடுத்தும் நிறுத்தும் நோக்கில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மார்ச் 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கூட்டியிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சி யான அ.தி.மு.க. தொடங்கி, கடந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் த.வெ.க. வரையில் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வோம் என எடப்பாடி சொல்லி யிருக்கிறார். அதற்கான மகிழ்ச்சியை ஸ்டாலினும் வெளிப்படுத்தியிருக்கிறார். அ.தி.மு.க.வைத் தொடர்ந்து பா.ம.க.வும். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முடிவை எடுத்திருக்கிறது. இந்த நிலையில்.. நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. ஆகியவை கலந்துகொள்ளவில்லை என அறிவித்துவிட்டன.''
"நாங்கள் இந்த விசயத்தில் எடுத்த முடிவை அதன் கூட்டணிக் கட்சியாக இருக்கும் நீங்களும் எடுக்கவேண்டும் என்று பா.ம.க.வுக்கு பா.ஜ.க. தகவல் அனுப்பியது. எனினும் அதை ஏற்க மறுத்துவிட்டார் டாக்டர் ராமதாஸ். இதெல் லாம் டெல்லியை அதிர்ச்சியடைய வைத்திருக் கிறதாம்.''”
"ஆமாம்பா, நானும் கேள்விப்பட்டேன்.''”
“"இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம் பா.ஜ.க. பேசிய நிலையில், அதன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் வாசன். இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா? வேண்டாமா? என்று த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசித்தார். புஸ்ஸி ஆனந்த், ஜான், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் நாம் கலந்து கொள்ளலாம் என வலியுறுத்தி யுள்ளனர். இன்னும் சிலர், வேண்டாம் என்றனர். அதனால் விஜய் என்ன முடிவெடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு அங்கே நிலவுகிறது. அதாவது, கலந்துகொள்வதாக இருந்தால், நீங்கள் கலந்து கொள்வதுதான் சரியாகும். நீங்கள் கலந்து கொண்டால் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்படுத்தும் பரபரப்பைவிட, நீங்கள் கலந்து கொள்வதுதான் ஏக பரபரப்பை உருவாக்கும் என்று சிலர் விஜய்க்கு உசுப்பேத்தி விட்டிருக்கிறார்களாம்.''
"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலு மணியின் போக்கு, கொங்கு மண்டல அ.தி.மு.க.வினரையும் மாற்றிவருகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தற்போது அ.தி.மு.க. மாஜி மந்திரி களான செங்கோட்டையன், வேலு மணி மற்றும் ஓ.பி.எஸ். உள்ளிட் டோர் சசிகலாவுடன் சேர்ந்து தனி அணியாக இயங்குகிறார்கள். எடப்பாடியுடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால், அவர் மீது கடும் எரிச்சலில் இருக்கும் வேலுமணி, அவருக்குத், தான் கொடுத்து வந்த முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டாராம். குறிப்பாக, தற்போது நடக்கவிருக்கும் தன் மகன் திருமணவிழாவில் அதை நடத்திவைக்க எடப்பாடி யை அவர் அழைக்கவில்லை. சம்பிரதாயத்திற்காக, அவருக்கு 10ஆம் தேதி நடக்கும் திருமண வர வேற்புக்கான அழைப்பிதழை மட்டுமே கொடுத் திருக்கிறாராம். வேலுமணி, பா.ஜ.க. பிரமுகர் களுக்கு மட்டுமே ஓடி, ஓடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து வருவதைப் பார்க்கும் கொங்கு பகுதி அ.தி.மு.க.வினர், விரைவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமையும்போல் இருக்கிறது என்று பேச ஆரம்பித்ததோடு, ஜெ.வில் ஆரம்பித்து, எடப்பாடி வரை கடுமையாக விமர்சித்துவந்த பா.ஜ.க.வினரு டன், இப்போது நட்பு பாராட்டத் தொடங்கி விட்டார்களாம்.''”
"இந்துத்துவாவின் பின்னணியில் நாம் தமிழர் சீமான் இயங்குவதாகக் குற்றம் சாட்டப்படுகிறதே?''’
"சீமான் விவகாரம் சீரியஸாகி வருகிறது. இதற்கிடையே அவருக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கிலிருந்து அவரைக் காப்பாற்ற ஆடிட்டர் குருமூர்த்தியும் சில ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களும் களமிறங்கி பரபரப்பாக வேலை செய்கிறார்களாம். அதேபோல் பா.ஜ.க. பிரமுகர்களின் முன்னெடுப் பால், வடநாட்டு இந்தி மீடியாக்கள் பலவும், தமிழ் நாட்டில் இருக்கும் தி.மு.க. அரசு, மக்களுக்காகக் குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது மோசமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அவரது வீட்டில் போலீஸை வைத்து பிரச்சினை களைச் செய்கிறது என்றெல்லாம் செய்தி வெளி யிட்டு வருகின்றன. இவையெல்லாம் சீமானின் இந்துத்துவா பின்புலத்தை அடையாளப்படுத்து கின்றன என்கிறார்கள் பெரியாரியவாதிகள்.''”
"பேசத் தெரியாமல் பேசியதால் மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, ரொம்பவே அதிரவைக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கும் நிலையில், அதுகுறித்த கவலையைத்தான் பொறுப்பில் இருப்பவர்கள் வெளிப்படுத்தியிருக் கணும். என்ன நடந்ததுன்னா, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்குப் பக்கத்தில் இருக்கும் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயதுப் பெண் குழந்தை, அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தது. கடந்த 24 ஆம் தேதி அங்கன்வாடிக்குச் சென்ற அந்த குழந்தை, அங்க திடீர்னு காணலையாம். பதறிப்போன அங்கன்வாடி அமைப்பாளரும், சமையலரும், குழந்தையைத் தேடி அலைஞ்சிருக்காங்க. அப்ப, அந்த அங்கன்வாடிக்கு அடிக்கடி வந்துபோகும் ஒரு 16 வயது சிறுவன், புதர்மண்டிய பகுதியில் ரத்தக் காயத்தோடு கிடந்த அந்த குழந்தையைக் கண்டுபிடிச்சதா தூக்கிட்டு வந்திருக்கான். அவன் மீது சந்தேகமாகி, அவனிடம் கடுமையாக விசாரித்த போதுதான் அவன், ’சாக்லேட் வாங்கிக் கொடுத்து தவறாக நடக்க நினைச்சேன். குழந்தை சத்தம் போட்டு அழுததால் கல்லால் அடித்துவிட்டுத் தப்பி ஓடிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்து அனைவரையும் மிரள வச்சிருக்கான். உடனே போலீஸுக்குத் தகவல் போக, அந்த சிறுவன் மீது போக்ஸோ மற்றும் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செஞ்சி, அவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்த மையத்தில் கொண்டுபோய் அடைச்சிருக்காங்க.''”
"கொடுமையா இருக்கேப்பா! இந்த விவகாரத்தில் கலெக்டர் எங்கே வந்தாரு?''”
"இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, சட்டம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி முகாமை நடத்தியது. அதில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினும் கலெக்டர் மகாபாரதி உள்ளிட்டவர்களும் கலந்துக்கிட்டாங்க. அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, அந்த குழந்தை விவகாரத்தில் "எனக்குக் கிடைத்த ரிப்போர்ட்டின்படி, குழந்தை தப்பாக நடந்திருக் கிறது. அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் காறித் துப்பியதுதான், இந்த சம்பவத்திற்கு காரணம். எனவே ஒரு விசயத்தை இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்'’என்ற ரீதியில் அலட்சியமாகப் பேசி, நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் திகைக்க வச்சிருக்கார். இதனால் அவருக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்தான்... அவரை அதிரடியாக அங்கிருந்து மாற்றிவிட்டு, ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக நியமித்திருக் கிறது தமிழக அரசு.''”
"எங்க சூப்பர் ஸ்டாரை, நடிகர் விஜய் சீண்டிப்பார்க்கிறார்னு ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, நடிகர் ரஜினிகாந்த் லிலதா தம்பதியருக்குத் திருமணமாகி 44ஆண்டுகள் ஆகிறதாம். அதனால் அவர்களின் திருமணநாளான பிப்ரவரி 26ஆம் தேதி, அவரது ரசிகர் மன்றத்தினர் அதைக் கோலா கலமாக கொண் டாடினார்கள். குறிப்பாக, வேலூர் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இரு நூறுக்கும் மேற் பட்ட ரசிகர்கள், மாவட்டச் செய லாளர் சோளிங்கர் ரவி தலைமையில், ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளோடு, தங்கத்தேர் இழுத்தனர். பெண்களுக்கு இலவச சேலை, தாலிச்சரடு போன்றவற்றையும் வழங்கினர். அப்போது அவர்கள் ’சூப்பர் ஸ்டாரின் திருமண நாளையும் நாங்கள் தொடர்ந்து கொண் டாடிவருகிறோம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது 2024 பிப்ரவரி 2ஆம் தேதி. அந்த கட்சியின் ஆண்டு விழாவை அந்தத் தேதியில்தானே அவர் கொண்டாடியிருக்கணும். ஆனால் எங்கள் சூப்பர் ஸ்டாரின் திருமண நாளில். தன் கட்சியின் 2ஆம் ஆண்டு விழாவை விஜய் கொண்டாடியிருக்கார். சூப்பர் ஸ்டாரின் திருமணநாளை இருட்டடிப்பு செய்யவே நடிகர் விஜய் இப்படி செய்திருக்கிறார். இதன் மூலம் எங்கள் தலைவரை அவர் சீண்டுவதுதான் எங்களுக்கு எரிச்சலைத் தருகிறது’ என்றார்கள் கொதிப்பாக.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். இந்த மாத இரண்டாம் வாரத்தில் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டவிருக்கிறார் நடிகர் விஜய். பொதுக்குழுவுக்கு பிறகு, பூத் கமிட்டி மாநாட்டையும் பிர மாண்டமாக நடத்துகிறாராம். அதன் பின், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத் தில் எந்த குளறுபடிகளும் வராமல் இருக்கும் வகையில், பயணத் திட்டத்தை வகுக்கவேண்டும் என்று புஸ்ஸி ஆனந்திற்கு உத்தரவிட்டி ருக்கிறாராம் விஜய்.''’