தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' எனும் பேரில் பிரச்சாரப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக திருச்சி துறையூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபடவிருந்தார். அவரை வரவேற்பதற்காக கூட்டத்தைக் காட்டவேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க. நிர்வாகி கள் முன்னதாகவே சாலையின் இருபக்கமும் பொதுமக்களை திரட்டி நீண்டநேரம் காத்திருக்கச் செய்திருந்தனர்.
அச்சமயத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் மயங்கிவிட்ட தாகக் கூறி அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார்கள். அப்படி அப் பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ், அ.தி.மு.க.வினர் குழுமியிருந்த இடத்துக்கு வந்தபோது, அ.தி.மு.க.வினர், ஏற்கெனவே எடப்பாடி பேசியிருந்த பேச்சை மனதில்கொண்டு, அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தங்கள் பலத்தை காட்ட முற்பட்ட னர். உடனடியாக அந்த ஆம்புலன்ஸை குறுக்கே புகுந்து
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' எனும் பேரில் பிரச்சாரப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக திருச்சி துறையூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபடவிருந்தார். அவரை வரவேற்பதற்காக கூட்டத்தைக் காட்டவேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க. நிர்வாகி கள் முன்னதாகவே சாலையின் இருபக்கமும் பொதுமக்களை திரட்டி நீண்டநேரம் காத்திருக்கச் செய்திருந்தனர்.
அச்சமயத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் மயங்கிவிட்ட தாகக் கூறி அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார்கள். அப்படி அப் பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ், அ.தி.மு.க.வினர் குழுமியிருந்த இடத்துக்கு வந்தபோது, அ.தி.மு.க.வினர், ஏற்கெனவே எடப்பாடி பேசியிருந்த பேச்சை மனதில்கொண்டு, அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தங்கள் பலத்தை காட்ட முற்பட்ட னர். உடனடியாக அந்த ஆம்புலன்ஸை குறுக்கே புகுந்து மறித்து, தங்களைத் தாண்டிச் செல்லவிடாமல் தடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்திலை வசைபாடியபடி அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட, தான் வந்த காரணத்தை ஓட்டுநர், அவர்களிடம் விளக்கியிருக்கிறார். இந்த ஆம்புலன்ஸும் நோயாளியில்லாமல் இருப்பதால் ஆத்திரம் தலைக்கேறிய அ.தி.மு.க.வினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சொன்னதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், ஓட்டுநரோடு வம்பு பண்ணி அவர் அணிந்திருந்த வெள் ளைநிற மேல்கோட்டை பிடித்து வலுவாக இழுத்த தில் அவருடைய தோள் பட்டை இறங்கி கையை தூக்குவதற்கு இயலாத படியானது. அ.தி.மு.க. வினரில் இன்னொரு தரப்பு ஆம்புலன்ஸின் பின்புறக் கதவை திறந்து வன்முறை யில் ஈடுபட்டதில் ஆம் புலன்ஸின் உள்ளிருந்த டெக்னீஷியன் ஹேமலதா வுக்கும் காயம் ஏற்பட்டது. அ.தி.மு.க.வினரின் தாக்குத லால் காயமடைந்த துறையூரை சேர்ந்த ஓட்டுநர் செந்தில், கலிங்குடை யான்பட்டியை சேர்ந்த டெக்னீஷியன் ஹேமலதா ஆகியோர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இதில் ஹேமலதா, திருமணமாகி 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. பிரமுகர்கள் 14 பேர் மீது, பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, 108 அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் கர்ப்பிணியான பெண்மணியை தாக்கியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி துறையூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அமைதி பாலு, துறையூர் நகர்மன்ற உறுப்பினர் தீனதயாளன், வடக்கு ஒன்றியச் செயலாளர் பொன் காமராஜ், வினோத் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் 10 பேர் மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆம்புலன்ஸ் மீதான தாக்குதலுக்கு காரணகர்த்தா எடப்பாடி பழனிச்சாமியே ஆவார். அவர் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் குறித்து, "நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்துவருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன் ஸை அனுப்பி இடையூறு செய்து வருகிறார்கள். இப்படியொரு கேவலமான செயலை இந்த அரசாங் கம் செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. ஆம்புலன்ஸ் நம்பரை நோட் பண்ணு, ஆம்புலன்ஸ் டிரைவர் யாருன்னு நோட் பண்ணுங்க... இனி பேஷண்ட் இல்லாத ஆம்புலன்ஸ் எங்கள் கூட்டத்துக்குள் வந்தால் அந்த ஆம்புலன்ஸின் டிரைவரைத்தான் பேஷண்டாக அனுப்பிவைப்போம்'' என்று 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மீது வன்முறை யை ஏவும்படி பேசியதால்தான், தற்போது ஓட்டுநர் மற்றும் டெக்னீஷியன் மீது இப்படியான மோசமான தாக்குதல் நடந்துள்ளது. இது அபாயகரமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறு கையில், "ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தடுத்து நிறுத்தி அவரது அடையாள அட்டையைப் பறித்து அ.தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர். அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல் அ.தி.மு.க. பிரச்சாரம் தொடங்கும்முன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். எடப்பாடி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றவருக்கு மயக்கம் ஏற்பட்டதால்தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது. விஸ்வா என்பவர் மயங்கி விழுந்ததன் காரணமாகவே ஆம்புலன்ஸை அழைத்ததாக அங்கிருந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஓட்டுநரை நேரில் சந்தித்தபோது, "நான் பேசுவதை அவர்கள் யாரும் காதில் கேட்காமல், என்னுடைய சட்டையைப் பிடித்து இழுத்ததில் என்னுடைய தோள்பட்டை கீழே இறங்கி வலி அதிகமாகி விட்டது. பின்னர் காவல்துறையினர் வந்து எங்களை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்த பின்னர், மயங்கி விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக் காக அழைத்துச் சென்றோம்'' என்று கூறினார். எந்த எடப்பாடி ஆம்புலன்ஸுக்கு எதிராகப் பேசினாரோ, அவரது பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கியவரை காப்பாற்ற வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீதே தாக்குதல் நடத்திய கொடுமையை என்னவென்பது?!