Advertisment

துண்டுத் துண்டாகும் அ.தி.மு.க! -மைத்ரேயன்

புதுப்பிக்கப்பட்டது
mythiran

 

மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தது பல விவாதங்களை அ.தி.மு.க.வில் உருவாக்கியுள்ளது. 2017ல் ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். இணைந்தபோது, "அணிகள் இணைந்தது மனங்கள் இணையவில்லை'’ என மைத்ரேயன் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அந்த நிலைமை அ.தி.மு.க.வில் இன்றளவும் மாறவில்லை. அதனால்தான் "போன வாரம் அன்வர் ராஜா, நேற்று கார்த்திக் தொண்டைமான், இன்று நான் என ஒவ்வொருவ ராக தி.மு.க.வில் இணைந்து கொண்டிருக் கிறோம்'’என்கிறார் மைத்ரேயன். 

Advertisment

"“அ.தி.மு.க.வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிகள் இருக்கின்றன. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்  ஒவ்வொருவரும் குறுநில மன்னர் களாக செயல்படுகிறார்கள். அவர்கள் தலைமைக் கழக நிர்வாகிகளை மதிப்பதேயில்லை. எடப்பாடி பழனிச்சாமி போகும் இடமெல்லாம் வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற தலைவர்கள்  கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். காசுக்குக் கூட்டப்படும் இந்த கூட் டத்தைப் பார்த்து எடப்பாடி புளகாங்கிதப்படு கிறார். "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல் சிறகை விரித்தது' என்பதைப் போல தன்னை ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆ

 

மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தது பல விவாதங்களை அ.தி.மு.க.வில் உருவாக்கியுள்ளது. 2017ல் ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். இணைந்தபோது, "அணிகள் இணைந்தது மனங்கள் இணையவில்லை'’ என மைத்ரேயன் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அந்த நிலைமை அ.தி.மு.க.வில் இன்றளவும் மாறவில்லை. அதனால்தான் "போன வாரம் அன்வர் ராஜா, நேற்று கார்த்திக் தொண்டைமான், இன்று நான் என ஒவ்வொருவ ராக தி.மு.க.வில் இணைந்து கொண்டிருக் கிறோம்'’என்கிறார் மைத்ரேயன். 

Advertisment

"“அ.தி.மு.க.வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிகள் இருக்கின்றன. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்  ஒவ்வொருவரும் குறுநில மன்னர் களாக செயல்படுகிறார்கள். அவர்கள் தலைமைக் கழக நிர்வாகிகளை மதிப்பதேயில்லை. எடப்பாடி பழனிச்சாமி போகும் இடமெல்லாம் வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற தலைவர்கள்  கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். காசுக்குக் கூட்டப்படும் இந்த கூட் டத்தைப் பார்த்து எடப்பாடி புளகாங்கிதப்படு கிறார். "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல் சிறகை விரித்தது' என்பதைப் போல தன்னை ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆராக வும் கற்பனை செய்துகொண்டு எடப்பாடி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார். அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு கொள்கை இல்லை. அ.தி.மு.க.வில் முடிவெடுக்கக்கூடிய தலைமையே இல்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட் டணி அமைந்தால் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுமா? அல்லது அந்த ஆட்சி மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமா, அறநிலையத்துறை அரசிடம் இருக்குமா அல்லது கோவில்கள் தனியார் தேவஸ்தானம் வசம் ஒப்படைக்கப்படுமா? -இதுபோன்ற முக்கியமான பிரச்னைகளில் இரு கட்சிகளிடையே கடுமையான கருத்து வேறுபாடு கள் இருக்கின்றன. 

தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த போது ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக் கப்பட்டு அது தேசிய அளவில் செயல்பாட்டில் இருந்தது. அதுபோல ஒரு திட்டம் அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது இல்லை. அமித்ஷா சொல்வதுபோல் கூட்டணி ஆட்சி அமைந்தால் அ.தி.மு.க. ஆட்சியின் ‘சுவிட்ச் போர்ட்’ டெல்லியில் தான் இருக்கும். அந்த ஆட்சியால் ஒன்றும் செய்ய முடியாது. பொருந்தா கூட்டணி, பொறுப்பில்லாத தலைமையால் போகாத ஊருக்கு வழிதேடிச் செல்லும் அ.தி.மு.க.விலிருந்து என்னைப்போல் பலர் வெளியேறி தி.மு.க.வில் இணைவார்கள். இன்னும் எட்டுமாத காலம் இந்தநிலை மேலும் தொடரும். அ.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை. அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க. பலரை வெளியேற்றியுள்ளது. இது பா.ஜ.க.வையும் பலவீனப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்கிற ஓட்டைக் கப்பலிலிருந்து அது மூழ்குவதற்கு முன்பே நான் வெளியேறி விட்டேன்''’என்கிறார் மைத்ரேயன். 

mythiran1

Advertisment

“அ.தி.மு.க.விலிருந்து வெளியேறுவார் என செய்தித்தாள்களில் பேசப்பட்ட தங்கமணி, "நான் வெளியேற மாட்டேன்'’ என அறிக்கை கொடுத்துள் ளார். ஆனால், செல்லூர் ராஜுவிடம் "தங்கமணி போல் அறிக்கை கொடுங்க'ள் என அறிக்கை கேட்ட போது, அவர் தர மறுத்துவிட்டார். செல்லூர் ராஜுவை தனது காரில் ஏற்றாமல் எடப்பாடி சமீபத்தில் அவமானப்படுத்தினார். அதற்குக் கார ணம் அவர் தி.மு.க.விற்கு செல்லப் போகிறார் என எடப்பாடிக்கு வந்த செய்திகள்தான். சமீபத்தில் செல் லூர் ராஜு வீட்டிலிருந்து கோடிக் கணக்கான ரூபாய் கொள்ளையடிக் கப்பட்டது. அதை தமிழக போலீசார் மீட்டுக் கொடுத்தனர். மதுரை அமைச்சர் மூர்த்தியின் ஆதரவால் மீட்டுக் கொடுக்கப்பட்ட பணத்தின் காரணமாக செல்லூர் ராஜு தி.மு.க.விற்கு செல்லப்போகி றார் என்கிற செய்தி பெரிதாக எழுந்ததால், எடப்பாடி அவரை தனது காரில் ஏற்ற மறுத்துவிட்டார். "மைத்ரேயனைத் தொடர்ந்து கட்சி மாறப்போகும் அடுத்த வி.ஐ.பி. செல்லூர் ராஜுதான்'’என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள். 

“செல்லூர் ராஜு மட்டுமல்ல.. ஆர்.பி.உதய குமார், டி.ஜெயக்குமார் எனப் பலரும் பா.ஜ.க. கூட்டணி அமைந்த பிறகு கட்சித் தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். கட்சியில் நிலவும் அதிருப்தியை சசிகலா தலைமை யில் ஒரு டீம் ஒருங்கிணைத்து வருகிறது. அவர்கள் எடப்பாடி தலைமைக்கு எதிராக ஒரு பெரிய போர்க்குரல் எழுப்ப சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டி ருக்கிறார்கள். எடப்பாடியைத் தவிர வேறு யாரையும் அந்தக் கட்சி நிர்வாகிகள் மதிப்பதில்லை. ஒற்றைத் தலைமையின் அடையாளமாக இது கருதப்பட்டாலும் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்கிற குரல் அ.தி.மு.க.வில் ஓங்கி ஒலிக்கிறது. 

அனைவரையும் எடப்பாடி தலைமையிலான ஒரு டீம் அமைதிப்படுத்தி ‘"2026-ல் நாம் ஆட்சிக்கு வருவோம் அதுவரை பொறுமை காத்திருங்கள்'’ என சொல்லி வருகிறது. அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் ஒருவிதமான குழப்ப நிலை நிலவுகிறது. ஓ.பி.எஸ். விவகாரம் உட்பட பல முக்கியமான விவகாரங்கள் கட்சியில் சீரியஸ் ஆகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதை யெல்லாம் களைய ஒரு பெரிய மாநாடு ஒன்றை நடத்த அ.தி.மு.க. திட்ட மிட்டுள்ளது. விரைவில் அந்த மாநாட்டுக்கான அறிவிப்பு வரும் என் கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

தற்பொழுது கழுவுகிற மீன்களில் நழுவுகிற மீனாக தி.மு.க.வில் சங்கமமாகும் அ.தி.மு.க.வினரை எப்படித் தடுப்பது என்பதே அ.தி.மு.க. தலைமை         யின் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. "அ.தி.மு.க. தலைவர்கள் பலர் நல்ல சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்                    தால் அவர்களும் தி.மு.க.வில் இணைவார்கள்' ’என்கிறார் மைத்ரேயன். “அன்வர்ராஜா, மைத்ரேயன் போன்ற அ.தி.மு.க. பிரமுகர்களை தி.மு.க.வும் வரவேற்றிருக்கிறது. "இந்தப் போராட்டம் எங்குபோய் முடியும் என்பதில்              தான் அ.தி.மு.க.வின் எதிர்காலம் இருக்கிறது'’ என்கிறது அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரங்   கள்.  

 

nkn160825
இதையும் படியுங்கள்
Subscribe