Advertisment

அ.தி.மு.க தொடக்க நாள் விழா! -டோக்கன் கொடுத்த சசிகலா!”

sasikala


நான்தான் அ.தி.மு.க.வின் நிரந் தரப் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டி ருக்கும் சசிகலா கட்சியின் 54-வது ஆண்டு தொடக்க விழாவை, அக் டோபர் 17-ஆம் தேதி பெரிய நகரங்களிலோ, அரங்கங்களிலோ பிரம்மாண்டமாக நடத்தவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்குலத்தோர்கள் அதிகமுள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய வாணக்கண்காடு கிரா மத்திலுள்ள மாரியம்மன் கோயில் திடலில் 600 பேரோடு நடத்தி முடித்துள்ளார். 17-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் சசிகலா பங்கேற்று சிறப்புரையாற்றி


நான்தான் அ.தி.மு.க.வின் நிரந் தரப் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டி ருக்கும் சசிகலா கட்சியின் 54-வது ஆண்டு தொடக்க விழாவை, அக் டோபர் 17-ஆம் தேதி பெரிய நகரங்களிலோ, அரங்கங்களிலோ பிரம்மாண்டமாக நடத்தவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்குலத்தோர்கள் அதிகமுள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய வாணக்கண்காடு கிரா மத்திலுள்ள மாரியம்மன் கோயில் திடலில் 600 பேரோடு நடத்தி முடித்துள்ளார். 17-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் சசிகலா பங்கேற்று சிறப்புரையாற்றி நலத்திட்டங்கள் வழங்குவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணி வரை காலி நாற்காலிகளே கிடந்தன. அதன்பிறகே கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் அழைத்துவரப்பட்டனர்.

Advertisment

7.20 மணிக்கு மேடைக்கு வந்த சசிகலா, "1977-ல் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காக, கிராம மக்க ளுக்காக தொடங்கிய கட்சிதான் அ.தி.மு.க. அவர் ஆட்சிக்கு வந்த பிறகே கல்வி நிறுவனங்கள் அதி கரித்தன. மக்கள் நலத்திட்டங்களும் வழங்கப்பட் டன. ஜெ. நிறைய செய்தார். அதன்பிறகு வந்த வர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ரூ.12 லட்சம் கோடி கடன்தான் வைத்திருக்கிறார்கள். அடுத்து நம்ம ஆட்சிதான் வரும். விவசாயிகளுக் காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். அதற்கு நாம ஒற்றுமையா இருக்கணும். அதற் காகத்தான் 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவை இந்த குக்கிராமத்தில் நடத்துகிறேன்''’என்றார்.

Advertisment

கூட்டம் முடிந்ததும், பயனாளிகளுக்கு ஒரு சேலையும், தையல் இயந்திரம், மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர், கிரைண்டர் ஆகியவற்றுக்கான டோக்கன்களை வழங்கினார் சசிகலா. 15 பேருக்கு மட்டும் சசிகலா வழங்க, மற்றவர்களுக்கு பின்னர் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில்... பெயர் படித்தவர் வரிசையாக பெயர்களை வாசித்துக்கொண்டே போக, ஒவ்வொரு டோக்க னுக்கான பயனாளியை மேடையேற்ற 5 நிமிடங் கள் வரை தாமதமானதால் டோக்கன்களை நீண்டநேரம் கையிலேயே வைத்துக்கொண்டு டென்ஷனைக் காட்டாமல் நின்று வழங்கினார்.

சசிகலா டோக்கன் வழங்கி முடித்து கீழே இறங்கியதும், அங்குநின்ற பெண்கள் கூட்டம் மேடையிலிருந்த சேலைகளைப் பெற முண்டி யடித்து ஏறி மேடையைத் தள்ளாட வைத்து விட்டனர். டோக்கன் வாங்க வரும் பெண்களிடம், அதற்குமுன்பாக நின்ற ஒருவர் "சின்னம்மா கால்ல விழுந்து வணங்கிட்டு டோக்கன் வாங்குங்க' என்று சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.

"டோக்கன் கொடுத்தாங்களே பொருள் எப்ப கொடுப்பாங்க?'' என்ற கேள்விக்கு,  "டோக்கன் கொடுத்தவர்கள் முகவரியை வாங்கியிருக்காங்க. பார்சலில் பொருட்கள் வீட்டுக்கு வரும்'' என்றனர்.

"வேட்பாளர்களையே நிர்ணயித்து, அமைச்சர்களை முடிவுசெய்த சசிகலாவை டோக்கன் கொடுக்க வச்சுட்டாங்க' என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தனர் பலர்.

nkn251025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe