எடப்பாடியின் டெல்லி விசிட், அ.தி.மு.க.வில் பல பூகம்பங்களை வெடிக்க வைக்க இருக்கிறது. பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் தமிழகத்தில் பல அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். எடப்பாடியை தோற்கடித்தே தீருவேன் என அவர் நகர்த்தும் சதுரங்க ஆட்டத்தில் சசிகலா, செங்கோட்டையன், வேலுமணி, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கின்றனர். சசிகலாவைப் பொறுத்தவரை எப்படியாவது அ.தி.மு.க.விற்குள் நுழைந்துவிட வேண்டும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி யேற்க வேண்டும். சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் தேர்தலில் நிற்க விதிக்கப்பட்ட தடைக்காலம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு தேர்த லில் நின்று முதலமைச்சராக வருவதற்கு சசிகலா திட்டம் தீட்டியுள்ளார். ஜெய லலிதாவின் இடத்தை பிடிப்பதற்கு சசிகலா தீட்டியுள்ள இந்த திட்டத்தின் முதல் பாகமாக அவர் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.கவ
எடப்பாடியின் டெல்லி விசிட், அ.தி.மு.க.வில் பல பூகம்பங்களை வெடிக்க வைக்க இருக்கிறது. பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் தமிழகத்தில் பல அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். எடப்பாடியை தோற்கடித்தே தீருவேன் என அவர் நகர்த்தும் சதுரங்க ஆட்டத்தில் சசிகலா, செங்கோட்டையன், வேலுமணி, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கின்றனர். சசிகலாவைப் பொறுத்தவரை எப்படியாவது அ.தி.மு.க.விற்குள் நுழைந்துவிட வேண்டும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி யேற்க வேண்டும். சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் தேர்தலில் நிற்க விதிக்கப்பட்ட தடைக்காலம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு தேர்த லில் நின்று முதலமைச்சராக வருவதற்கு சசிகலா திட்டம் தீட்டியுள்ளார். ஜெய லலிதாவின் இடத்தை பிடிப்பதற்கு சசிகலா தீட்டியுள்ள இந்த திட்டத்தின் முதல் பாகமாக அவர் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.கவிலிருந்து பிரிந்துபோனவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்கிற கோஷமே சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவதற் காக உருவாக்கப்பட்ட கோஷம்தான். இதற்காக ஓ.பி.எஸ். உட்பட அனைவரையும் பா.ஜ.க. மு.மா.த மூலமாக சசிகலா ஒருங்கிணைத்து வருகிறார்.
அதற்காக ஆகும் செலவுகளுக்காக இதுவரை மத்திய, மாநில அரசுகளால் முடக்கப்படாத, சொத்துக் குவிப்பு வழக்கில் சம்மந்தப்படாத பல சொத்துக்களை அவர் விற்றுவருகிறார். டி.டி.வி. தினகரன், சசிகலா வை அரசியலின் உச்சத்துக்கே கொண்டு வருகிறேன் என இதுவரை 1800 கோடியை சசிகலாவிடம் வாங்கி செலவழித்து வரு கிறார். அதற்கு எந்தக் கணக்கும் அவரிடத் தில் இல்லை. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள லண்டன் நட்சத்திர ஹோட்டலை தனதாக் கிக் கொண்டார் டி.டி.வி. இப்படி சசிக்கும் தினகரனுக்கும் இடையே கணக்கு வழக்கு தகராறுகள் அதிகம். அதையெல்லாம் மீறி ‘ஜெ.’ இடத்தை, தான் பிடிக்க வேண்டும் என போயஸ் கார்டனில் ‘ஜெ.வின் வீட்டிற்கு எதிரே வீடு கட்டியிருக்கும் சசிகலா, மறுபடி போயஸ் கார்டனை தமிழக அரசின் மையமாக மாற்ற முயற்சி செய்துவருகிறார். சசிகலா வின் ஏற்பாட்டில் ‘ஜெ.வின் மகள் என தன்னைக் கூறிக்கொள்ளும் அம்ருதா, அமித்ஷாவை சந்தித் திருக்கிறார். அவர் அமித்ஷாவிடம் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றாகச் சேரவேண் டும் என பேசியதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் உச்சகட்டமான பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழ்நிலை யில், அமித்ஷாவை ‘ஜெ.’மகள் எனக் கூறிக் கொண்டு அம்ருதா சந்திப்பது, செங்கோட்டையன் போய் அமித்ஷாவை சந்திப்பது போன்றவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
16ஆம் தேதி எடப்பாடி, அமித்ஷாவை சந்திக்கிறார். அன்றைய தினமே பி.எல்.சந்தோஷும் பியூஷ்கோயலும் தமிழகத்திற்கு வந்து தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுகிறார்கள். டெல்லிக் குச் செல்லும் எடப்பாடியுடன் வேலுமணியும் அழைக்கப்பட்டிருக்கிறார். ‘பா.ஜ.க. மு.மா.த. பைல்ஸ்’ என அவருக்கு எதிரான ஊழல் குற்றச் சாட்டுகளின் பைல்களை அமித்ஷாவிடம் தருகிறார் எடப்பாடி. வேலுமணி, பா.ஜ.க. மு.மா.த., ஜக்கி வாசுதேவ் தொடர்புகள் பற்றி விசாரிக்கவே வேலுமணியும் அழைக்கப்பட்டிருக்கிறார். தமிழகம் வரும் பி.எல்.சந்தோஷ், பியூஷ்கோயல் இருவரும் பா.ஜ.க. மு.மா.த.வின் நடவடிக்கைகளிலிருந்து பா.ஜ.கவைப் பாதுகாக்க தேசியத் தலைமை எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பா.ஜ.க.வினரிடம் பேசவிருக் கிறார்கள்.
டெல்லி செல்லும் எடப்பாடி ஓ.பி.எஸ்.ஸுடன் ஒரு சமரசத் திட் டத்தை வகுத்திருக்கிறார். மறுபடியும் அ.தி.மு.கவில் இணையும் ஓ.பி.எஸ். ஸுக்கு கட்சியில் ஒரு உயர்ந்த பதவி தருவது என எடப்பாடி ஒரு சமரசத் திட்டம் வகுத்துள்ளார். ஓ.பி.எஸ்.ஸை இணைப்பது டி.டி.வி. தினகரனை கூட்டணியில் வைத்துக்கொள்வது என திட்டமிட்டிருக்கும் எடப்பாடி பா.ஜ.க. மு.மா.த. மற்றும் சசிகலாவை ஏற்பதாக இல்லை. எடப்பாடியின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து அமித்ஷாவுடன் விவாதித்து அவர் சொல்வதன் அடிப்படையில் ஓ.பி.எஸ்., அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்ளப்படு வார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள். எடப்பாடியின் இந்த நகர்வுகளை அறிந்த சசிகலா பா.ஜ.க. மு.மா.த. மூலம் எடப்பாடியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறார். சசிகலா பொதுச்செயலாளர், வேலு மணி முதல்வர் வேட்பாளர். அதற்காக எம்.எல்.ஏ.க்களை கடத்துவதற்கும் ஆக்ஷன் பிளான் வகுத்து காத்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. தேர்தலில் ஜெயிப்பதற்கு எடப்பாடிக்கு அ.தி. மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உதவத் தயாராக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தேர்தல் முடிந்ததும் யார் தலைவர் என்பதை நிரூபிக்க வெற்றிபெறும் எம்.எல்.ஏ.க்களை கடத்த இப்போதே திட்டமிட்டு ஆக்ஷன் பிளானில் இறங்கியுள்ளார்கள் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள். இவையெல்லாம் கணக்கில் கொண்டு எடப்பாடி -அமித்ஷா சந்திப்பில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.