மூன்று முதல்வர்களை உருவாக்கிய மாவட்டத்தில் அழிந்துவரும் அ.தி.மு.க.!

ss

ப்படி அ.தி.மு.க. கோட்டையாக இருந்துவந்த தேனி மாவட்டம், ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பலவீனமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் மாவட்டச் செயலாளர் களை இ.பி.எஸ். நியமித்தார். அதனடிப் படையில்தான் தேனி மாவட்டத்தை இரண் டாகப் பிரித்து கிழக்கு மாவட்டச் செயலாள ராக முருக்கோடை ராமரையும், மேற்கு மாவட்டச் செயலாளராக கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையனையும் நியமித்தார். அதைத் தொடர்ந்து, இரண்டு மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பகுதியிலுள்ள மாவட்டம், ஒன்றியம், நகரம் பகுதிகளில் புதிய பொறுப்பாளர்களை நியமித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள்வரை கட்சியை வளர்க்கவேண்டும் என்று அதிரடி உத்தரவையும் பிறப்பித்திருந்தார்.

tt

இது சம்பந்தமாக மாவட்ட பொறுப்பி லுள்ள சில ர.ர.க்களிடம்

ப்படி அ.தி.மு.க. கோட்டையாக இருந்துவந்த தேனி மாவட்டம், ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பலவீனமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் மாவட்டச் செயலாளர் களை இ.பி.எஸ். நியமித்தார். அதனடிப் படையில்தான் தேனி மாவட்டத்தை இரண் டாகப் பிரித்து கிழக்கு மாவட்டச் செயலாள ராக முருக்கோடை ராமரையும், மேற்கு மாவட்டச் செயலாளராக கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையனையும் நியமித்தார். அதைத் தொடர்ந்து, இரண்டு மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பகுதியிலுள்ள மாவட்டம், ஒன்றியம், நகரம் பகுதிகளில் புதிய பொறுப்பாளர்களை நியமித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள்வரை கட்சியை வளர்க்கவேண்டும் என்று அதிரடி உத்தரவையும் பிறப்பித்திருந்தார்.

tt

இது சம்பந்தமாக மாவட்ட பொறுப்பி லுள்ள சில ர.ர.க்களிடம் கேட்டபோது, “"தேனி மாவட்டம் எப்பொழுதும் அ.தி.மு.க. கோட்டையாகத்தான் இருந்துவந்தது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அ.தி.மு.க. பிளவுபட்டதன் மூலம் பெரும்பாலான அ.தி.மு.க. பொறுப்பாளர்களும், தொண்டர்களும் இ.பி.எஸ். பக்கம்தான் வந்தனரே தவிர ஓ.பி.எஸ். பக்கமே போகவில்லை. அந்த அளவுக்கு சொந்த மாவட்டத்திலேயே கட்சிக்காரர்களுக்கு ஓ.பி.எஸ். எதுவும் செய்யாமல் தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தார். தற்போது ஓ.பி.எஸ். பக்கம் கட்சிக்காரர்களும் பெரிதாக இல்லை. பெயர் சொல்லும் அளவிற்கு கம்பம், போடி, பெரியகுளம் உட்பட சில ஊர்களில் மட்டும் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ். மட்டும் சென்னையி லேயே முகாம் போட்டுக்கொண்டு அவ்வப் போது வந்து தலைகாட்டிவிட்டுப் போகிறாரே தவிர, கட்சிக்காரர்கள் யாரும் அவர் பின் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் இ.பி.எஸ். பக்கம் வந்ததன் மூலம், ஆளுங்கட்சி போலவே தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கிழக்கு மாவட்டச் செயலாளராக முருக்கோடை ராமரையும், மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினரான ஜக்கையனையும் நியமித்தார்.

கட்சி வளர்ச்சி கேள்விக்குறியாகத்தான் இருந்துவருகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. வைப் பொறுத்தவரை நகரம் முதல் ஒன்றியம் வரை பொறுப்பாளர்கள் ஒருவரைத்தான் நியமித்திருக்கிறார்கள். மேற்கு மாவட்டத்தி லுள்ள கம்பம் நகரத்தை இரண்டாகப் பிரித்து வடக்கு நகரச் செயலாளராக கார்த்திக்கையும், தெற்கு நகரச் செயலாளராக கணபதியையும் நியமித்து இருக்கிறார்கள். அதுபோல் போடியை இரண் டாகப் பிரித்து வடக்கு நகரச் செய லாளராக சேதுராம னையும், தெற்கு நகரச் செயலளராக மாரி யப்பனையும் நியமித் திருக்கிறார்கள்.

இப்படி மேற்கு மாவட்ட பகுதிகளில் சில ஊர்களில் இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து இருக் கிறார்களே தவிர அதன்மூலம் கட்சி வளர்ந்த பாடு இல்லை. கட்சித் தொண்டர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் நிவர்த்திசெய்ய ஆர்வம் காட்டாததால் கட்சிக் காரர்கள் பலர் ஆளுங்கட்சி உள்பட மாற்றுக் கட்சிகள் பக்கம் சாய்ந்துவருகிறார்கள். இத னால் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. கட்சி அழிந்துவரும் சூழ்நிலையில் இருந்துவருகிறது.

tt

மாவட்டச் செயலாளர் ஜக்கையனோ, சென்னை அல்லது மதுரையில்தான் தங்கிவரு கிறாரே தவிர கம்பம் பக்கம் சரிவர வருவ தில்லை. அதனால் கட்சியும் வளரவில்லை, கட்சிக்காரர்களும் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிடுகிறார்கள். கிழக்கு மாவட்டச் செயலாளரான முருக்கோடை ராமரோ உள்காட்டில் வீடு இருப்பதால் அவ்வப்போது தனது மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் எப்பொழுதும் அ.தி.மு.க. விசுவாசி களாகத்தான் இருந்துவந்தனர். தற்போது கட்சி இ.பி.எஸ். பக்கம் போய்விட்டதால், முக்குலத்தோர் மத்தியில் ஒரு அதிருப்தி இருந்துவருகிறது. அதை நிவர்த்திசெய்து கட்சியை வளர்க்க இரண்டு மாவட்டப் பொறுப்பாளர்களும் சரிவர ஆர்வம் காட்டுவ தில்லை. கட்சித் தொண்டர்களை அர வணைத்து கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டாததால் அ.தி.மு.க. இறங்குமுகமாக இருந்து வருகிறது''’என்று வருத் தத்துடன் கூறினார்கள்.

தேனி மாவட்ட ர.ர.க்களின் புலம்பல் எடப்பாடி காதுக்கு எட்டுமா?

-சக்தி

nkn150225
இதையும் படியுங்கள்
Subscribe