அ.தி.மு.க. சேர்மன் பதவி பறிப்பு! உற்சாகத்தில் தி.மு.க.வினர்!

ss

சிலம்பட்டி நகராட்சி அ.தி.மு.க. சேர்மன் சகுந்தலாவின் பதவிப் பறிப்பு செய்தி, உசிலம்பட்டி தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.வில் கவுன்சிலராக நின்று வெற்றிபெற்று சேர்மன் பதவிக்கு ஆசைப்பட்டு காய்நகர்த்தினார் சகுந்தலா. தி.மு.க. தலைமையோ தி.மு.க.வில் மற்றொரு கவுன்சிலரான செல்வியைத் தேர்ந்தெடுத்து அறிவிக்க, சில அ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவில் போட்டிபோட்டு சேர்மனாகினார் சகுந்தலா. இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, தி.மு.க. கவுன்சிலர்கள் சேர்மனுக்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்காமலிருந்தனர்.

ss

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தினகரனின் வலதுகரமான உசிலம்பட்டி மகேந்திரனை கையிலெடுத்த எடப்பாடி, உசிலம்பட்டி தி.மு.க. நகராட்சி சேர்மனாக இருந்த சகுந்தலாவை அ.தி.மு.க.வில் இணையவைத்து தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். "எடப்பாடியின் முக்குலத்தோர்

சிலம்பட்டி நகராட்சி அ.தி.மு.க. சேர்மன் சகுந்தலாவின் பதவிப் பறிப்பு செய்தி, உசிலம்பட்டி தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.வில் கவுன்சிலராக நின்று வெற்றிபெற்று சேர்மன் பதவிக்கு ஆசைப்பட்டு காய்நகர்த்தினார் சகுந்தலா. தி.மு.க. தலைமையோ தி.மு.க.வில் மற்றொரு கவுன்சிலரான செல்வியைத் தேர்ந்தெடுத்து அறிவிக்க, சில அ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவில் போட்டிபோட்டு சேர்மனாகினார் சகுந்தலா. இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, தி.மு.க. கவுன்சிலர்கள் சேர்மனுக்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்காமலிருந்தனர்.

ss

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தினகரனின் வலதுகரமான உசிலம்பட்டி மகேந்திரனை கையிலெடுத்த எடப்பாடி, உசிலம்பட்டி தி.மு.க. நகராட்சி சேர்மனாக இருந்த சகுந்தலாவை அ.தி.மு.க.வில் இணையவைத்து தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். "எடப்பாடியின் முக்குலத்தோர் ஆபரேஷன்! உசிலம்பட்டியில் விழுந்த முதல் விக்கெட்!'’என்ற தலைப்பில் கடந்த 2024 ஜனவரி நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து ஒரு வருடம் கடந்த நிலையில், கடந்த 26-ஆம்தேதி தென்மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதியை மீறிச் செயல்பட்ட நகராட்சி தலைவர் மற்றும் மூன்று மாநகராட்சி கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை, மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர், துணைமேயர்கள், கவுன்சிலர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சட்ட விதியை மீறிச் செயல்பட்ட உசிலம்பட்டி 11-வது வார்டு கவுன்சிலரும் நகராட்சி சேர்மனுமான சகுந்தலா ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளில் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என்றது.

இதன் பின்னணி குறித்து தி.மு.க.வினரிடம் பேசினோம். “"உசிலம்பட்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள். அதில் தி.மு.க. 13 வார்டுகளில் வெற்றி பெற்றதும் கவுன்சிலர் செல்வியை சேர்மனாக அறிவித்தது தலைமை. இதை எதிர்த்து தி.மு.க.வைச் சேர்ந்த சோலை ரவி, தங்கமலை பாண்டியன் போன்றவர்கள் கவுன்சிலர் சகுந்தலாவை சேர்மனாக முன்னிறுத்தி, அ.ம.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவில் வெற்றிபெற வைத்தனர். அது தி.மு.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ss

அதனால் சகுந்தலாவுக்கு ஆதரவாக இருந்த சோலை ரவி போன்றவர்களை கட்சியை விட்டு நீக்கினர். இந்நிலையில் உசிலம்பட்டியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் சகுந்தலாவைக் கண்டுகொள்ளவே இல்லை. உசிலம்பட்டியில் நடக்கும் எல்லா காண்ராக்ட்டுகளும் மற்ற தி.மு.க.வினருக்குதான் கிடைத்தன. தற்போதுள்ள உசிலம்பட்டி பேருந்து நிலையம், கட்டப்பட்டு பணம் பிரிப்பதில் நிலவிய குளறுபடியால் திறக்கப்படாமல் இருக்கிறது

இதேபோன்று உசிலம்பட்டியைச் சுற்றியிருக்கிற ஒவ்வொரு நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. சேர்மன்கள் டம்மி ஆக்கப்படுகிறார்கள். இதை துருப்புச்சீட்டாக வைத்து ஆர்.பி.உதயகுமார், மகேந்திரன் ஆகியோர் அ.தி.மு.க. பக்கம் மேலும் சில தி.மு.க. கவுன்சிலர்களை இழுத்து அ.தி.மு.க. கோட்டையாக உசிலம்பட்டியைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். இனி அது பலிக்காது''’என்றார்.

தி.மு.க. தலைமையால் சேர்மனாக அறிவிக்கப்பட்டு சேர்மனாக முடியாமல்போன கவுன்சிலர் செல்வியைத் தொடர்புகொண்டோம். “"சார் என் மகன் அஜித்பாண்டியிடம் பேசுங்கள்''’என்றதும் அஜித்பாண்டி நம்மிடம், "எங்க அம்மா செல்வியைத்தான் தி.மு.க. தலைமை சேர்மனாக அறிவித்தது. அதை மீறி அ.தி.மு.க.வினரின் ஆதரவோடு சகுந்தலா வெற்றிபெற்றார். அப்போதே இவர் மீண்டும் அ.தி.மு.க.வுக்குப் போய்விடுவார் என்று சொன்னோம். அதை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க.வுக்கு சென்று கட்சிக்கு துரோகம் செய்தார். தி.மு.க.விலிருந்து எந்த கவுன்சிலரையும் அவர்களால் இழுக்க முடியாது. உசிலம்பட்டியில் அ.தி.முக.வின் பாட்சா பலிக்காது. தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளோம். தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்வோம். அமைச்சர் மூர்த்தி அண்ணன், மாவட்டச் செயலாளர் மணிமாறன் வழியில் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்போம்''’என்றார்.

கடந்த வாரம் பள்ளிக்கு அங்கீகாரம் வாங் கித் தருவதாகச் சொல்லி பள்ளியின் தாளாளர் கவிதாவிடம் 1 கோடியே 40 லட்சம் வாங்கி ஏமாற்றிய தாக புகார் கொடுக்கப்பட்டு, உசிலம்பட்டி சேர்மன் சகுந்தலாவின் மகன் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். இது மேலும் அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

nkn020425
இதையும் படியுங்கள்
Subscribe