ஆளுநரோடு அ.தி.மு.க. கொண்டாடிய பொங்கல்! -கூட்டணிக்கு அச்சாரமா?

ss

பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி இல்லை. ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப் பாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்துவரும் நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக அமைந்துள்ள தாக சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர். அ.தி.மு.க. பொதுச்செயல

பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி இல்லை. ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப் பாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்துவரும் நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக அமைந்துள்ள தாக சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் இளங்கோவனுக்கு சொந்தமாக சுவாமி அய்யப்பா அறக்கட்டளை என்ற பெயரில் எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளாளப்பட்டியில் வேளாண் பொறியியல் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன.

ss

இந்த கல்வி நிறுவனங்களில் 2024, அக்டோபர் 22ஆம் தேதி வரு மான வரித்துறை துணை ஆணை யர் பாலா என்பவர் தலைமையில் கோவை, திருச்சி, சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு பல கோடி மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி சோதனை நடத்தினார்கள்.

தற்போது முசிறி கல்லூரியில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொங்கல் விழாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொண் டார். இது ஒரு பொங்கல் விழாவாகப் பார்க்கப் பட்டாலும், அ.தி.மு.க. பிரமுகரின் கல்லூரியில் ஆளுநர் வந்து பொங்கல் விழாவில் பங்கேற் பது சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.கருப்பையா என்பவர் மூலம் ஆளுநர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஏ.பி.கருப்பையா ஒரு காலத்தில் சிறந்த வாழை விவசாயியாக வலம் வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பிலிருந்து வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி அதை இந்தியா விலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய தொழிலதிபராக உயர்ந்துள்ளார். திடீரென எப்படி இப்படிப்பட்ட அசுர வளர்ச்சி என்று விசாரித்தபோது, அவர் பா.ஜ.க.வுக் கும், அதனை இயக்கும் ஆர்.எஸ். எஸ்.சுக்கும் ஆதரவாளராக இருப் பது தெரியவந்தது. இந்த பிணைப்பு தான், ஆளுநரை பொங்கல் விழா வில் பங்கேற்க வைத்துள்ளது. இந்த பொங்கல் விழா அ.தி.மு.க., பா.ஜ.க. அரசியல் கூட்டணி விழாவிற்கான அச்சாரமாகக்கூட அமைந்திருக்கும் என்று அரசியல் விமர்சகர் கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

எடப்பாடியை பா.ஜ.க. நெருங்க நேரடி யாகச் செல்லாமல், அவருடன் நெருக்கமாக இருக்கும் ஒவ்வொரு முக்கிய புள்ளிகளுக்கும் ஆளுநர் மூலம் தூது அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த பொங்கல் விழா அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

nkn150125
இதையும் படியுங்கள்
Subscribe