"திருச்சி, நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர். அ.தி.மு.க. பிரமுகரான இவர் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள குளங்கள், ஆற்றுப்படுகைகளில் உள்ள கெரவல் மண்ணையும், ஆற்று மணலையும் சட்டவிரோதமாக அள்ளி வெளியே ஒரு லோடு (4 யூனிட்) 30 ஆயிரம் வரை விற்பனை செய்துவருகிறார்.

மாதத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை பணப்புழக்கம் செய்யும் இவர், இனாம்குளத்தூர், ராம்ஜிநகர், வண்ணாங்கோவில், சோம ரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை கையில் வைத்துக்கொண்டுள்ளார்.

sand

வழக்கமாக மணலை அள்ளிச் செல்லும்போது, ஒவ்வொரு மாதத்திற்கும் காவல் நிலையங்களுக்கு கொடுக்கப்பட்ட டார் கெட்டை முடிக்க இவருடைய லாரியையும் பிடித்து கணக்கு காட்டிவிடுவார்கள். இவரும் வழக்கம்போல் பணத்தைக் கொடுத்து காவல் நிலையங்களை சரிசெய்துவிட்டு அவருடைய லாரிகள், ஜே.சி.பி. உள்ளிட்டவற்றை மீட்டுவருவார்.

Advertisment

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த இவரது தொழில் இன்றுவரை பாதிக்கப் படாமல் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் பக்கபலமாக இருப்பதால், துணிந்து செயல்படுகிறார்' என்று தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டு முடிந்தவரை மணலை அள்ளிச் சென்று பல மடங்கு விலைவைத்து வெளியே விற்பனை செய்துவிடுவார். நேரில் சென்று அந்த நில உரிமையாளரிடம் கேட்டால் நான் எதுவும் அனுமதி கொடுக்கவில்லை என்றுகூறி விலகிவிடுவார்.

இப்படி கடந்த ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக் காக யூனிட் மணல் அள்ளப் பட்டு விற்பனை செய்து, இன்றுவரை பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதுவரை 20-க்கும் மேற்பட்ட மணல் கடத்தலின்போது லாரியுடன் பிடிபட் டாலும் அதிகபட்சமாக 5 முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் காவல் நிலையங்களிலேயே அனைத்தையும் பேசி சரிசெய்து முடித்துவிடுவார்கள். வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், ஓட்டுநர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும். இவருடைய பெயர் சேர்க்கப் படுவதில்லை.

Advertisment

கடந்தவாரம் இனாம்குளத்தூர் பகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் கெரவல் மண் அள்ளிக்கொண்டிருந்தபோது, காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே பிடித்தனர். அதில் ஓட்டுநர்கள் சிக்கிய நிலையில்... அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். ஆனால் லாரி, ஜே.சி.பி.யின் உரிமையாளரான சேவியர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடிக்க தனிப்படை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

sand

கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளாத காவல்துறை தற்போது கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான காரணம் குறித்து விசாரித்ததில், புதிய ஐ.ஜி.யாக பொறுப்பேற்றிருக்கும் பாலகிருஷ்ணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்தவர். மீண்டும் திருச்சிக்கு பதவி உயர்வு பெற்று வந்துள்ளார்.

அவர் வந்த முதல்நாளிலேயே தனியார் பள்ளிகளின் முதல்வர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி, "ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். அவை பதிவு செய்யப்பட வேண்டும். மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவுகள் இல்லாமலிருக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து, அவர்களுடைய செல்போன் எண்களை வழங்கியுள்ளார். அதேபோல் சட்டவிரோதமான சம்பவங் களைச் செய்பவர்கள்மீது பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்திருந்தார்.

இதுபோல மணல் விவகாரம் தொடர்பாகவும் அவருடைய அறிவுறுத்தலின்படியே திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.மூர்த்தி ஒரு தனிப்படை அமைத்து மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த தனிப்படை திருச்சியில் மணல் திருடும் கும்பல் யார் என்பது அறிந்து, அவர்களுடைய நடவடிக்கை களைக் கண்காணித்து வருகிறது. அதில் சிக்கிய முதல் மணல் மாபியாதான் இந்த சேவியர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள மணல் திருடும் கும்பல்களை விரைவில் கண்காணித்துப் பிடித்தால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க் கின்றனர்.