டெல்டா மணலில் கல்லா கட்டும் அ.தி.மு.க.! -காவிரி காப்பாளர் எடப்பாடி கவனிப்பாரா?

sad

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கிறது. குடி தண்ணீர் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

மணல் கொள்ளையை அதிகாரிகள் தடுப்பார்கள் என்று புகார் மேல் புகார் கொடுத்துவிட்டு காத்திருந்த பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. புகார் கொடுத்தவர்களையே மிரட்டும் கடத்தல் கும்பலால் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் கடந்த பல மாதங்களாக அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் தங்கள் மணல் கொள்ளையை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த புதுக்கோட்டை மாவட்ட மணல் கொள்ளையர் களுக்கும் - தற்போது தஞ்சையில் காவல் துறையில் உயர் பதவியில் இருப்பவருக்கும் உள்ள இணக்க மான உறவு மணல் கொள் ளைக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது.

ss

இதேபோலதான் ஒரத்தநாடு அருகில் உள்ள பின்னையூர் கிராமத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடக்கிறது. ஒரு இடத்தில் பல நூறு லோடு மணல் குவியல் உள்ளது என்பதையறிந்து தாசில்தார் அருள்ராஜ், மற்றும் ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுமித்திரா ஆகி யோர் அங்கு போய் மணல் குவியலை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். அந்த மணல் குவியல் பின்னையூர் ஊ.ம.தலை வர் நிரோஷாவின் கணவர் பாக்கீஷ்வரனுக்கு சொந்த மான

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கிறது. குடி தண்ணீர் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

மணல் கொள்ளையை அதிகாரிகள் தடுப்பார்கள் என்று புகார் மேல் புகார் கொடுத்துவிட்டு காத்திருந்த பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. புகார் கொடுத்தவர்களையே மிரட்டும் கடத்தல் கும்பலால் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் கடந்த பல மாதங்களாக அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் தங்கள் மணல் கொள்ளையை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த புதுக்கோட்டை மாவட்ட மணல் கொள்ளையர் களுக்கும் - தற்போது தஞ்சையில் காவல் துறையில் உயர் பதவியில் இருப்பவருக்கும் உள்ள இணக்க மான உறவு மணல் கொள் ளைக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது.

ss

இதேபோலதான் ஒரத்தநாடு அருகில் உள்ள பின்னையூர் கிராமத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடக்கிறது. ஒரு இடத்தில் பல நூறு லோடு மணல் குவியல் உள்ளது என்பதையறிந்து தாசில்தார் அருள்ராஜ், மற்றும் ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுமித்திரா ஆகி யோர் அங்கு போய் மணல் குவியலை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். அந்த மணல் குவியல் பின்னையூர் ஊ.ம.தலை வர் நிரோஷாவின் கணவர் பாக்கீஷ்வரனுக்கு சொந்த மானது. வீடு கட்ட மணல் கொண்டு வந்து குவித்து வைத் திருப்பதாக கூறி தாசில்தாரிட மும் போலீசாரிடமும் வாக்கு வாதம் செய்து திருப்பி அனுப்பி யுள்ளார். அதே கையோடு தனக்கு ஆதரவான ஆளுங்கட்சி பிரமுகர்களிடமும் தகவல் கொடுத்துள்ளார். பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகள் வெறும் கையோடு திரும்பி சென்றனர்.

அடுத்த சில நாட்களில் அதே ஊரைச் சேர்ந்த கார்த்தி கேயன் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவின் அடிப்படையில் கனிமவளத் துறை அதிகாரிகள் செல்வசேக ரன், ராமஜெயம் ஆகியோர் சென்ற போது அங்குள்ள வேதபுரி வாய்க்காலில் பொக்க லின் வைத்து டிராக்டர்களில் மணல் திருடிக் கொண்டிருப் பதை நேரில் பார்த்தனர். அவர்களிடமும் தகாத வார்த் தையில் பாக்கீஸ்வரன் தரப்பை சேர்ந்த 10 பேர் வாக்குவாதம் செய்து திருப்பி அனுப்பிய துடன் புகார் கொடுத்தவரையும் தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் நடந்த சம்பவங்களை புகாராக எழுதி கனிமவளத்துறை அதி காரி செல்வசேகரன் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகாராக கொடுத்துவிட்டு தஞ்சைக்கு சென்றுவிட்டார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண் டாம் என்று வலியுறுத்திய காவல் மேல் அதிகாரி மனு ரசீது கூட கொடுக்கவிடாமல் செய்வதுடன் புகாரை வாபஸ் பெறவும் வலியுறுத்தி

ss

வருகிறார். மேலும் பலர் புகார் கொடுத்த அதிகாரிகளை திரும்ப பெறக் கோரி மிரட்டியும் வருகிறார்களாம். புகாரை திரும்ப பெறவில்லை என்றால் ஊராட்சி செயலரைவிட்டு பி.சி.ஆர் புகார் கொடுக்க சொல்வதாகவும் அதிகாரி மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு பக்கம் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த பவர்புல் அரசியல்வாதியின் உறவினரான மாஜி காவல் அதிகாரியும் மிரட்டல் பணியை தொடங்கி இருக்கிறார். அதனால் அந்த அதிகாரி எந்த போன் அழைப்புகளையும் எடுப்பதில்லையாம்.

இது குறித்து நாம் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது... ""நடந்த சம்பவங்களை புகாராக எழுதி காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறோம். விசாரனை செய்து நட வடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். நடவடிக்கை எடுக்கப் படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு மேல் பேச முடியாது'' என்றனர்.

ஒரத்தநாடு காவல் வட்டாரத்தில்... ""நாங்க திருட்டு மணல் லாரிகளை பிடித்து வந்தால் உயர் அதிகாரிகளே அந்த லாரிகளை விடச் சொல்றாங்க. நாங்க என்ன செய்ய முடியும். இப்பவும் புகார் இருந்தும் உத்தரவு வரலையே நடவடிக்கை எடுக்க'' என்றனர் நொந்தபடியே.

இந்த புகார் திருச்சி சரக ஐ.ஜி அமல்ராஜ் வரை சென்றுள்ளது. அவராவது நடவடிக்கை எடுப்பாரா பார்க்கலாம்.

அதே போல தஞ்சை கல்லணை சுகாம்பாராம், கோவிலடி பகுதியில் இரவில் தொடர் மணல் திருட்டு நடப்பதை அறிந்து அப்பகுதி கிராம மக்கள் லாரிகளை பிடித்து வைத்துக் கொண்டு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் சொன்னால் பல மணி நேரம் வரை வரவில்லை. லாரி ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் கூறும் போது... ""தஞ்சையில் மேயர் ஆக ஓடிக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர்தான் மணல் அள்ள அனுப்பியது'' என்று கூறியுள்ளனர். நீண்ட நேரமாக அதிகாரிகள் வரவில்லை என்பதால் பொதுமக்களே 5 லாரிகளையும் வெளியேற்றி இனிமேல் வரக் கூடாது என்று அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வந்த தாசில்தார் சிவக்குமார் நீங்கள் செய்தது நல்ல விஷயம். நான் வர சற்று தாமதம் ஆகிவிட்டது. இனிமேல் இப்படி நடந்தால் தகவல் கொடுங்கள் உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கோரையாறு தொடங்கி அனைத்து ஆறுகளிலும் ஆளும் கட்சி மாண்புமிகுவின் தயவில் தினசரி 100 லாரி மணல் கொள்ளை நடக்கிறது. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. விவசாயிகள்தான் பாவம்... தண்ணீர் இன்றி விவசாயத்தை பொய்க்க வைக்கிறார்கள் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் பலரும் மாஜி மணல் ஒப்பந்தக்காரர் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணம் ராமச்சந்திரன் வாகனம் போல காட்டிக் கொள்வதற்காக அவரது எஸ்.ஆர். என்ற இன்சியலுடன் பல லாரிகளை வைத்துக் கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அந்த இன்சியலைப் பார்த்தவுடன் காவல் அதிகாரிகள் முதல் வருவாய் துறை அதிகாரிகள் வரை அனைவருமே சல்யூட் அடித்து போகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த இன்சியலில் வேறு பலர் மணலை திருடி வருகிறார்கள் என்பது அந்தப் பெரும் புள்ளிக்கு தெரியுமா, தெரியாதா என்பது கேள்வியாகவே உள்ளது.

அப்படி இருந்தும் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் ஆய்வாளர் பரத் சீனிவாஸ், எஸ்.ஆர். இன்சியலுடன் மணல் திருடிக் கொண்டிருந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைனை பிடித்து வந்துவிட்டார். அந்த லாரியை விடச் சொல்லி பலரும் பேச வழக்கு பதிவு செய்து லாரி, மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். கடைசியில் அந்த லாரி புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க பாசறை செயலாளர் கருப்பையாவின் மைத்துனர் கறம்பக்குடி சடையன் தெரு ராசேந்திரன் பெயரில் உள்ளது. இப்படி ஆளுங்கட்சியினரே மணல் கொள்ளையில் அதிகம் சிக்கி வருகிறார்கள்.

டெல்டா பகுதியை திடுதிப்பென பாதுகாக்கப் பட்ட மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்காக பாராட்டு விழா நடத்தச் செய்து, ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்டார். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத்தான் முழுமையாக ரத்து செய்ய முடியவில்லை. தன் கட்சிக்காரர்கள் மணல் திருடி கல்லா கட்டுவதையாவது தடுப்பாரா காவிரி காப்பாளர்?

-இரா.பகத்சிங், மகி

nkn130620
இதையும் படியுங்கள்
Subscribe