அ.தி.மு.க. -பா.ஜ.க.விற்கு இடையிலான இணக்கமற்ற கூட்டணி உறவை சரிசெய்ய முயற்சித் திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன். மூப்பனாரின் நினைவுநாளில் இதற்கான அச்சாரம் போடப்பட்டிருக்கிறது. 

Advertisment

அதி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் அதிருப்திகள் நீடித்துவரும் நிலையில், பா.ஜ.க. தலைமையின் உத்தரவின்பேரில் ஜி.கே.வாசன் மூலம் அதனை சரிசெய்யும் முயற்சியை எடுத் துள்ளது புதுடெல்லி. இதனையடுத்து, தனது      தந்தை மூப்பனாரின் நினைவுநாளில் (ஆகஸ்ட் 30) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமியையும், பா.ஜ.க.வின் மாநில மாஜி தலைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்துள்ளார் ஜி.கே.வாசன். 

இதுகுறித்து த.மா.கா. கட்சி வட்டாரங்களில் விசா ரித்தபோது, "அ.தி.மு.க. -பா.ஜ.க.  கூட்டணி மீண்டும் மலர்ந்திருந்தாலும், பொதுத் தளத்தில் ஆரோக்கியமாக இல்லை என்பதை மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அவ்வப்போது தெரிவித்தபடியிருந்தார் ஜி.கே.வாசன். குறிப்பாக, கூட்டணியில் இணக்கமற்ற சூழல் நிலவுவதற்கான காரண -காரியங்களை டெல்லிக்கு விவரித்தபடி யிருந்தார். இதனையடுத்து, "இதனை சரிசெய்யும் அரசியலை முன்னெடுங்கள்' என அமித்ஷா வலி யுறுத்தினார். ஆனால், எந்த ஒரு நிகழ்வும் உடனடி யாக இல்லாமல் இருக்கிறதே என யோசித்த வாசன், "தனது தந்தையின் நினைவு தினம் ஆகஸ்ட் 30-ந் தேதி வருகிறது; அன்றைய தினத்தில் டெல்லியி லிருந்து முக்கிய தலைவர் ஒருவரை அனுப்பி வையுங்கள்; எல்லோரையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறேன்' என அமித்ஷாவிடம் சொன்னார். "நிர்மலா சீதாராமனை அனுப்பி வைக்கிறோம்' என வாசனிடம் தெரிவித்தார் அமித்ஷா. 

மூப்பனார் நினைவிடத்துக்கு நிர்மலா சீதாராமன் வருவதை உறுதி செய்துகொண்ட தும், "அப்பாவின் நினைவுநாளில் புகழஞ்சலி கூட்டம் நடத்துகிறேன்; நிர்மலா சீதாராமன் வருகிறார்; நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்' என எடப்பாடி, பா.ஜ.க.வின் மாஜி தலைவர், பா.ம.க. அன்புமணி, தே.மு.தி.க. பிரேமலதா ஆகியோரை அழைத்தார் வாசன். எடப்பாடியும் மாஜியும் ஒப்புக்கொண்டனர். அன்பு மணியும், பிரேமலதாவும் சில காரணங்களைச் சொல்லி தவிர்த்துவிட்டனர். மாஜி வருவதை எடப்பாடியிடமும், எடப்பாடி வருவதை மாஜியிட மும் தெரிவித்திருந்தார் வாசன். இந்த பின்னணியில், மூப்பனாரின் நினைவுநாளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்க, அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாஜி தலைவருக்கும் அருகருகே சீட் போடப்பட்டு இருவருக்குமான நெருக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறார் ஜி.கே.வாசன்''” என்கின்றனர். 

Advertisment

gkvasan1

மூப்பனாரின் நினைவிடத்துக்கு வந்த நிர்மலா சீதாராமனையும் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், ஏ.சி.எஸ்.சண்முகம், பா.ஜ.க.வின் மாஜி தலைவர் உள்ளிட்ட அனை வரையும் சிறப்பாக வரவேற்றார் ஜி.கே.வாசன். மேடையில் அருகருகே அமர்ந்திருந்த எடப்பாடி யும், மாஜியும் சகஜமாக சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டனர். மாஜியை, சகோதரர் என அழைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. 

அதேபோல எடப்பாடியை அண்ணன் என தனது பேச்சில் சொன்னதுடன், "அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப் பாடி பழனிச்சாமிதான். அவரை முதலமைச்சராக்க கடுமையாக உழைக்க வேண்டியது நம்முடைய கடமை' என்றார் மாஜி தலைவர். அனைவரும் இதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Advertisment

நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், மூப்பனாரின் பெருமைகளையும் ஆளுமைகளையும் விவரித்துவிட்டு, "பிரதமர் பதவிக்கான வாய்ப்பு மூப்பனாருக்கு வந்தபோது அதனை கிடைக்கவிடாமல் செய்த அரசியல் அனைவருக்கும் தெரியும்' என தி.மு.க.வை மறைமுகமாகத் தாக்கினார்  நிர்மலா சீதாராமன். (மூப்பனாருக்கு ஏன் அந்த வாய்ப்புக் கிட்டவில்லை என்பதன் நிஜ அரசியல் வேறு)

மூப்பனாரின் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்னதாக கிண்டி ஐ.டி.சி. ஹோட்ட லில் தங்கியிருந்த நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ. க.வில் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கும், சென்னை மாவட்ட தலைவர்களுக்கும் ப்ரேக் ஃபாஸ்ட் விருந்தளித்து, அவர்களுடன் ஆலோசித் தார். இதற்கான ஏற்பாடுகளை நயினார் நாகேந்திர னும், கேசவ விநாயகமும் செய்திருந்தனர். இந்த விருந்தையும், ஆலோசனையையும் புறக்கணித்திருந் தார் மாஜி தலைவர். 

மாநில நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட் டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘’"யாரையும் நான் குறை சொல்றதா நினைச்சுக்காதீங்க. …பார்லி மெண்ட்ல தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி.யும் இல்லைங்கிறது எனக்கு வருத்தம்தான். கடந்த தேர்தல்ல நமக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்காததுக்கு யார் காரணம்? எது காரணம்? தனித்து போட்டியிட்டா இத்தனை சீட் ஜெயிப்போம்னு சொன்னது யார்? கூட்டணி நீடித்திருந்தால் நமக்கு சில எம்.பி.க்கள் கிடைத்திருப்பார்கள். கோவையில் நடந்த ஒரு சந்திப்பில், ஹோட்டல் உரிமையாள ரிடம் நான் பேசியதை, எனக்கு எதிராக வேண்டுமென்றே ரிலீஸ் செய்தனர். அது யார்னு எனக்குத் தெரியும். நான் மன்னிப்பு கேட்காதபோது கட்சி எதுக்கு மன்னிப்பு கேட்டது? என்னை அவமானப்படுத்தவா?''’என்றெல்லாம் மாஜி தலைவரை மறைமுகமாகத் தாக்கினார் நிர்மலா சீதாராமன். அது மாஜிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கவனிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பேசிய அவர், "சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறுவதில் சீரியசாக இருக்கவேண்டும். கூட்டணி யில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல் லாம் பெரிதுபடுத்தக்கூடாது. அவைகளை உதறித் தள்ளிவிட்டு பொதுநோக்கத்துடன் கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும். தேசிய தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக முரண்பட்டு அரசியல் செய்யக்கூடாது''’என்று கண்டிப்புடனும் ஆலோசனை வழங்கினார் நிர்மலா சீதாராமன்.  

இதனையடுத்து, பார்லிமெண்ட் தோல்வி பற்றி நிர்வாகிகளைப் பேசுமாறு அழைத்தார். அமைதியாகவே இருந்தனர். தங்களின் கருத்துக் களை சொல்லுங்கள் என 2 முறை அழுத்தமாக அவர் கேட்டும் பார்லிமெண்ட் தோல்வி பற்றி யாருமே மூச்சு விடவில்லை. எல்லோரும் அமைதியாகவே இருந்தனர். பார்லிமெண்ட் தோல்வி குறித்து யாருக்கும் எந்த கருத்துமே இல்லையா? எனக் கேட்ட நிர்மலா சீதாராமனின் பேச்சில் கோபம் இருந்தது. 

யாரும் பேச முன்வராத நிலையில், பொது வான நடப்பு அரசியல் விசயங்களை பேசுங்கள் என்று நிர்மலா சீதாராமன் சொன்னதையடுத்து, ஜி.கே.நாகராஜ், அமர்பிரசாத், ரெங்கா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினர். அவர்களின் கருத்துக்களுக்கு இடையிடையே குறுக்கிட்டு பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன்.  

மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசியது நிர்மலா சீதாராமன் உட்பட அனைவரா லும் உற்று கவனிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி விட்டு, "ரஜினி நடித்த "கூலி' படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் 18 வயதுக்கு கீழிருப்பவர்களால் தியேட்டருக்கு போக முடியவில்லை. சென்சார் அதிகாரிகள் இதனை சரி செய்திருக்கவேண்டும். இப்போது டி.வி.யில் "கூலி' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியிருப்பதால் "யு' சான்றிதழ் கேட்டு கோர்ட்டுக்குப் போனார்கள். ஆனால், சென்சார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் களின் தீவிர எதிர்ப்பு வாதத்தினால் "ஏ' சான்றிதழ் நீக்கப்படாமல் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம். 

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதற்கு கவுண்டர் கொடுக்க ரஜினி ரசிகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏன்னா, பிரதமரும் ரஜினியும் நெருக்கமான நண்பர்கள். அப்படியிருக்கும் சூழலில் ரஜினியின் "கூலி' படத்துக்கு எதிராக இருக்கிறது சென்சார் போர்டு. அதேசமயம், இடதுசாரி சிந்தனைகொண்ட இயக்குநர் வெற்றிமாறனின் "மனுஷி' என்ற படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டதும், சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டியில் அவர் முறையிட்டபோது அதனை ரிஜெக்ட் செய்தனர். இதனை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டில் சென்சார் போர்டு அதிகாரிகள் வலுவான வாதங்களை முன் வைக்காததால், வெற்றிமாறனுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், "கூலி' படத்துக்கு எதிராக சென்சார் போர்டு இருந்ததால் "யு' சான்றிதழ் கிடைக்கவில்லை.   

அதேபோல, தமிழகம் தொடர்பாக அமலாக்கத்துறை பல வழக்குகளை பதிவு செய்கிறது. ஆனால், கோர்ட் டுக்கு போகும்போது கோர்ட்டின் கண்டனங் களுக்கு ஆளாகிறார்கள் அமலாக்கத்துறையினர். குறிப்பாக, தி.மு.க.வுக்கும் உதயநிதிக்கும் நெருக்கமான ஆகாஸ் பாஸ்கரன், ரித்தீஸ் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் அமலாக்கத்துறைக்கு எதிராக உத்தரவு வருகிறது. அமலாக்கத்துறையினர் இந்த வழக்குகளை சரியாக நகர்த்தவில்லையோ என்கிற விமர்சனங்கள் வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியின்போது எடப்பாடிக்கு நெருக்கமான அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயணன், தி.மு.க.வுக்கு நெருக்கமானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி ஸ்டே வாங்கிக் கொடுக்கிறார். இதெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தி.மு.க., அ.தி.மு.க. தொடர்புடைய அரசியல் ரீதியான பல்வேறு தகவல்களை விவரித்திருக்கிறார் தியாகராஜன்.  

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு, மறைந்த மூத்த தலைவர் இல.கணேசனின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னார் நிர்மலா சீதாராமன். பின்னர் அங்கிருந்து மூப்பனாரின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  

நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால் இது குறித்து பா.ஜ.க. மேலிட தொடர்பில் விசாரித்த போது,”"அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி உருவா னாலும் இரு தரப்புக்குமான உறவு வலுப்பட வில்லை. இதற்குக் காரணம், மாஜி தலைவரின் அரசியல் சித்து விளையாட்டுகள்தான். இதனை எடப்பாடியும், நயினாரும் ஏற்கனவே கட்சியின் தேசிய தலைமைக்குத் தெரிவித்திருந்தனர். 

அ.தி.மு.க. கூட்டணியை உருவாக்கியது அமித்ஷா என்பதால், கூட்டணிக்கு எதிரான மாஜியின் அரசியலை சீரியஸாக எடுத்துக் கொண்டார். நெல்லைக்கு வந்த அமித்ஷா, மாஜியை கடுமையாக கண்டித்தார்; எச்சரித்தார். இதனையடுத்தே, "எடப் பாடியை முதல்வராக்குவதே தங்களின் கடமை, லட்சியம்' என முழங்கி வருகிறார். அது மூப்பனார் நினைவுநாள் கூட்டத்திலும் எதிரொலித்தது. அமித்ஷா வின் எச்சரிக்கையால் மாஜியின் சப்த நாடியும் ஒடுங்கி யிருக்கிறது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.