"திராவிட கட்சி களுக்கு நாங்களும் சளைத் தவர்கள் அல்ல' என்பதுபோல மகளிர் மாநாட்டை கன்னியாகுமரியில் நடத்தவுள்ளது பா.ஜ.க. அந்நிகழ்ச்சிக்காக ஜனவரி 28ஆம் தேதி மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார். அதே நாளில்... அதே மேடையில், பா.ஜ.க. கூட்டணியிலுள்ள கட்சிகளை மேடையேற்றவும், எடப்பாடியோடு ஓ.பி.எஸ்.ஸூம், டி.டி.வி.தினகரனும் கைகோர்க்கவும் முடிவெடுத் துள்ளதாக சொல்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
அமித்ஷாவின் திருச்சி வருகையின்போது எடப்பாடி பழனிச்சாமி பாராமுகம் காட்ட, அந்த கோபத்தை வேலுமணியிடம் காண்பித்திருக்கின் றார் அமித்ஷா. அப்போது, "யார் வழி நடத்தினா லும் அ.தி.மு.க. இயங்கும் என்பதை பழனிச்சாமி புரிந்துகொள்ள வேண்டும்'' எனக்கூறி முந்தைய வருடங்களில் நடந்த சம்பவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளா
"திராவிட கட்சி களுக்கு நாங்களும் சளைத் தவர்கள் அல்ல' என்பதுபோல மகளிர் மாநாட்டை கன்னியாகுமரியில் நடத்தவுள்ளது பா.ஜ.க. அந்நிகழ்ச்சிக்காக ஜனவரி 28ஆம் தேதி மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார். அதே நாளில்... அதே மேடையில், பா.ஜ.க. கூட்டணியிலுள்ள கட்சிகளை மேடையேற்றவும், எடப்பாடியோடு ஓ.பி.எஸ்.ஸூம், டி.டி.வி.தினகரனும் கைகோர்க்கவும் முடிவெடுத் துள்ளதாக சொல்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
அமித்ஷாவின் திருச்சி வருகையின்போது எடப்பாடி பழனிச்சாமி பாராமுகம் காட்ட, அந்த கோபத்தை வேலுமணியிடம் காண்பித்திருக்கின் றார் அமித்ஷா. அப்போது, "யார் வழி நடத்தினா லும் அ.தி.மு.க. இயங்கும் என்பதை பழனிச்சாமி புரிந்துகொள்ள வேண்டும்'' எனக்கூறி முந்தைய வருடங்களில் நடந்த சம்பவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால்தான் அமித்ஷாவை சந்திக்கவில்லை என்று விளக்கம் தரப்பட்டிருக் கிறது. அமித்ஷா கோபமாக இருப்பது தெரியவந்ததால், அவரை சமாதானப்படுத்தும் நோக்கில்தான் உடனடியாக டெல்லி பறந்திருக்கின் றார் எடப்பாடி பழனிச்சாமி. எடுத்த எடுப்பிலேயே எடப்பாடி யிடம், "கூட்டணி விஷயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? பா.ஜ.க. -அ.தி.மு.க.வுடன், தி.மு.க.வுக்கு எதிரான அனைவரையும் கூட்டணியில் இணைக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணியிலுள்ள தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. நீங்கள் முதல்வர் வேட்பாளர்தான், ஆனால் தேசிய அளவில் பா.ஜ.க.தான் தலைமை. ஓ.பி.எஸ்.ஸும், டி.டி.வி.யும் கூட்டணியில் இணைந் தால் டெல்டா மட்டுமல்லாது தென் மாவட்ட மக்களின் வாக்குகள் கூட்டணிக்கு கிடைக்கும் என பியூஷ்கோயல் பா.ஜ.க.வின் கருத்தை அழுத்தமாகத் திணிக்கவும் அவர் மனதை மாற்றியது'' என்றார் அ.தி.மு.க.வின் தலைமைக்கழக நிர்வாகி.
"ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் இணைக்க விருப்பமில்லை. பா.ஜ.க. வின் கூட்டணியில் வேண்டுமானால் இணைத் துக்கொள்ளுங்கள். அதேபோல் அவர்களுக்கு குறைவான தொகுதிகளையே கொடுங்கள். இல்லையென்றால் வெற்றிக்குப் பின் எனக்கெதிராகவே திரும்புவார்கள்'' என நேரடியாக அமித்ஷாவிடமே தெரிவித்துவிட்டு, இறுகிய முகத்தோடு டெல்லியிலிருந்து திரும்பிய எடப்பாடியை, அடுத்தகட்டமாக, கடந்த 9ஆம் தேதி, அவரது சென்னை இல்லத்தில் சந்தித்த நயினார் நாகேந்திரனோடு, கூட்டணி குறித்த பேச்சு நடைபெற்றதாக பா.ஜ.க. தரப்பு தெரிவித்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/eps-modi1-2026-01-12-16-09-23.jpg)
பா.ஜ.க.வின் நிர்வாகக் கமிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரோ, "பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை அமித்ஷா முன்னிலையில் தொகுதிப் பங்கீடுகள் முடிந்துவிட்டது. கூட்டணியைப் பொறுத்தவரை அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளே தலைமையென்றும், தொகுதிப் பங்கீடுகளின்படி அ.தி.மு.க.விற்கு எவ்வளவு? பா.ஜ.க.விற்கும், அதை சார்ந்த கட்சிகளுக்கும் எவ்வளவு? என்பதும் முடிவாகியிருக்கிறது. அதன்படி, அ.தி.மு.க.விற்கு 140 இடங்களும், பா.ஜ.க.விற்கு 94 இடங்களும் என உறுதியாகியுள்ளது. பா.ஜ.க.வின் 94 இடங்களில் தாங்கள் 40 இடங்களிலும், தங்களது கூட்டணியி லுள்ள அன்புமணி ராமதாஸின் பா.ம.க.விற்கு 17, தே.மு.தி.க.விற்கு 10, ஓ.பி.எஸ்.ஸிற்கு 10, டி.டி.வி. தினகரனுக்கு 10, கிருஷ்ணசாமிக்கு 2, பாரிவேந்த ருக்கு 2, ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் மற்றும் கொங்கு சமூகம் சார்ந்த கட்சிக்கு 1 என பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை தனித்தனியாக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், விருப்பத் தொகுதிகளைக் கொடுக்க இயலாது என்பதையும், விருப்பத் தொகுதிகளில் 2:1 சதவிகித அளவிலேயே ஒதுக்கப்படும் என்பதையும் ஆணித்தரமாக அனைவரிடமும் தெரிவித்துள்ளது பா.ஜ.க. இதில் ஓ.பி.எஸ்., கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் மற்றும் பாரிவேந்தர் உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்பதுதான் ஹைலைட்டே! கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இதனை ஒத்துக்கொண்டால் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பா.ஜ.க. மகளிர் மாநாட்டில் அனைவரும் இணைந்து கைகோர்த்து மேடையில் காட்சி தரக்கூடும்'' என தெரிவித்தார் அவர்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us