பிரதமர் மோடி, பியூஷ் கோயல் என இரண்டு பேர் வந்தும் அ.தி.மு.க.வுட னான தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருக்கிறது. தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே கடுமையான மோதல் நடக்கிறது. மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டம் முடிந்தவுடன் டி.டி.வி. தினகரனுக்கும், ராஜேந்திரபாலாஜிக்கும் வாகனங்களுக்கு வழிவிடுவதில் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு மண்டை உடைந்தது. இந்த மோதல்களுக்கு காரணம் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்த கருத்து வேறுபாடுதான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
டி.டி.வி. தினகரன் விருதுநகர் மாவட்டத்தில் சில தொகுதிகளை குறிவைத்துக் கேட்கிறார். அதே தொகுதிகளை ராஜேந்திர பாலாஜியும் எதிர்பார்க்கிறார். இந்த விவரங்களை ராஜேந்திரபாலாஜியிடம் எடப்பாடி சொல்ல, ‘"டி.டி.வி. என்ன அவ்வளவு பெரிய ஆளா?'’ என தினகரன் வந்த காருக்கு வழி விடாமல், தனது ஆதரவாளர்களை விட்டு சண்டையிழுத்து, தனது ஸ்டைலில் தகராறு செய்திருக்கிறார் ராஜேந
பிரதமர் மோடி, பியூஷ் கோயல் என இரண்டு பேர் வந்தும் அ.தி.மு.க.வுட னான தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருக்கிறது. தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே கடுமையான மோதல் நடக்கிறது. மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டம் முடிந்தவுடன் டி.டி.வி. தினகரனுக்கும், ராஜேந்திரபாலாஜிக்கும் வாகனங்களுக்கு வழிவிடுவதில் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு மண்டை உடைந்தது. இந்த மோதல்களுக்கு காரணம் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்த கருத்து வேறுபாடுதான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
டி.டி.வி. தினகரன் விருதுநகர் மாவட்டத்தில் சில தொகுதிகளை குறிவைத்துக் கேட்கிறார். அதே தொகுதிகளை ராஜேந்திர பாலாஜியும் எதிர்பார்க்கிறார். இந்த விவரங்களை ராஜேந்திரபாலாஜியிடம் எடப்பாடி சொல்ல, ‘"டி.டி.வி. என்ன அவ்வளவு பெரிய ஆளா?'’ என தினகரன் வந்த காருக்கு வழி விடாமல், தனது ஆதரவாளர்களை விட்டு சண்டையிழுத்து, தனது ஸ்டைலில் தகராறு செய்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.
கூட்டணி சம்பந்தமான பேச்சு வார்த்தையெல்லாம் பியூஷ்கோயல் முன்னிலை யில் நடந்துள்ளது. அதில் எடப்பாடி ஒரு விவகாரத்தை முன்வைத்தார். “"நாங்கள்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழகத் தலைமை. எங்களிடம்தான் மற்ற கட்சிகள் பேசவேண்டும்''’என்றார்.
அதற்குப் பதிலளித்த பியூஷ்கோயல், அமித்ஷா முன்வைத்த ஒரு பார்முலாவைச் சொன்னார். “"அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளெல்லாம் அ..மலை பா.ஜ.க. தலைவராக இருந்தபோது ஒன்றாகப் போட்டியிட்ட கட்சிகள். 18% வாக்குகள் வாங்கிய அந்தக் கட்சிகளின் கூட்டணியில்தான் அ.தி.மு.க. இணைந்துள்ளது. எனவே, "அந்தக் கட்சிகளுக்கான சீட்டுகளை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் பிரித்துக் கொடுத்துவிடுகிறோம்''’ என்று சொன்னார். "எவ்வளவு சீட்டுகள் கொடுக்க முடியுமோ கொடுத்துவிடுங்கள்'’என்பதுதான் பியூஷ் கோயலின் நிலைப்பாடு. “
"இப்படி அ.தி.மு.க. கூட்டணி தனி, பா.ஜ.க. கூட்டணி தனி என பிரித்துக் கொடுக்க முடியாது. நாங்கள் அன்புமணிக்கு 18 சீட் கொடுக்கிறோம் என உறுதியளித்திருக் கிறோம்''’என எடப்பாடி சொல்ல... “"அவருக்கு நீங்கள் ராஜ்யசபா சீட் கொடுத்தால் நாங்கள் அவரை மந்திரி ஆக்குகிறோம்'' என பியூஷ் கோயல் தனிப்பட்ட முறையில் எடப்பாடியிடம் சொன்னாராம். “
"நாங்கள் தம்பிதுரைக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கிறோம். தயவுசெய்து அவரை மந்திரியாக்காதீர்கள்''’என எடப்பாடி தனிப்பட்ட முறையில் பியூஷ்கோயலிடம் சொன்னாராம். பிரதமர் விழா முடிந்ததும், மறுபடியும் தலைவர்கள் உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள். மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டதும் டி.டி.வி.தினகரன் “"இதற்குத்தான் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் நேரடியாகப் பேசி சீட் வாங்கிக் கொள்கிறேன்'' என கூட்டத்தில் சொல்லி யுள்ளார்.
பா.ஜ.க. தெரிவித்த ஒரு கூட்டணி பார்முலாவுக்கு எடப்பாடி ஒத்துக்கொள்ள வில்லை. இது பிரதமர் காதுக்கு செல்ல, பிரதமர் கூட்டத்தில் "அ.தி.மு.க. கூட்டணி' என பேசுவதை தவிர்த்திருக்கிறார். இதனால் டென்சனான எடப்பாடி, "நான் அமித்ஷாவிடம் பேசிக் கொள்கிறேன்'' என டெல்லிக்குப் போக டிக்கெட் புக்செய்து கிளம்பிவிட்டார்.
"தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை ஆரம்பித்துவிட்டது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கடந்த தேர்தலில் 20% வாக்குகளைத்தான் நீங்கள் வாங்கினீர்கள். பா.ஜ.க. 18% வாக்குகளை வாங்கியது. அதனால் 100 தொகுதிகளை எங்களுக்குக் கொடுங்கள். 134 தொகுதிகளில் நீங்கள் போட்டியிடுங்கள். வெற்றி பெற்றதும் கூட்டணி ஆட்சியமைத்துக் கொள்ளலாம்''’என சொல்லியுள்ளார்.
“கூட்டணி ஆட்சி முடியாது அ.தி.மு.க. தனித்து ஆட்சியமைக்கும் என்பதுதான் எடப் பாடியின் நிலை. அதை பிரதமர் முன்னிலையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி வெளிப்படுத்திவிட்டார். இதனால் டென்சனான பா.ஜ.க.வினர் மீண்டும் அமித்ஷாவிடம் பத்தவைக்க, ‘டெல்லிக்கு வரச்சொல்லிஅமித்ஷா அழைக்க, எடப்பாடி புறப்பட்டிருக்கிறார்.
டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வினர் பலமாக உள்ள தொகுதிகளைக் கேட்பதும், பா.ஜ.க.வினர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்துவதும், அ.தி.மு.க.விற்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி யுள்ளது. கூட்டணியை முடிவு செய்வது யார் என்கிற மோதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிதாக எதிரொலிக்கிறது.
இதற்குப் பிறகுதான் தொகுதிகளின் எண்ணிக்கை, கட்சிகளுக்கு உண்டான தொகுதிகளின் பெயர், அங்குள்ள ஆதரவு நிலை என முடிவுசெய்ய வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் முதல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையே மோதல், மண்டை உடைப்பு என மாறியிருக்கிறது. அ..மலையோ "இது நமக்கான தேர்தல் அல்ல.. எடப்பாடிக்கான தேர்தல். இதில் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டிய தில்லை'' என தமிழக பா.ஜ.க.வினரை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இப்படி முட்டலும் மோதலுமாக தொடர்ந்தால் நம் நிலைமை என்னாவது என பா.ஜ.க.வினர் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். "விரைவில் அமித்ஷா, தமிழகத்திற்கு வந்து பஞ்சாயத்து செய்வார். என்ன ஆனாலும் கூட்டணி ஆட்சிதான் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது'’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us