ராங்கால் அ.தி.மு-க. அடிதடி! உள்கட்சி உள்ளடி! தமிழக அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டும்! எடப்பாடி தோஸ்த்!

ad

"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வில் உள்கட்சித் தேர்தலை நடத்துவது சம்பந்தமா தலைமைக் கழக வாசலிலேயே தகராறு நடந்ததைக் கவனிச்சீங்களா?''”

"ஆமாம்பா... எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க உறுப்பினரான ஓமப்பொடி பிரசாத்ங்கிறவரு கட்சித் தலைமைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு கேட்டு வந்தப்ப அவரை அடிச்சித் துரத்தியதும், இன்னொருவரையும் இதேபோல விரட்டியதும் பரபரப்பாயிடிச்சே...''“

ad

"ஆமாங்க தலைவரே.. தி.மு.க.வில் ஒரே குடும்பத்தின் வாரிசுகள்தான் பதவியைப் பெற முடியும்னும், அ.தி.மு.க.வில் சாதாரணத் தொண்டர்கள்கூட தலைமைப் பதவிக்கு வர முடியும்னு போன எலெக்ஷன் நேரத்திலே ஊர் ஊருக்கு எடப்பாடி பிரச்சாரம் செய்தாரு. ஆறு மாசத்துக்குள்ளே, அ.தி.மு.க.வில் ஒரு தொண்டர் மனு கேட்டு வந்ததற்கே பொளந்திருக்காங்கன்னு விமர்சனம் வெளிப்படுது. இதற்கிடையில், தலைமைக் கழகத்தில் குழப்பம் விளைவித்து, கலகம் ஏற்படுத்த முயற்சி செய்றாங்கன்னு போலீஸ் கமி ஷனரிடம் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு கொடுத்திருக்காரு.''”

"எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் பதவிதான் உயர்ந்த பதவி. அதற்குப் பதில் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர்ங்கிற இரட்டைத் தலைமை தொடரும்னும், இரண்டு பதவிக்கும் சேர்த்து ஒரே ஓட்டுன்னும், 7ந் தேதி தேர்தல் நடத்தி 8ந் தேதி ஓட்டு எண்ணிக்கைன்னு அறிவிப்பு வெளியான திலிருந்தே பரபரப்புதான். பொதுக் குழுவைக் கூட்டறதுக்கு முன்னாடியே, தங்கள் பதவிகளைத் தக்க வச்சிக்க ணும்னு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் கிளைக்கழகத் தேர்தல் டிசம்பர் 13 முதல் 23 வரை நடக்க இருக்குது. அதேசமயம், ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந் தெடுப்பதற்காக தேர்தல் டிசம்பர் 7-ல் நடக்கும்ன்னு அறிவிச்சிருக் காங்க. பொதுக்குழு உறுப்பினர்களே அ.தி. மு.க.வின் ஒருங்கிணைப்பாளரையும் இணை ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுக்கலாம்னு இருந்த விதியை மாற்றி, இந்தப் பொறுப்புக்கு உரியவர்களைக் கட்சித் தொண்டர்கள் தேர்ந் தெடுக்கலாம்னு சமீபத்தில், கட்சியின் சட்டவிதிகள் மாற்றப்பட்டிருக்கு. அப்படி மாற்றிய கையோடு தேர்தலையும் அறிவித்துவிட்டார்கள்.''

"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வில் உள்கட்சித் தேர்தலை நடத்துவது சம்பந்தமா தலைமைக் கழக வாசலிலேயே தகராறு நடந்ததைக் கவனிச்சீங்களா?''”

"ஆமாம்பா... எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க உறுப்பினரான ஓமப்பொடி பிரசாத்ங்கிறவரு கட்சித் தலைமைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு கேட்டு வந்தப்ப அவரை அடிச்சித் துரத்தியதும், இன்னொருவரையும் இதேபோல விரட்டியதும் பரபரப்பாயிடிச்சே...''“

ad

"ஆமாங்க தலைவரே.. தி.மு.க.வில் ஒரே குடும்பத்தின் வாரிசுகள்தான் பதவியைப் பெற முடியும்னும், அ.தி.மு.க.வில் சாதாரணத் தொண்டர்கள்கூட தலைமைப் பதவிக்கு வர முடியும்னு போன எலெக்ஷன் நேரத்திலே ஊர் ஊருக்கு எடப்பாடி பிரச்சாரம் செய்தாரு. ஆறு மாசத்துக்குள்ளே, அ.தி.மு.க.வில் ஒரு தொண்டர் மனு கேட்டு வந்ததற்கே பொளந்திருக்காங்கன்னு விமர்சனம் வெளிப்படுது. இதற்கிடையில், தலைமைக் கழகத்தில் குழப்பம் விளைவித்து, கலகம் ஏற்படுத்த முயற்சி செய்றாங்கன்னு போலீஸ் கமி ஷனரிடம் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு கொடுத்திருக்காரு.''”

"எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் பதவிதான் உயர்ந்த பதவி. அதற்குப் பதில் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர்ங்கிற இரட்டைத் தலைமை தொடரும்னும், இரண்டு பதவிக்கும் சேர்த்து ஒரே ஓட்டுன்னும், 7ந் தேதி தேர்தல் நடத்தி 8ந் தேதி ஓட்டு எண்ணிக்கைன்னு அறிவிப்பு வெளியான திலிருந்தே பரபரப்புதான். பொதுக் குழுவைக் கூட்டறதுக்கு முன்னாடியே, தங்கள் பதவிகளைத் தக்க வச்சிக்க ணும்னு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் கிளைக்கழகத் தேர்தல் டிசம்பர் 13 முதல் 23 வரை நடக்க இருக்குது. அதேசமயம், ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந் தெடுப்பதற்காக தேர்தல் டிசம்பர் 7-ல் நடக்கும்ன்னு அறிவிச்சிருக் காங்க. பொதுக்குழு உறுப்பினர்களே அ.தி. மு.க.வின் ஒருங்கிணைப்பாளரையும் இணை ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுக்கலாம்னு இருந்த விதியை மாற்றி, இந்தப் பொறுப்புக்கு உரியவர்களைக் கட்சித் தொண்டர்கள் தேர்ந் தெடுக்கலாம்னு சமீபத்தில், கட்சியின் சட்டவிதிகள் மாற்றப்பட்டிருக்கு. அப்படி மாற்றிய கையோடு தேர்தலையும் அறிவித்துவிட்டார்கள்.''”

"பலே...''”

"போட்டியின்றி இவர்கள் தேர்வு செய்யப் பட்டதாக அறிவிக்க வேண்டும் என்பதால், இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடக் கூடாதுன்னு வேட்பு மனு கேட்ட எவருக்கும் அதைத் தராமல், அவர்களை அடித்து உதைத்து விரட்டியடிச்சிட்டாங்க. அதனால் அ.தி.மு.க தலைமையகத்தில் ஏகத்துக்கும் ரகளை ஏற்பட்டுடிச்சு. ராணுவக் கட்டுப்பாடு போன்ற கட்சின்னு பேர் எடுத்த அ.தி.மு.க.வில் இப்படி ஒரு நிலைமை. வழக்கம் போல் பொதுக்குழு மூலம் தங்களைத் தேர்வு செய்யலாம்னு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் இருந்தப்ப, பொதுக்குழுவில் சசிகலாவுக்கு ஆதரவாக பலரும் பேசுவதற்கு அவர் தரப்பு காய்களை நகர்த்துச்சு. இதை அறிந்ததால்தான் இந்த சட்ட திருத்தமாம். யாரும் குறுக்கு வழியில் கட்சியை ஆக்கிரமித்துவிடக் கூடாது. வரும் 5 வருடத்துக்கு தன் பதவியைத் தக்க வச்சுக்கணும்னுதான் ரொம்பவும் கவனமாக காய் நகர்த்தறாராம் எடப்பாடி.''”

aa

"இப்படி அவசர கதியில் தேர்தலை நடத்துவது சிக்கலை ஏற்படுத்துமே?''”

"உண்மைதாங்க தலைவரே, பொதுவா தேர்தல்னா, அதில் போட்டியிடுவதற்கு அனை வருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கணும். முறையா வாக்காளர் பட்டியலை ரிலீஸ் செய்யணும். அடுத்து, கிளைக்கழகம் முதல் அனைத்து நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான், தலைமைப் பொறுப்புக்களுக்கான தேர்தல் நடத்தப்படணும். ஆனா, இங்கு தலைமை பொறுப்புக்கு முதலில் தேர்தலை நடத்திவிட்டு, பிறகு கிளைக்கழகத்திற்கு தேர்தல் நடத்துகின்றனர். இங்கே உள்கட்சித் தேர்தலுக்கான எந்த நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. அதனால் சிலர், இந்தத் தேர்தலை எதிர்த்து கோர்ட்டுக்கு போயிருக்காங்க. அதனால் நீதிமன்றத்தில் எதுவும் நடக்கலாம்னு அ.தி.மு.க. சீனியர்களே சொல்றாங்க.''”

"கொடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் மறுபடியும் எடப்பாடி களமிறங்கி விளையாடறாரே?''”

"ஆமாங்க தலைவரே, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடிக்கப் போன கும்பல், அந்த முயற்சியின்போது அங்கே கொலைகளையும் நடத்துச்சு. பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெ.வின் முன்னாள் டிரைவர் கனகராஜ் உட்பட சிலர் கொல்லப்பட்ட னர். குற்றவாளிகள் தரப்பில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி சிக்கலில் சிக்குவார்னு காவல்துறையிலேயே டாக் இருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வாளையார் மனோவை, எடப்பாடி தரப்பு தங்கள் பக்கம் கொண்டு போய்விட்டது. ஜாமீனில் வெளியே வந்த அவர், எடப்பாடிக்கு சாதகமாக வாக்குமூலம் தரத் தயார்னு சொல்லிவிட்டு கேரளாவுக்குப் போய்விட்டார். விசாரணை டீமோ, வாளையார் மனோ ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், எடப்பாடிக்கு எதிராகவே இருக்கு என்று சொல்வ தோடு, மனோவைத் துரத்தத் தொடங்கிவிட்டது.''”

"எடப்பாடியின் தோஸ்து ஒருத்தர், இப்போதும் செல்வாக்காக பவர் புள்ளிகளுடன் உலவிக்கிட்டிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, எடப்பாடியின் சொந்த கிராமமான சேலம் மாவட்ட சிலுவம்பாளை யத்தில், அவர் வீட்டருகிலேயே வசிப்பவர் சுந்தர். எடப்பாடிக்கு உறவினரும் கூட. கடந்த ஆட்சியில் பவர்ஃபுல்லாக வலம் வந்து ஏகத்துக்கும் கல்லா கட்டிய இவர், இப்போது இருக்கும் தமிழக அமைச்சர்கள் பலருடனும் நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டு கோட்டை பக்கமே அதிகம் உலவுகிறார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமே துறை மாறுதல், இடம் மாறுதல் பெற்றுத் தருவதாகக் கூறி, ஏகத்துக்கும் வசூல் செய்கிறாராம். அ.தி.மு.க. தரப்பைச் சேர்ந்தவர் களுக்கும் இந்த அரசில் எந்தத் தேவையாக இருந்தாலும் கூட, அதையும் சிலுவம்பாளையம் சுந்தர் சீக்ரெட்டாக முடித்துக்கொடுக்கிறாராம்.''”

"அகாசுகா ஊழல் நிறுவனமான கிறிஸ்டி ஃபுட்டின் செல்வாக்கு இப்பவும் இருக்குதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த நிறுவனமான கிறிஸ்டி ஃபுட், அரசுக்கு சப்ளை செய்யும் பருப்பு உள்ளிட்ட பொருட்களில் ஏகத்துக்கும் ஊழல் செய்தது. இதுகுறித்து, ஏகப்பட்ட புகார்கள் கிளம்பின. ஆட்சி மாறிய நிலையிலாவது, அந்த நிறுவனம் பிளாக் லிஸ்டில் வைக்கப்படும் என்றும், அந்த நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர். போடப்படும் என்றும் பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டி ஃபுட், பினாமி பெயர்களிலும் மற்ற நிறுவனங்களின் பெயர்களிலும் தன் டெண்டர் திருவிளையாடல் களை இப்போதும் நடத்திக்கிட்டுதான் இருக்குது. இப்ப தமிழக அரசு 2.1 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க இருக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களை சப்ளை செய்யும் டெண்டரை, கேந்திரிய பண்டர் என்ற நிறுவனம் எடுத்திருக்கிறது. இதுவும் கிறிஸ்டி ஃபுட்டின் புனைப்பெயர் கம்பெனிதானாம். ஆள்வோர் தரப்பில் கேட்டால், கொள்முதலிலோ தரத்திலோ விநியோகத்திலோ குறையிருந்தால் சொல்லுங் கள்னு தெளிவா பதில் சொல்றாங்க.''”

"மதுரை மாநகராட்சியில் சலசலப்பு கேட்குதே...?''”

rr

"ஆமாங்க தலைவரே, மதுரை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். பணியாளர்களை கொத்தடிமைபோல் இவர் நடத்துறார்னு குற்றச்சாட்டை வச்சிருக்காங்க, அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள். குறிப்பா, அங்கே ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக இருந்த ஸ்டாலின் என்பவர் மின்சாரம் பாய்ந்து ஒரு கையை இழந்திருக்கிறார். அவருக்கான நிவாரணம் கேட்டு தூய்மைப் பணியாளர் கள் கோரிக்கை வச்சிருக் காங்க. அதைப் பற்றி கேட்கப் போன தூய்மைப் பணியாளர் களை மரியாதைக் குறை வாக நடத்தியிருக் கிறார் கார்த்தி கேயன். இதுபற் றிய புகார் தேசிய ஆணை யத்துக்குப் போயிருக்கு. ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், அவர் பதில் தரலையாம். அதனால், அந்த ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனே நேரில்வந்து விசாரணை நடத்திவிட்டுப் போயி ருக்கிறார்.''”

"விசாரணையின் போது, தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த கார்த்திகேயனை அழைத்தும், அவர் வர மறுத்து விட்டாராமே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த நிலையில் கார்த்திகேயன் தன்னையும் அவமரியாதை செய்ததாக வெங்கடேசன் குற்றம்சாட்டி இருக்கார். இதைத் தொடர்ந்து கார்த்திகேயனுக்கு எதிராக ஜனாதிபதி வரை புகார் மனுக்கள் போயிருக்கு. இந்த சூழலில் அண்மையில், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகையா என்பவர் மரணமடைந்தார். அவர் இந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். கொடுத்த டார்ச்சரால்தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்ததாகவும் புகார் கிளம்பிக்கிட்டு இருக்கு. அதனால், துப்புரவுத் தொழிலாளர்கள், கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் புகார் அனுப்பியிருக்காங்க. மனிதக்கழிவுகளை மனிதர்கள் அள்ளக்கூடாதுன்னு சட்டம் இருந்தும், அங்கே அதை மனிதர்களை கொண்டுதான் அகற்றணும்னு கெடுபிடி காட்டறாராம் கார்த்திகேயன்.''”

rr

"இதேபோல் ஆவினில் கேட்ட சலசலப்பு கொஞ்சம் அடங்கியிருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக பால்வளத்துறையின் இயக்குநராகவும், ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்த கந்தசாமி ஐ.ஏ.எஸ்.சை அதிரடியாக இடமாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. கார ணம், அவர் மீது எழுந்த புகார்கள் தான். இது குறித்தும் நம் நக்கீரன் அம்பலப்படுத்தியிருக்கு. அண்மையில் இடமாற்றம் அடிப்படையில் அங்கே முறைகேடு அரங்கேறியிருக்கு. இந்த விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கும், இவருக்கும் இடையில் மோதல் வெடிச்சிருக்கு. அதனால் தான் மாற்றமாம். ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் பால் வளத்துறையின் இயக்குநர் பொறுப்பையும் ஒரே அதிகாரி நிர்வகித்தால் ஆவின் குற்றங்களை எப்படி தடுக்கமுடியும்னு துறை அதிகாரிகளே கேள்வி எழுப்பறாங்க.''”

rr

"ம்... மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டது தொடர்பா நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்குது. அவர் சம்பந்தப்பட்ட ரூ.5,000 கோடி சொத்துகளில், முன்பு ஆட்சித் தலைமையில் இருந்தவரும் அவருக்கு நெருக்கமான கூட்டுறவு பொறுப்பு வகித்தவருக்கும் தொடர்பிருந்ததை ஆதாரங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்திருந்ததாம். சிக்கல் பெரிதான நிலையில்தான், அவரது தற்கொலை செய்தி வெளியே வந்தது. சூசைடு நோட்ஸ் எதுவும் இதுவரை கிடைக்காததால், தி.மு.க.வுக்கு சாதிக்பாட்சா விவகாரம் தலைவலியானதுபோல அ.தி.மு.க.வுக்கு வெங்கடாசலம்னு பேச்சு அடிபடுது.''”

"நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழக அரசு அதிக முனைப்பாக இருக்குது. ஆனால், மழை வெள்ள பாதிப்புகளால் மக்களிடமும் விவசாயிகளிடமும் அதிருப்தி நிலவுவதால், தேர்தலை மார்ச், ஏப்ரலுக்குத் தள்ளி வைக்கலாம்னு சமீபத்தில் நடந்த கேபினெட் மீட்டிங்கில் அமைச்சர் நேரு வலியுறுத்தியிருக்கார். ஆனால், டிசம்பருக் குள் தேர்தலை நடத்தி முடிக்கணும்னு நீதி மன்றம் உத்தரவு போட்டிருப்பதால், தேர் தலைத் தள்ளிப்போட வேண்டாம்னு சொல்லியிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் அறிவிப்புக்கு முன் நிவாரண அறிவிப்பு வரலாம்கிற எதிர்பார்ப்பும் இருக்குது. தேர்தலை 3 கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டி ருப்பதாகவும் தகவல் வருது.''”

nkn081221
இதையும் படியுங்கள்
Subscribe