மிழகம் முழுவதும் முந்தைய எடப்பாடி அரசில் போடப்பட்டுள்ள சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் தமிழக நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு. அதன்படி கடந்த வாரத்தில் சாலைகளிலிருந்து சாலைக் கட்டுமானத்தின் மாதிரிகள் (சேம்பிள்ஸ்) எடுத்து வரப்பட்டு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்திலும், தரக்கட்டுப்பாட்டு கோட்ட அலுவலக ஆய்வகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

officers

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ் சாலைத் துறை மற்றும் பொதுப் பணித்துறை ஆகிய 2 மிக முக்கியமான துறைகளும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச் சாமியிடம் இருந்தன. அந்த 2 துறைகளில் ஒன்றை சீனியர்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று கட்சிக்குள் மோதல்கள் வெடித்த போதும் அசைந்து கொடுக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி.

இதில் ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் நெடுஞ்சாலைத்துறைக்கு 15,000 கோடியும், பொதுப்பணித்துறைக்கு 12,000 கோடியும் ஒதுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இந்த 2 துறைகளிலுமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஊழல் பணத்தில்தான், ஜெயலலிதா இருந்தபோது கார்டனுக்கு கொடுக்கப்பட்ட கப்பம், தனக்கான அரசியல் பாதுகாப்புக்காக ஒதுக்கிக்கொண்ட கோடிகள், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்களை தன் கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு தரப்பட்ட மாத மாமூல், தேர்தலை எதிர்கொள்வதற்கான செலவினங்கள் என அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.

Advertisment

அதற்கேற்ப நெடுஞ் சாலை மற்றும் பொதுப்பணித்துறை களின் உயரதிகாரிகள், தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் காண்ட் ராக்டர்களிடமிருந்து பணம் வசூலித்து எடப்பாடிக்கு கப்பம் கட்டி வந்தனர். அந்த வகையில் ஒவ்வொரு வேலைக்கும் 35 சதவீத கமிஷன் பெறப்பட்டன. இதில் ஆட்சி தலைமைக்கு 14 சதவீதமும், உயரதிகாரிகளிலிருந்து கீழ்நிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வரை மீதமுள்ள 21 சதவீதமும் என பாகம் பிரித்துக் கொள்ளப்பட்டன.

இது குறித்து நம்மிடம் பேசும் நெடுஞ்சாலைத்துறையினர்,‘’ நெடுஞ்சாலைத்துறையில், செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (PBMC), ஒருங்கிணைந்த சாலை கட்டுமான மேம்பாட்டுத் திட்டம் (CRIDP)ஆகிய 2 ஒப்பந்த முறைகளில் டெண்டர்கள் விடப்படுகின்றன. தமிழக நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்கள் 41 இருக்கின்றன. இதில், பொள்ளாட்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பழனி, தஞ்சை, கோபி ஆகிய 9 கோட்டங்களிலும் ’செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம்’ முறையில் சாலைப் பணிகள் விடப்பட்டன. இதில், முதல் 6 கோட்டங்களில் உள்ள சாலைப் பணிகள் எடப்பாடிக்கு மிக நெருக்கமான காண்ட்ராக்டர் செய்யாதுரை- நாகராஜின் எஸ்.பி.கே. அண்ட் கம்பெனிக்கே கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோட்டத்திலும் சாலைப் பணிகளின் மதிப்பு வருஷத்துக்கு தலா ரூ.700 கோடி.

ff

Advertisment

மற்ற 3 கோட்டங்களில் கோபி கோட்டத்தில் வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.பி. இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கும், பழனி கோட்டத்தில் எடப்பாடி- வேலுமணி இருவருக்கும் நண்பரான ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷனுக்கும் சாலைப் பணிகள் கொடுக்கப்பட்டன. இவைகளின் மதிப்பு தலா ரூ.700 கோடி. தஞ்சை கோட்டத்தின் சாலை பணிகளின் மதிப்பு ரூ.1,970 கோடி என்பதால் வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.பி. இன்ஜினீயர்ஸ், வைத்தியலிங்கத்துக்கு வேண்டப்பட்ட ஜே.எஸ்.வி. மற்றும் ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக் ஷன் என 3 தரப்புக்கு பிரித்து தரப்பட்டன.

கனரக வாகனங்கள் உட்பட போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் சாலைகளை அகலப்படுத்துவதும் வலுப்படுத்துவதும் மதிப்பீடு செய்யப்படும். ஆனால், கமிஷன் தொகைகளுக்காக, 4 மாட்டு வண்டி மட்டுமே போய்வரக்கூடிய சாலைகளைக் கூட, ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களின் போக்குவரத்து நடப்பதாக கோப்புகளில் கணக்குகள் எழுதப்பட்டு, சாலைப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரித்து டெண்டர்கள் விடப்பட்டன. இதற்காகவே அதிகாரிகளும் பொறியாளர்களும் ராப்பகலாக உழைத்தனர். கனரக வாகனங்களுக்கான சாலைப் பராமரிப்புக்கு டெண்டர் எடுத்து, மாட்டு வண்டி பயணிக்கும் சாலை அளவுக்கு மட்டுமே தரம் குறைந்த வேலை செய்த ஒப்பந்ததாரர்கள், திட்டமதிப்பில் குறைந்தபட்சம் 35 சதவீத கமிஷனை மேலிடத்திற்கு வாரி வழங்கினார்கள். அந்த 35 சதவீத கமிசன் தொகைதான் 14 மற்றும் 21 சதவீதமாக பாகம் பிரிக்கப்பட்டு கொள்ளை யடிக்கப்பட்டது.

ff

இவை தவிர, ஒருங்கிணைந்த சாலை கட்டுமான மேம்பாட்டு திட்டத்தின் பணிகளுக்காக வருஷத்துக்கு 5000 கோடி ரூபாய் ஒதுக்கினார் எடப்பாடி. கடந்த 2020-21-ஆம் ஆண்டிற்கு 5,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளும் எடப்பாடிக்கு நெருக்கமான காண்ராக்டர்களுக்கே தரப்பட்டன. ஆக, எடப்பாடியின் கூட்டாளிகளான எஸ்.பி.கே. கம்பெனியின் செய்யாதுரை- நாகராஜ், எடப்பாடியின் சம்பந்தியான சுப்பிரமணியம் (எடப்பாடியின் மகன் மிதுனின் மாமனார்), சுப்பிரமணியத்தின் மற்றொரு சம்பந்தியான ஈரோடு ராமலிங்கம், நெல்லையின் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எஸ்.முருகன், விழுப்புரம் ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் ஆகியோர்களுக்கு மட்டுமே தமிழகம் முழுவதுமான நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் கிடைத்தன.

இதில் எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் எடுக்கும் பணிகளில் ஜாயிண்ட் வென்ஜர்களாக சேகர் ரெட்டியும் செய்யாதுரை- நாகராஜும் இணைத்துக் கொள்ளப் படுவார்கள். எடப்பாடிக்கு நெருக்கமான கூட்டாளி மற்றும் உறவினர்களான செய்யாதுரை, நாகராஜ், ராமலிங்கம், சுப்பிர மணியம் ஆகியோர் எடப்பாடியின் பினாமிகளாக இருப்பதாக மத்திய அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்தான், 2019-நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இவர்களின் பங்களாக்கள், அலுவலகங்கள், பண்ணை வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தி பல ஆயிரம் கோடிகளை கைப்பற்றியது மத்திய வருமானவரித்துறை.

இப்படிப்பட்ட பின்னணிகளுக்கு மத்தியில் தான் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இந்த நிலையில், மேற்கண்ட 2 ஒப்பந்த முறைகளிலும் நடந்துள்ள சாலைப்பணிகளின் நெடுஞ் சாலைத்துறை ஊழல்களை அம்பலப்படுத்த சாலைகளின் தரமறிவதற்கான முயற்சிகளில் குதித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு” என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தச் சூழலில்தான், எடப்பாடி ஆட்சியில் நடந்த சாலைப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த, நெடுஞ்சாலைத் துறையின் செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்.க்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. உடனே, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநரான தலைமைப் பொறியாளர் கீதாவுக்கும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமைப் பொறியாளர் சாந்திக்கும் தீரஜ்குமார் உத்தரவிட, சாலைகளின் தரம் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 4-ந்தேதி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்து ஆய்வுகள் எப்படி நடக்கின்றன என கவனித்தார் அமைச்சர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழல்களை அம்பலப் படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ரவி, "சாலைகளின் தரத்தை அறிய நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் 8 தரக்கட்டுப்பாட்டு கோட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இங்கு ஆய்வுகள் நடக்கின்றன. ஒரு கோட்டத்தில் உள்ள பொறியாளர்கள் மற்ற கோட்டத்துக்கு சென்று ஆய்வு நடத்துவார்கள். தரமற்ற சாலைகள் போடப்பட்டதில் கோட்டப் பொறியாளர்களும் உடந்தை. அவர்களையே கோட்டம் விட்டு கோட்டம் மாற்றி ஆய்வு நடத்தினால், தவறே நடந்திருந்தாலும் தனது சக பொறியாளர்களை எப்படி காட்டிக் கொடுப்பார் கள்? அதனால் சாலைகளின் தரமறியும் ஆய்வு களை, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களே நடத்தாமல் ஐ.ஐ.டி. அல்லது அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தினால் தான் உண்மைகள் வெளியாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, புதுக்கோட் டையில் உள்ள பேயாடிக்கோட்டை ஆற்றுப் பாலத்தின் அணுக்கச் சாலைகள் நான்கே மாதத்தில் டேமேஜ் ஆனது. 11 பொறியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில், நெடுஞ் சாலைத்துறைக்கு தொடர்பில்லாத ஐ.ஐ.டி.யிலுள்ள நிபுணர்கள் மூலம் சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தேன். கோர்ட் உத்தரவிடுவதற்குள் ஆட்சியாளர்களே ஐ.ஐ.டி. நிபுணர்களை ஆய்வு செய்ய நியமித்தனர். அதன் ஆய்வும், சாலைகளில் அனைத்து நிலைகளிலும் தரமற்றவை என டீட்டெய்ல் ரிப்போர்ட் கொடுத்ததால் அதன் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அது போல, ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்''‘என்கிறார்.

தமிழகம் முழுவதும் சாலைகள் தரமானதாக போடப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, தலைமைப் பொறியாளர்களான கீதா மற்றும் சாந்தி ஆகிய இருவருக்கும் இருக்கிறது. அவர்கள் தலைமையில் நடந்துள்ள சாலைப் பணிகளில்தான் ஊழல்களும் நடந்துள்ளன என்பது குற்றச்சாட்டு! அப்படியிருக்கையில் அவர்கள் தலைமையிலேயே ஆய்வுகள் நடத்தினால் சாலைகளின் தரத்தின் உண்மைத் தன்மை எப்படி வெளியாகும் என்கிற கேள்வியை எழுப்புகின்றனர் நேர்மையான அதிகாரிகள்.

-இரா.இளையசெல்வன்

_________________

களையெடுப்பாரா முதல்வர்?

முந்தைய அரசில் தொடங்கப்பட்ட ஒப்பந்த பணிகளுக்கும் 2 முதல் 4 சதவீத கமிஷனை வெட்ட வேண்டும்; இல்லையெனில் செய்த வேலைக்கான பில்கள் சேங்ஷன் ஆகாது என துறையின் இன்ஜினி யர்கள் மூலம் காண்ட்ராக்டர்கள் மிரட்டப்படுகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை அப்போதே கொடுத்து விட்டோம். நீங்களும் ddகேட்டால் எப்படி என்று கேட்டாலும் புதிய எம்.எல்.ஏ.க்கள் விடுவதில்லை. நகராட்சி, பொதுப்பணி, நீர்வளம், வீட்டுவசதி வாரியம், நெடுஞ்சாலை, சி.எம்.டி.ஏ., குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், சென்னை மெட்ரோ வாட்டர், போக்குவரத்து உள்பட டெண்டர் பணிகள் பலவற்றிலும் இந்த நிலைதான்.

எடப்பாடி ஆட்சியின் போது குடிசை மாற்று வாரிய பணி களுக்காக கடந்த மார்ச் மாதம் ரூ.400 கோடி நிதி அரசு தரப்பில் ஒதுக்கப்பட்டது. அந்த 400 கோடியையும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான 3 பெரிய காண்ட்ராக்டர்களுக்கும் அதிகாரிகள் பிரித்துக் கொடுத்து விட்டனர். இதனால், சிறிய காண்ட்ராக்டர்கள் 70 பேர் பாதிக்கப்பட்டனர். செய்த வேலைக்கான பில் தொகையைக் கூட இப்போது வரை பெற முடியவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிடப் பொறியாளர் சங்கங் களின் கூட்டமைப்புத் தலைவர் மு.சரவணன்,’"சிமெண்ட், கம்பி, எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களும் தற்போது 45 சதவீதம் உயர்ந்து விட்டது. 41 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது 67,000-ற்கு அதிகரித்து விட்டது. அதேபோல, 260 முதல் 330 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 510 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இப்படி கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், கமிஷன் கலாச்சாரம் ஒழிந்தால் மட்டுமே கட்டுமானத் தொழில் உயிர்மூச்சு விடும்.

மேற்கண்ட விவகாரங்களில் முதல்வர் மு.க.ஸ்டா லின் சீரியசாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் முந்தைய ஆட்சியின் கமிஷன்- கரப்ஷன்- கலெக்ஷன் இவற்றை இந்த ஆட்சியில் ஒழிக்க வேண்டு மென்றால் முதல்வரின் நேரடித் தலையீட்டால் மட்டுமே முடியும் என்கிறார்கள்.