"அகில இந்திய அளவில் எத்தனையோ அரசியல் வினோதங்கள் நடக்கும் இடம் டெல்லி. அந்த டெல்லியில் நடந்த ஒரு விவகாரம் எங்களை ஆச்சரியப் படுத்தியுள்ளது'' என்கிறது நமது டெல்லி சோர்ஸ்கள்.

tt

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மோடிக்கு மிக நெருக்கமாக இருப்பவர். அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமித்ஷாவின் இடத்தைப் பிடிக்க போட்டி போடுபவர். அவர் சென் னையைச் சேர்ந்த கூடூரு ராதா கிருஷ்ணா என்பவரை, தி.நகர் திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் உறுப்பினராக சிபாரிசு செய்ய கடிதம் கொடுத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல... மத்திய குடிநீர் வசதி (ஜல்சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய பாதுகாப் புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபதி நாயக், மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரஹலாத்சிங் படேல், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச் சர் சந்தோஷ்குமார் கெங்குவார், மத்திய போக்குவரத்துத்துறை இணையமைச்சர் விஜய்குமார் உட்பட 40 அமைச்சர்கள் மற்றும் மீனாட்சி லெகி என்கிற பா.ஜ.க.வின் முக்கிய வி.ஐ.பி. ஆகியோர், தமிழகத்தைச் சேர்ந்த பிரமுகருக்கு கையெழுத்துப் போட்டு சிபாரிசுக் கடிதம் கொடுத்ததாக, அவரே தனது சமூக வலைத்தளங்களில் விளம் பரப்படுத்தியிருக்கிறார். பா.ஜ.க. வினர் மட்டுமல்ல, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான கொங்கு நாடு மக்கள் கட்சியின் எம்.பி. யான நாமக்கல் எம்.பி. சின்ன ராஜும் கூடூரு ராதாகிருஷ்ண னுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவிக்கு சிபாரிசு செய்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

யார் இந்த கூடூரு ராதா கிருஷ்ணன் என சென்னையில் விசாரித்தோம். அவர் குடும்பப் பெயர் கூடூரு. அவரது சொந்த ஊர் குண்டூரு என்றார்கள். தி.நகர் வெங்கட் நாராயணா சாலையும் பர்கிட் சாலையும் சந்திக்கும் வோல்ட்ஸ் எனப்படும் பாருடன் தங்கும் அறைகளும் இருக்கிறது. அது இவருக்குச் சொந்தமானது. இவரை, போலீஸ் ராதாகிருஷ்ணன் என்றும் சொல்வார்கள். காவல்துறை உயரதிகாரிகளுக்கு நெருக்கமான எல்லாவிதமான வேலைகளையும் செய்பவர் என வர்ணிக்கிறார்கள். நாம் இதுபற்றி நாமக்கல் எம்.பி. சின்னராசுவிடம் கேட்டோம். "ஐயோ அப்படி எதுவும் இல்லை'' என்றார். தொடர்ந்து ராதாகிருஷ்ண னிடமே கேட்டோம். முதலில் போன் எடுத்து "ராதாகிருஷ்ணன் பேசுகிறேன்'' என்றவரிடம், விவகாரத்தைச் சொன்னதும்... "நான் அவர் தம்பி சதீஷ் பேசு றேன்'' என்றார். "ராதாகிருஷ் ணன் பற்றி நீங்கள் சொல்வ தெல்லாம் பொய்'' என்றார்.

Advertisment

தி.நகரில் உள்ள வெங்கடா ஜலபதி கோயில் தலைவரானால் திருப்பதி கோயில் நிர்வாகக் கமிட்டிக்குப் போகலாம். அதற்காக குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார். இந்நிலையில், இவருக்கு சிபாரிசு செய்த மத்திய அமைச்சர் ஷெகாவத், அவர் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை திரும்பத் தாருங்கள் என ஆந்திர அரசுக்கே எதிர் சிபாரிசுக் கடிதம் எழுதியிருக்கிறார் என்கிறது டெல்லி சோர்ஸ்கள். அட தேவுடா...