Advertisment

பிரதமர் திட்டத்தில் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் வேளாண்துறை!

farmers

நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது பழமொழி. ஆனால் புல்லெல்லாம் அனுபவித்ததுபோக மிச்சம் மீதி நெல்லுக்கும் கிடைத்திருக்கிறதென குமுறுகிறார்கள் விவசாயிகள். பிரதமர் பெயரில் செயல்படும் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழகமெங்கும் புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.

Advertisment

ff

ஐந்து ஏக்கருக்குள் நிலமுள்ளவர்களுக்கு, பாரதப் பிரதமர் விவசாயிகளுக்கான கௌரவ நிதி ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணை களாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆவணங்களை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தால் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கிற்கு மூன்று தவணைகளாக தவணைக்கு 2000 ரூபாய் என்று பணம் அனுப்பிவருகிறார்கள். இந்தத் திட்டம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வேளாண்மைத் துறைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு மாற்றம் செய்யப் பட்டதிலிருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உட்பட சுமார் 14 மாவட்டங்களில் இந்த திட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முற

நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது பழமொழி. ஆனால் புல்லெல்லாம் அனுபவித்ததுபோக மிச்சம் மீதி நெல்லுக்கும் கிடைத்திருக்கிறதென குமுறுகிறார்கள் விவசாயிகள். பிரதமர் பெயரில் செயல்படும் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழகமெங்கும் புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.

Advertisment

ff

ஐந்து ஏக்கருக்குள் நிலமுள்ளவர்களுக்கு, பாரதப் பிரதமர் விவசாயிகளுக்கான கௌரவ நிதி ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணை களாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆவணங்களை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தால் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கிற்கு மூன்று தவணைகளாக தவணைக்கு 2000 ரூபாய் என்று பணம் அனுப்பிவருகிறார்கள். இந்தத் திட்டம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வேளாண்மைத் துறைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு மாற்றம் செய்யப் பட்டதிலிருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உட்பட சுமார் 14 மாவட்டங்களில் இந்த திட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்துமாறு தமிழக வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அதிரடியாக உத்தரவிட்டார்.

Advertisment

அதன்படி கடந்த 18-ஆம் தேதி வேளாண் மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகைதந்து இங்குள்ள அதிகாரிகளுடன் தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் மூலம் இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடான வழியில் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வேளாண்மைத் துறையினர் பயன்படுத்தும் பாஸ்வேர்டைத் தெரிந்துகொண்டு பலரிடமும் கமிஷன் பெற்றுக்கொண்டு, அவர்களை விவசாயிகளாகக் காட்டி திட்டத்தில் இணைத் துள்ளது தெரியவந்துள்ளது.

ff

இந்த முறைகேடு சம்பந்தமாக ரிஷிவந்தியம் அடுத்துள்ள பகண்டை கூட்ரோடு, சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களில் ஆய்வுசெய்யப்பட்டு அவர்கள் வேளாண்துறையில் அதிகாரிகள் சிலரின் துணையுடன் போலி நபர்களுக்கு பணம் அனுப்பிவந்தது கண்டறியப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கம்ப்யூட்டர் சென்டர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா பூட்டி சீல் வைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் வேலாயுதம் தலை மையிலான குழுவினர் ஆய்வுசெய்து உடந்தைக்கு துணையாயிருந்த தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களிலிருந்து இரண்டு லேப்டாப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பகண்டை கூட்ரோடு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் அமுதா ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முறைகேடுகளுக்கு உடந் தையாக இருந்து செயல்பட்டதாக அட்மா திட்ட அலுவலர்கள் 6 பேர், கணினி தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 6 பேர், விவசாய பயிர்கள் அறுவடை பரிசோதனை செய்யும் அலுவலர்கள் 6 பேர் என மொத் தம் 18 பேரை பணியிடைநீக்கம் செய் துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 75,000 பேரின் வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் எத்தனை பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டு எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர் .

அதேபோன்று கடலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் போலியான நபர்கள் விவசாயிகளாக இணைக்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ff

""ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் நிரந்தரப் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் கம்ப்யூட்டரை இயக்கத் தெரிந்த வெளியாட்களை தற்காலிக பணியாளர்களாக அதிகாரிகள் நியமித்துள்ளனர். அப்படிப்பட்ட வர்கள் சம்பந்தப்பட்ட அலுவல கத்திலுள்ள லஞ்சப் பேர்வழிகள் துணையோடு அரசின் பாஸ்வேர்டை அறிந்துகொண்டு வெளியில் தனியார் நடத்தும் கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்'' என்கிறார்கள் அரசு அதிகாரிகள் தரப்பில்

தொப்பையாங்குளம் விவசாயி ராதாகிருஷ்ணனோ, ""எனக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் நிவாரணம் பெறுவதற்காக வேளாண்மைத்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கடந்த ஆண்டு திட்டம் துவக்கப்பட்டபோதே கொடுத்துள்ளேன். இன்றுவரை எனக்கு அந்த உதவி கிடைக்கவில்லை. ஆனால் விவசாய நிலமே இல்லாதவர்கள், வசதி படைத்தவர்கள், வியாபாரம் செய்பவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு நிவாரணம் உடனடியாக கிடைத்துள்ளது'' என்கிறார் வருத்தமாக.

""இதுசம்பந்தமாக கடந்த பிப்ரவரி மாதமே வேளாண்மைத் துறை அதிகாரிகளை சந்தித்து எங்கள் இயக்கத்தின் சார்பாக புகார் அளித்துள்ளோம். விசாரணை செய்யும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வுசெய்து இதற்கு உடந்தையாக இருந்த அரசு வேளாண்துறை அதிகாரிகள், புரோக்கர்கள் மீது கிரிமினல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் சி.பி.எம்.எல். கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன்

-எஸ்.பி.சேகர்

nkn050920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe