வளர்ச்சியை உள்ளடக்கிகய வேளாண் பட்ஜெட்! -சாதிக்கும் தி.மு.க. அரசு!

s

தி.மு.க. ஆட்சியில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை 21-ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

agri

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பச்சைத்துண்டு அணிந்து பேரவைக்கு வந்த பன்னீர்செல்வம், முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் பட்ஜெட் கோப்பினை வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். எம்.ஆர்.கே.யின் பட்ஜெட்டில் வேளாண்மையின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது வேளாண்மையின் வளர்ச்சிக் குறியீடு அதி கரித்திருப்பதை காண முடிந்தது.

தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பளவு 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித் திருக்கிறது. முந்தைய ஆண்டினை ஒப்பிடும் போது 93 ஆயிரம் ஹெக் டேர் அதிகம். அதேபோல, உணவு தானிய உற்பத்தியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியை விட 11 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அதிகரித்து நட

தி.மு.க. ஆட்சியில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை 21-ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

agri

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பச்சைத்துண்டு அணிந்து பேரவைக்கு வந்த பன்னீர்செல்வம், முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் பட்ஜெட் கோப்பினை வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். எம்.ஆர்.கே.யின் பட்ஜெட்டில் வேளாண்மையின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது வேளாண்மையின் வளர்ச்சிக் குறியீடு அதி கரித்திருப்பதை காண முடிந்தது.

தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பளவு 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித் திருக்கிறது. முந்தைய ஆண்டினை ஒப்பிடும் போது 93 ஆயிரம் ஹெக் டேர் அதிகம். அதேபோல, உணவு தானிய உற்பத்தியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியை விட 11 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அதிகரித்து நடப்பு நிதியாண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. 2023-24-ல் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித் திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.

சாகுபடி பரப்பும், உணவு தானிய உற்பத்தியும் அதிகரித்திருப்பது வேளாண் மை வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்கிறார்கள் விவசாயிகள் சங்கத்தினர்.

கிராமப்புறங்களில் முழுமையான வேளாண்மை வளர்ச்சியை உறுதிப் படுத்துவதற்குத் தேவையான கட்ட மைப்பு வசதிகளையும் பணிகளையும் மேற்கொள்ள, ’கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதற்காக 2,504 கிராமங்களுக்கு 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இலவச பம்ப் செட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள், ஆதிதிராவிட பழங்குடி யின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித்தர பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் மூலம் ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய 2 சிறுதானிய மண்டலங்கள் செயல்பாட்டில் இருந்துவரும் நிலையில், வரும் நிதியாண்டில் புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய 5 மாவட்டங்களும் இந்த மண்டலங்களில் இணைத்துக் கொள்ளப்படும் என்கிற அறிவிப்பு அந்த மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியைப் பெருக்கும் முக்கிய நடவடிக்கையாகக் கவனிக்கப்படுகிறது. இதனை ஊக்கப்படுத்தும் வகையில் சிறுதானிய இயக்கத் துக்கு 82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த நெல் ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யவும் 64 கோடி ரூபாயில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

agr

அழிந்துவரும் பனை மரத்தைக் காப்பாற்று வதற்காக விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கும் திட்டம், தக்காளி, வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராகக் கிடைக்கவும், பாரம் பரிய நெல் ரகங்களை பாதுகாத்திடவும் 30 கோடி ரூபாயில் பயிறு பெருக்கு திட்டம், சிறுதானியங் களின் பயன்பாட்டை மக்களிடம் அதிகரிக்க ரேசன் கடைகளில் சிறுதானிய விற்பனை, தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடத்தைப் பெறுவதற்கு 20 கோடி ரூபாயில் மறுநடவு புத்தாக் கத் திட்டம், மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள பண்ணை சுற்றுலா திட்டம், குளிர் கால காய்கனிகள் சாகுபடியையும் தோட்டக்கலை சாகுபடியையும் ஊக்குவிக் கும் திட்டம், உழவர் சந்தை மேம்பாடு, வெளிநாடுகளிலுள்ள வேளாண் உற்பத்தியையும் வளர்ச்சியையும் அறிந்துகொள் ளும் வகையில் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகள் 150 பேரை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல் ஆகியவை வரவேற்பைப் பெற்றுள்ளன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத் தூர், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருக்கும் 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலுள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில், 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில் 54 கோடி ரூபாய் செலவில், நபார்டு வங்கி நிதியுதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. வரும் நிதியாண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.

வேளாண்மையுடன் தொடர்புடைய கால்நடைத்துறை, மீன்வளத்துறை, எரிசக்தித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு உணவுத்துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் செயல்படுத்தப்படுவது வளர்ச்சிக்கான அக்கறையாகப் பார்க்கப்படுகிறது.

அதேசமயம் விவசாயிகளின் ஏக எதிர்பார்ப் பாக இருந்துவரும் கரும்பு டன்னுக்கு 5000, நெல் குவிண்டாலுக்கு 3000 என்கிற அளவில் உயர்த்தித் தர வேண்டுமென்கிற கோரிக்கை இந்தாண்டும் புறம் தள்ளப்பட்டிருப்பது ஏமாற்றமாக இருந்தாலும், 99 சதவீதம் வேளாண் வளர்ச்சியை உள்ளடக்கிய பட்ஜெட்டாகவே கவனிக்கப்பட்டுள்ளது.

nkn250323
இதையும் படியுங்கள்
Subscribe