Advertisment

வேளாண் பட்ஜெட்! விவசாயிகளின் குமுறல்கள்... கைத்தட்டல்கள்!

agri

டந்த மார்ச் 21ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், ரூ.38,904 கோடிக்கான வேளாண் துறை பட்ஜெட்டை, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு, பயிர் காப்பீட்டுக்காக ரூபாய் 2337 கோடி நிதி ஒதுக்கீடு, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்வோருக்கு 5 லட்ச ரூபாயுடன் கூடிய விருது வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் தரப்பில் ஆங்காங்கே குமுறல்களும் வெளிப்படுகிறது.

Advertisment

agri

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங் களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், "2023-24 நிதியாண்டு வேளாண் நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுடைய எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகி இருப்பதாகவே கருத முடிகிறது. நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை வ

டந்த மார்ச் 21ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், ரூ.38,904 கோடிக்கான வேளாண் துறை பட்ஜெட்டை, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு, பயிர் காப்பீட்டுக்காக ரூபாய் 2337 கோடி நிதி ஒதுக்கீடு, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்வோருக்கு 5 லட்ச ரூபாயுடன் கூடிய விருது வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் தரப்பில் ஆங்காங்கே குமுறல்களும் வெளிப்படுகிறது.

Advertisment

agri

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங் களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், "2023-24 நிதியாண்டு வேளாண் நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுடைய எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகி இருப்பதாகவே கருத முடிகிறது. நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்குதல், பலா சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்துதல், சிறுதானிய உற்பத்தியை அதிகப்படுத்தி நியாயவிலைக் கடைகள் மூலமாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களைக் கொடுப்பது வரவேற்புக் குரியது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக, பள்ளி மாணவர்களை விவசாயம் சார்ந்த சுற்றுலா அழைத்துச் செல்வதன் மூலம், எதிர்கால சந்ததியினர் விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக அமையும். மழை வெள்ள காலங்களில் அதிகப்படியான நீரை கடலுக்கு அனுப்பாமல் சேமிப்பதற்கு கொள்ளி டத்தில் 2 இடங்களிலாவது கதவணை கட்டப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று பெரிதும் நம்பினோம். அது பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது'' என்றார்.

agr

விருத்தாசலம் வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் கூறும்போது, "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக இரண்டாவது சுரங்க விரிவாக்கம் மற்றும் புதிதாக அமையவுள்ள மூன்றாவது சுரங்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என விவசாயிகள் போராடுகின்றார்கள். மேலும் என்.எல்.சி மற்றும் நிலக்கரி திட்டங்களுக்காக கடலூர் மாவட்டத்தில் 91 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரினோம், ஆனால் அறிவிக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் திருஆருரான் மற்றும் அம்பிகா ஆகிய 2 தனியார் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத்தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வது குறித்த எந்த உத்தரவாதமும் அறிவிக்க வில்லை. தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கான தார்ப்பாய்கள், கொட்டகைகள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் இல்லை. நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்படவில்லை. வாட்ஸ் அப் குழு உருவாக்கம் எல்லாம் பட்ஜெட்டில் வருவது வருத்தமடையச் செய்கிறது. வெளிநாட்டிற்கு விவசாயிகளை அழைத்துச்சென்று வேளாண் சம்பந்தப்பட்ட பயிற்சி அளிப்பது வரவேற்கத் தக்கது'' என்றார்.

agri

செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் முருகன் கூறுகையில், "இத்தனை ஆண்டுகாலமாக ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு வந்த மக்களுக்கு, அந்த உணவே நஞ்சாகி பல்வேறு உடல் உபாதைகளை, வாழ்நாள் நோய்களை ஏற்படுத்தி வருகின்ற நிலைமையில், மரபு சார்ந்த முறையிலான உணவு உற்பத்தி தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும் என்பதை உணர்ந்த தமிழக அரசு, இயற்கை வேளாண்மை என்ற பெயரில் "அங்கக வேளாண்மை' அறிவித் திருப்பது வரவேற்கக்கூடியது தான். ஆனால் நாங்கள் அங்கக வேளாண்மை என்பதை விட உயிர்ப்புடன் இருக்கக் கூடிய "உயிர்ம வேளாண்மை' என்பதைத்தான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். அங்கக வேளாண்மையில் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரங்கள் நீண்ட தூரத்திலிருந்து கொண்டுவரப்படுவதாலும், வெயில் போன்ற இயற்கையின் தாக்கத்தாலும் அதன் உயிர்ப்புத்தன்மை daகுறைந்துவிடும். எனவே பஞ்சகாவ்யம் போன்ற உயிர் உரங்களை அந்தந்த விவசாயிகளே உற்பத்தி செய்து உட னுக்குடன் பயன்படுத்த ஏதுவாக மரபுசார் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, உயிர் உரங்கள் உற்பத்தி செய் வதற்கான தொகையை நேரடியாக வழங்க வேண்டும்.

மரபுசார் விவசாயத்தில் ஈடுபட்டு, சிறப்பாக செயல்படும் விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவதும், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மரபுசார் நெல் விதைகளை மானிய விலையில் வழங்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கக்கூடியது. அதேசமயம், மரபுசார் முறையில் விளைவிக்கப்படும் நெல்லை கொள் முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலமாகவும், அரசு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கும், சிறைச்சாலைகளில் கைதி களுக்கும் வழங்க வேண்டும். இதன்மூலமே மரபுசார் நெல் ரகங்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியும்'' என்றார்.

விவசாயிகளின் குமுறல்களுக்கும் விரைவில் தீர்வு கண்டால் நல்லது!

nkn290323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe