தி.மு.க. அரசை ஆதரிக்கும் முகமாக மத்திய அரசைத் தாக்கிப் பேசிய அ.தி. மு.க.வின் முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிச்சாமியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இந்த விவகாரம்தான் அ.தி.மு.க.வின் மேலிடத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி.) புதிய விதிகளை எதிர்த்து தனித்தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. அரசு. அதாவது, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை (சர்ச் கமிட்டி) கவர்னரே முடிவு செய்வார் என்ற புதிய விதியை சமீபத்தில் புகுத்தியது யூ.ஜி.சி.

இந்த புதிய விதிகளின் ஆபத்தை உணர்த்தும் வகையில் அதனை எதிர்த்து, சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

s

அப்போது பேசிய அவர், "யூ.ஜி.சி.யின் நடவடிக்கை அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. துணைவேந்தரை தன்னிச்சையாக நியமிக்கும் அதி காரத்தை ஆளுநருக்கு வழங்குவது சரியல்ல. இவர்களாக ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, அதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யூ.ஜி.சி. திட்டங் களில் பங்கேற்க முடியாது என்பது அநியாயம் அல்லவா! பட்டங்களை வழங்க முடியாது எனச் சொல்வதும் பகிரங்க மிரட்டல் தானே? பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களை அபகரிக்க நினைப்பது எதேச்சதிகரமானது'' என்றார் ஸ்டாலின்.

முதல்வர் கொண்டுவந்த தீர்மானத் தை பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரித்துப் பேசின. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபைக்கு வர இயலாததால், இந்த தனித் தீர்மானத்தின் மீது விவாதிக் கும் வாய்ப்பினை முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்திருந் தார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

அதனடிப்படையில், தனித் தீர்மானத்தின் மீது பேசிய அ.தி.மு.க. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ”"புதிய விதிகள் குறித்த அறிக்கையை தன்னிச்சையாக யூ.ஜி.சி. வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. யூ.ஜி.சி.யின் புதிய விதி என்பது மாநில அரசின் மீதான மத்திய அரசின் யுத்தம். மாநில அரசின் உரிமைகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த வரைவு விதிமுறையை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும்.

இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் மூலமாக ஆதரவு கேட்காதது ஏன்? அனைத்து மாநில முதல்வர்களுடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மாநில உரிமைகளுக்கு எதிராக எந்த சட்டம் கொண்டுவரப்பட்டாலும், அதனை அ.தி.மு.க. எதிர்க்கும். அந்த வகையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை வரவேற்கிறேன்''’என்றார்.

அவரது பேச்சுக்கு தி.மு.க. உறுப் பினர்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினர். முதல்வரும் அக்ரி.கிருஷ்ணசாமிக்கு சபையிலேயே நன்றி தெரிவித்தார். இந்த நிலையில், சட்டப்பேரவை யில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சின் முழு வடிவமும் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. மறுநாள் பேரவைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. அரசுக்கு எதிராக கடுமையாகப் பேசினார்.

Advertisment

பேரவை முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவருக் குரிய தனது அறைக்குச் சென்றார் எடப்பாடி. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர் கள் பலரும் அங்கே குவிந்தனர். பேரவை நிகழ்வுகள் குறித்து இயல்பாக பேசிவிட்டு, அக்ரி.கிருஷ்ண மூர்த்தி மற்றும் சீனியர் உறுப்பினர்கள் சிலரைத் தவிர மற்றவர்களை போகச் சொல்லிவிட்டார். அப்போதுதான் அக்ரிக்கு ஏகத்துக் கும் டோஸ் விழுந்துள்ளது.

இதனைக் கேள்விப்பட்டு அது குறித்து நாம் விசாரித்தபோது, "அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கடுகடுப்பாக இருந்தார் எடப்பாடி. அவரை பார்த்து, "யூ.ஜி.சி.க்கு எதிரா ஸ்டாலின் கொண்டு வரும் தனித்தீர்மானத்தில் பேச உனக்கு வாய்ப்புத் தந்தேன். இந்த வாய்ப் பை உதயக்குமாருக்குத்தான் (எதிர்க்கட்சித் துணைத்தலைவர்) தந்திருக்கணும். அதை மீறி உனக்குத் தந்தேன். ஆனா, நீ என்ன பேசி வெச்சிருக்கே? புதிய விதியினால் என்ன பாதிப்பு வரும்? என்ன சிக்கல் வரும்? என பேசுவதை விட்டுவிட்டு, ஸ்டாலினுக்கு ஜால்ரா தட்டியிருக்கே. உன்கிட்டே ஸ்டாலின் ஐடியா கேட்டாரா? கேட்கலை இல்லே... ஆனா, நீ, மத்திய அரசுக்கு எதிரா மாநில முதல்வர்களுடன் இணைஞ்சி ஸ்டாலின் போராட்டத்தை முன்னெடுக்கணும்னு யோசனை சொல்றே. யுத்தம் அது இதுன்னெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளை பேசி இருக்கே. பேரவையில் அ.தி.மு.க.காரன் மாதிரியே நீ பேசலை. தி.மு.க.காரன் மாதிரி பேசியிருக்கே. எனக்கு ரொம்ப வருத்தம் அக்ரி. பலரும் உன்னப்பத்தி நிறைய என்கிட்டே சொல்லியிருக்காங்க. அதையெல்லாம் நம்பவில்லை நான். ஆனா, பேரவையில நீ பேசினதை கேட்கும்போது, நம்பத்தோணுது' என சகட்டுமேனிக்கு டோஸ் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

அவரது கோபத்தில் மிரண்டுபோன அக்ரி, அவரது காலைத் தொட்டு, "என்னை மன்னிச்சிடுங்கண்ணே. ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டேன்... இனி அப்படி நடக்காது, ரொம்ப ரொம்ப ஸாரி... என்னை மன்னிச்சிடுங்கன்னு வருத்தப்பட்டுப் பேசினார். ஆனாலும், தி.மு.க.வுக்கு ஆதரவா அக்ரி பேசினதை எடப்பாடியால் ஜீரணித்துக்கொள்ள முடிய வில்லை'' என்கின்றனர் அ.தி.மு.க. உறுப்பினர் கள்.

அக்ரிக்கு எடப்பாடி கொடுத்த டோஸ் தான் இப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் சுழன்றடித்துக்கொண்டிருக்கிறது!

இறுதிச்சுற்று!

aa

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை (ஜனவரி 16) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5,786 காளைகளும், 1,698 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். முன்பதிவு செய்துள்ள மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோத னை செய்தபிறகே ஜல்லிகட்டில் பங்கேற்க அனுமதிக் கப்பட்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி யை காலை 7 மணியளவில் துணை முதல்வர் உதய நிதி துவக்கிவைத்து பார்வையிட்டதுடன், களத்தில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மோதிரம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித் தார். உதயநிதியின் மகன் இன்பநிதியும் போட்டியைக் காண வருகை தந்திருந்தார். போட்டியை ஏராள மான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கேலரியில் அமர்ந்து பார்த்து ரசித்தனர்.

-அண்ணல்