"அண்ணாமலை, அமித்ஷாவுடன் தொடங்கிய பாதயாத்திரை எதிர்பாராத திருப்பங்களுடன் ‘சோக யாத்திரையாகிக்கொண்டிருக்கிறது'’ என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

அதற்கு முக்கிய காரணம் திருச்சி சூர்யா சிவா. பா.ஜ.க.வில் அண்ணாமலையால் இணைத் துக் கொள்ளப்பட்ட திருச்சி எம்.பி. சிவாவின் மகனான சூர்யா பல பூகம்பங்களை பா.ஜ.க.வில் ஏற்படுத்திவருகிறார். ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர்வால் லண்டனில் கொடுத்த கோடிக்கணக்கான பணம், ஸ்டெர்லைட்டை மறுபடியும் திறப் பேன்’என அண்ணாமலை கொடுத்த வாக்குறுதி, இவைதான் மணிப்பூர் பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலிலும் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலையின் யாத்திரை தொடக்க விழாவுக்கு வரவைத்தது.

dd

சிறப்பு விமானம், ஹெலிகாப்டர் உதவியுடன் வந்திறங்கிய அமித்ஷாவை மதுரையில் ஸ்டெர் லைட் கம்பெனி நிர்வாகிகள் வரவேற்றார்கள். ஸ்டெர்லைட்டுக்காக வந்த அமித்ஷா தொடங்கி வைத்த யாத்திரை தொடக்க விழாவில் கூட்டமே இல்லை. பத்தாயிரம் பேரை காசு கொடுத்து கூட்டிவந்த பிறகும் 22,000 இருக்கைகள் போடப்பட்ட கூட்டத்தில் 5,000 காலி இருக்கைகள் பல்லிளித்தன.

Advertisment

ஓ.பி.எஸ். ‘தன்னை அழைப்பார்கள்’ என அமித்ஷா தங்கியிருந்த ஹோட்டலிலேயே ரூம் போட்டுக் காத்திருந்தார். எடப்பாடிக்குப் பயந்து ஓ.பி.எஸ்.ஸை, அண்ணாமலை கூப்பிடவேயில்லை. அ.தி.மு.க. சார்பில் வந்த ஆர்.வி. உதயகுமாரும் மேடையில் திரா விட இயக்கங்கள் பற்றி பேசப் பட்ட விமர்சனங்களைக் கண்டு தர்மசங்கடமான சூழ்நிலையில் அப்படியும் இப்படியும் நெளிந்தபடி உட்கார்ந்திருந் தார். யாத்திரை தொடங்கியவுடன் ஒரே ஒரு கிலோமீட்டர் மட்டும் நடந்த அண்ணாமலை, மறுநாள் யாத்திரையை நிறுத்திவிட்டு, அமித்ஷா இராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்கப் போனதற்கு பாதுகாவலனாக சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் திடீரென திருச்சி சூர்யா "சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு எதிராக பேசப்போகிறேன்'’என ஒரு அறிவிப்பை வெளி யிட்டார். உடனே “"சூர்யா என்ன சொல்லப் போகிறார், அவரிடம் பேசுங்கள்''’என அண்ணாமலை தூது அனுப்ப ஆரம்பித்தார்.

"வாழ்க்கையில் யாரை நம்ப வேண்டும் என்பது முக்கியம். இதுவரை அண்ணாமலை எதை யும் செய்யவில்லை. கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யவில்லை. அண்ணாமலை ஒரு பொய்யர் என்று தெரிந்துவிட்டது. அவரது பொய் பிம்பம் உடையும்''’என சூர்யா சிவா சொல்லியிருந்தது, யாத்திரையின் முக்கியத்துவத்தை குறைத்து விடும் என உணர்ந்த அண்ணாமலை, சிவாவை தனது ஆட்கள் மூலம் சந்தித்து சமாதானம் பேசினார். அவருடன் தொலைபேசியிலும் பேசினார்.

Advertisment

suriya

"என் பாதயாத்திரை மிக முக்கியமானது. யாத்திரை முடிந்ததும் பேசிக் கொள்ளலாம்'' என அண்ணாமலை கதறிய தைக் கேட்ட சூர்யா, சமூக வலைத்தளங்களில் அண்ணாமலைக்கு எதிராக எழுதியிருந்ததை நீக்கினார். அவர் சில நிபந்தனை களை அண்ணா மலைக்கு விதித்தார். அவர் சொன்ன எதையும் அண்ணா மலையால் செய்ய முடியவில்லை. மறுபடியும் சூர்யா, தான் ஏற்கெனவே போட்ட சமூக வலைத்தளப் பதிவுகளை மீண்டும் போட்டார். இரண்டு பேரும் சமரசமில்லாமல் மறுபடியும் சமூக வலைத்தளங் களில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அண்ணா மலை தனது ஆதரவாளர்கள் மூலம் சூர்யாவை திட்டத் தொடங்கினார். பா.ஜ.க.வின் இளைஞரணி செயலாளர் ரமேஷ்சிவா என்பவர் "நீ என்றாவது உனது உண்மை நிறத்தைக் காட்டுவாய் எனத் தெரியும். திராவிடம் இட்ட பிச்சையில் உடம்பு வளர்த்த உன்னுடைய உடம்பில் எப்படி தேசிய ரத்தம் ஓட முடியும். சிங்கத் தலைவரைப் பற்றி நாய்கள் குரைக்கும், இது புதிதல்ல...''”என சூர்யாசிவா வைத் திட்ட... சூர்யாவோ, “"நீ விவாகரத்து வாங்கும்போது உன் மனைவி நீதிமன்றத்தில் கூறிய கருத்தை, வார்த்தைகளை வெளியில் சொன்னால் நீ அசிங்கமாகிவிடுவாய்''’என ரமேசின் ஆண்மை யைக் கிண்டல் செய்து சூர்யா பதிலளித்தார்.

அடுத்து, சூர்யாவை, அண்ணாமலைக்கு மிக நெருக்கமான அமர்பிரசாத் ரெட்டி விமர்சித் தார். “"பெண்களை மதிக்காதவருக்கு, பாலியல் சீண்டலில் ஈடுபடு வோருக்கு, எப்போதும் போதையில் மிதப்பவ ருக்கு, அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை யை இழுப்பவர்களுக்கு, தி.மு.க.வுடன் கள்ள உறவு வைத்திருப்பவருக்கு என்றுமே பா.ஜ.க.வில் இடமில்லை''’என அமர்பிரசாத் ரெட்டி, சூர்யாவுக்கு எதிராகப் பேசினார்.

அதற்குப் பதில் சொன்ன சூர்யா, "அண்ணாமலையின் பேரைச் சொல்லி ஊரிலிருக்கும் தொழிலதிபர் களை மிரட்டிப் பணம் சம்பாதிக்கிறாய். உதய நிதியை எத்தனை முறை நீ சந்தித்திருக்கிறாய். அவ ரிடம் எவ்வளவு ஆதாயம் பெற்றிருக்கிறாய் என் பதை முதலில் சொல்''”என பதில் சொல்லியிருக்கிறார்.

இது தவிர, பி.எல்.சந்தோஷுக்கும் அண்ணா மலைக்கும் உள்ள மோசமான தொடர்புகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ஆபாச செயல்கள் பற்றி அண்ணாமலை சூர்யாவிடம் சொன்ன தகவல் களை, சூர்யா ஆடியோ வீடியோ காட்சிகளாகவே திரட்டி வைத்திருக்கிறார். அமருக்கும், சபேரா சக்ரவர்த்திக்கும் இடையே நடந்த வசூல் சண்டை, அண்ணாமலை செய்திருக்கும் சர்வதேச முதலீடுகள், வாங்கிக் குவித்த சொத்துக்கள், அண்ணா மலையின் தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் அலீஸா, டெய்சி, கேசவ விநாயகம் போன்றவர் களின் செயல்கள் என பல விசயங்களை சூர்யா சேகரித்து வைத்திருக்கிறார். அண்ணாமலையின் யாத்திரை முடியும் வரை ஒவ்வொன்றாக வெளி யிடுவார். “"அண்ணாமலை ஒரு வெத்துவேட்டு, அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைப்பாவை. ஆர்.எஸ். எஸ். தலைவர்களுக்கு தேவையான அனைத்து விச யங்களையும் சத்தமின்றி செய்து கொடுப்பவர்''’என வெளிப்படையாகவே பேசிவருகிறார் சூர்யா.

அண்ணாமலைக்கு பேட்டியெடுக்க நடிகை சுகாசினிக்கு இருபது லட்ச ரூபாய் கொடுத்திருக் கிறாராம் அண்ணாமலை. அத்துடன், சமூக வலைத்தளங்களில் யாத்திரையைப் பற்றி எழுத பத்து கோடி ரூபாய் முன்பணமாக கொடுத்திருக் கிறாராம். அண்ணாமலையாவது, கொடுப்ப தாவது... எச்சக்கையால் காக்காய் விரட் டாத பேர்வழி, இவர் எப்படிக் கொடுத்திருப்பார் என்று எதிர் தரப்பினர் முணுமுணுக்கின்றனர். இவையெல்லாம் சூர்யா, அண்ணா மலை பற்றி வெளியிடப்போகும் ரகசியங்களை எதிர்கொள்ள அண்ணாமலை செய்யும் ஏற்பாடுகள்' என்கிறார் கள் பா.ஜ.க. வட்டா ரத்தைச் சேர்ந்த வர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்