பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இடதுசாரிச் சிந்தனையாளர்கள் வரவர ராவ் ஹைதராபாத், வெர்னோன் கோன்சல்வேஸ், அருண் பெரைரா மும்பை, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் சத்தீஸ்கர், கவுதம் நவ்ல்கா டில்லி 5 பேரை மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை கைது செய்திருப்பது, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிமன்றக் காவலில் இருக்கும் 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறது.
மாநில அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு மோடி அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிரான மறைமுக ஆபரேஷன்களை நடத்தி வருகின்றனர் உளவுத்துறையினர். இதன் ஒரு பகுதிதான் திருமுருகன்காந்தி தொடங்கி சீமான், வேல்முருகன், பெ.மணியரசன் என தமிழ்த்தேசிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் ஆபரேஷன்கள்.
இந்த நிலையில், ‘’மாநிலங்களுக்கு சென்று வரும் தேசத்தின் முக்கிய தலைவர்களுக்கு

இந்த நிலையில், ‘’மாநிலங்களுக்கு சென்று வரும் தேசத்தின் முக்கிய தலைவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு விவகாரங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தளவுக்கு கையாளப்படுகிறது? என மத்திய உள்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அதில் தமிழக நிலவரங்கள் அதிக நேரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது‘’ என்கிறார்கள் தமிழக பாம் ஸ்குவாடு பிரிவினர்.
இதுகுறித்து நாம் மேலும் விசாரித்தபோது, "தலைவர்கள் உயிருக்கு ஆபத்து! முதல்வர் துறையில் மோசடி நியமனம்' என்கிற தலைப்பில், பிரதமர் உள்பட தலைவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில் (பாம் ஸ்குவாடு) நியமிக்கப்படும் நபர்களில் 50 சதவீதம் பேர் தகுதியில்லாதவர்கள் என 4 மாதங்களுக்கு முன்பு நக்கீரனில் செய்தி பதிவானது. அந்த செய்தி சென்னையிலுள்ள தென்பிராந்திய ராணுவ ஜெனரல்வரை புகார் போனது.
இது குறித்து, ஒரு டீம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார் ஜெனரல். தமிழக காவல் துறையின் ஆபரேஷன் பிரிவின் கட்டுப்பாட்டில்தான் பாம் ஸ்குவாடு வருகிறது. இப்பிரிவின் ஏ.டி.ஜி.பி.யாக இருப்பவர் ஆசிஸ் பங்க்ரா. அவரை சந்தித்து விசாரித்த டீம் அதிகாரிகள், மத்திய அரசு அங்கீகரித்துள்ள இன்ஸ்டிடியூஷன்களில் எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பணிபுரிந்த முன்னாள் ராணுவத்தினரை மட்டுமே பாம் ஸ்குவாடில் சேர்க்க வேண்டும் என அரசாணை இருக்கிறது. அதன்படிதான் தேர்வு செய்துள்ளீர்களா எனக் கேட்டு, அதற்கான அரசாணையையும் அவரிடம் காட்டினர். எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார் ஆசிஸ்.
"பாம் ஸ்குவாடுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சான்றிதழ்களை மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டிடியூஷன்களுக்கு அனுப்பி, அவை உண்மைதானா என சோதித்துப் பார்த்தீர்களா?' என கேட்கப்பட்டதற்கும் ஆசிஸிடம் பதில் இல்லை. மேலும், "தமிழகத்தில் செயல்படும் பாம் ஸ்குவாடுக்கு தமிழகத்திலுள்ள முன்னாள் ராணுவத்தினரில் தகுதியானவர்களைத்தான் செலக்ட் செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள பாம் ஸ்குவாடில் 50 சதவீதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே, அது எப்படி?' என டீம் அதிகாரிகள் கேட்டதற்கும் மௌனமாகிவிட்டார். இதனையெல்லாம், டெல்லிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியது மத்திய உள்துறை'' என்கிறார்கள் பாம் ஸ்குவாடு பிரிவினர்.
இந்த நிலையில், காவல்துறை அமைச்சரான முதல்வர் எடப்பாடி, உள்துறை செக்ரட்டரி நிரஞ்சன் மார்ட்டியை தனது இல்லத்துக்கு வரவழைத்து நீண்ட நேரம் விவாதித்ததைத் தொடர்ந்து, பாம் ஸ்குவாடுக்காக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 7 ஹெட் கான்ஸ்டபிள்கள் என 15 பேரின் நியமன உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அந்த நியமன ஆர்டர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கோட்டையில் விசாரித்தபோது, ""பாம் ஸ்குவாடுக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க 5 பேர் கொண்ட ஒரு கமிட்டி இருக்கிறது. அந்த 5 பேரிலுள்ள ஒருவர், எப்போதெல்லாம் பாம் ஸ்குவாடுக்கு ஆள் எடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தவறாமல் கமிட்டியில் வந்து விடுவார். அவர்தான் கேரள நபர்களை உள்ளே கொண்டு வரும் புரோக்கர். பணம் கொடுத்தவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை சோதிக்காமலே ஓ.கே.செய்துவிடுவார். அதன்பிறகு, ஆசிஸ் பங்க்ரா உட்பட 2 ஏ.டி.ஜி.பி.க்கள், 4 ஐ.ஜி.க்கள் அடங்கிய குழு, காலி இடங்களின் எண்ணிக்கைக்கேற்ப நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்வு செய்வார்கள். இந்த ரூட்டில்தான் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், விசாரணை நடந்ததால் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேசமயம், பணம் கொடுத்தவர்கள் நச்சரித்த நிலையில் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். இந்த விவகாரத்தை கவர்னரின் கவனத்துக்கு கொண்டுபோகவிருக்கிறார்கள் பாம் ஸ்குவாடிலுள்ள நேர்மையானவர்கள்'' என்கிறது உள்துறை வட்டாரம். இதற்கிடையே, சென்னை காவல்துறையிலுள்ள பாதுகாப்பு பிரிவில் இருக்கும் 90 சதவீதம்பேர் 15, 20 வருடமாக ஒரே இடத்தில் இருப்பதிலும் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துவருவதாக உள்துறைக்கு புகார் பறந்துள்ளது.
மத்திய அரசின் எமர்ஜென்சி போன்ற நடவடிக்கைகளும், மாநில அரசின் செயல்பாடுகளும் மனித உரிமை சக்திகளை ஒடுக்கும் வகையிலேயே உள்ளன.
-இரா.இளையசெல்வன்