ணல் மாபியாவைப் பற்றியும் அதில் கரிகாலன் டீம் அடிக்கும் கொள்ளைகளைப் பற்றியும் நாம் கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து பலர் நம்மிடம் இது குறித்து பேச ஆரம்பித்தார்கள். அதில் முக்கிய மானவர்கள் சொன்ன ஒரு தகவல் மிக அதிர்ச்சிகரமான தகவலாக இருந்தது.

"சென்னையில் ஒருவர் ஒரு கட்டடம் கட்ட அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டினால் அதில் வரும் மண்ணை லாரியில் எடுத்துச் செல்ல முடியாது. உடனே அந்த லாரியை கரிகாலன் தலைமையிலான மணல் மாபியா டீம் வழி மறித்துவிடும். அந்த லாரி உரிமையாளர் குறிப்பிட்ட தொகையைக் கட்டினால்தான் லாரி செல்ல அனுமதிக்கப்படும். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் அரசு ஒப்பந்தக்காரர்கள்கூட கரிகாலன் டீமுக்கு காசு கொடுத்தால்தான் மண்ணை வெளியே எடுத்துக்கொண்டு செல்லமுடியும் என்கிற நிலை இருக்கிறது''’என்றார்கள்.

kk

லாரி உரிமையாளரான முனிரத்தினம் நம்மிடம் கூறுகையில், "ஆற்று மணல் குவாரிகளில் அரசு விதித்தது போல ஆன்லைன் சிஸ்டம் முறைப்படி யாரும் மணல் கொடுப்பதில்லை. லாரி உரிமையாளர்கள் யாரும் டி.டி. எடுத்துக்கொண்டு செல்வ தில்லை. சிறிய லாரிகளுக்கு 5300 ரூபாய், பெரிய லாரிகளுக்கு 7950 ரூபாய். இது தவிர குவாரி உரிமையாளர்களுக்கு இதர செலவுகளுக்காக 3000 ரூபாய் என நேரடியாகப் பணம் கொடுத்துதான் மணல் எடுக்கிறோம்''” என்கிறார்.

தமிழகத்தில் சுமார் 5000 கோடி ரூபாய்க்கு தேசிய நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் நடக்கின்றது. சென்னை கொல்கத்தா நெடுஞ் சாலை, சென்னை பெங்களூர், சென்னை திருப்பதி ஆகிய நெடுஞ்சாலைகளில் டாட்டா, எல்.அன்ட்.டி, பட்டேல் இன்பிராஸ்ட்ரக்சர் குஜராத், ஜி.ஆர். இன்பிரா பிராஜக்ட், என்.சி.சி., பி.என்.சி., அசோக் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் மும்பை ஆகிய தேசிய அளவிலான பெரிய கம்பெனிகள் இந்தத் திட்டங்களை செய்கின்றன. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஒரு பெரிய புகாரை கொடுத்திருக்கிறார்கள்.

அவர் அந்தப் புகார்களை மையப்படுத்தி, "தமிழகத்தில் சாலைப் போக்குவரத்து திட்டங்களில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கின்றன. சாலைப்பணிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றும் காண்ட்ராக்டர்களுக்கு மணல் சரியாகக் கிடைப்பதில்லை. அதனால் மத்திய அரசுத் திட்டங்கள் தாமதமாகிறது. காண்ட் ராக்டர்கள் மணல் எடுக்கும் இடங்களில் அவர்களது லைசன்சுகளைப் பயன்படுத்தி அதிக மணல் எடுக்கப்படுகின்றது''” என்று பாராளுமன்றத்தில் நிதின் கட்கரி பேசினார்.

Advertisment

kk

அதற்கு தயாநிதி மாறன் மறுப்புத் தெரிவித்துப் பேசும்போது, “"தமிழகத்தில் மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தாமதமாக நடக்கின்றன என்று காஞ்சிபுரம் பூந்தமல்லிக்கு இடையேயான நெடுஞ்சாலைப் பணிகள் மந்தமாக நடப்பதைப் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்குப் பதிலாகவே நிதின் கட்கரி இந்த ஊழல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்'' என்றார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள், மத்திய கணக்கு மற்றும் தணிக்கைக் குழுவால் மேற்பார்வை செய்யப் படுபவை. அதில் முறை கேடுகள் நடக்கும் என்றால் சி.பி.ஐ. நேரடியாக களத்தில் குதிக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு மணல் எடுக்க வேண்டிய இடத்தில் அதிக அளவு மணல் எடுக்கப் பட்டால் சி.பி.ஐ. அந்த காண்ட்ராக்டரை கைது செய்யும். இதுதான் நிதின் கட்கரி தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளை பற்றி பாராளுமன்றத்தில் சொன்ன பதிலின் எதிர்வினை.

kk

இதைப்பற்றி மேலும் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள், "கரிகாலன் கம்பெனியும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர்ரெட்டி ஆகியோருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை செய்கிறார்கள். சேகர்ரெட்டி மதுரையிலிருந்து குமரி வரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தத் திட்டப் பணிகளை செய்கிறார். அதை சேகர்ரெட்டிக்காக செய்து கொடுப்பது கரிகாலனுடன் சேர்ந்து தொழில் செய்யும் இருவர்தான்''’என்கிறார்கள்.

இப்படியாக, “ஒருபுறம் மணலை எடுக்கும் இடத்திலும், மறுபுறம் அந்த மணலைப் பயன் படுத்தி ஒப்பந்த வேலைகளையும் கரிகாலன் கம்பெனி செய்து வருகிறது. மூவாயிரம் கோடி புழங்கும் இந்தத் தொழிலில், மணலுக்கோ கருங்கல்லுக்கோ யாரும் ஜி.எஸ்.டி. கட்டுவதில்லை. ஆனால், லாரி உரிமையாளர் களிடம் மட்டும் ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்படுகிறது. “ஜி.எஸ்.டி. தொகையில் முறைகேடு செய்தால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும்” என சமீபத்தில் பாராளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ff

Advertisment

கரிகாலன் கம்பெனியின் பார்ட்னரான சேகர்ரெட்டி மீது 2016ஆம் ஆண்டே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் அதிலிருந்து வெளிவந்து விட்டார். ஆனால் தமிழக கனிமவளத்துறையில் கரிகாலன் டீம் அடிக்கும் கொள்ளை களால் பொன்முடியைத் தொடர்ந்து கரிகாலன் டீம் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் பாயலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

_______________

இறுதிச் சுற்று!

ரூ.100 கோடி சொத்து ரத்து! கைதாகிறாரா நயினார் பாலாஜி?

kk

சென்னை விருகம் பாக்கம் பகுதியில் ரூ 100 கோடி மதிப்பில் மதுரை மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக் கோவிலுக்குச் சொந்த மான 1.3 ஏக்கர் நிலம் உள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த சொத்தினை ரூ 46 கோடிக்கு வாங்கிய நயினார்பாலாஜி, சென்னையில் பத்திரப்பதிவு நடைபெற்றால் அரசியல்ரீதியாக தமக்கு சிக்கலாகிவிடும் என்பதால், நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி சார்பதிவாளர் அலுவல கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி மோசடியாக பத்திரப் பதிவு செய்துள்ளார்.

தனது பதிவை நியாயப் படுத்த, நயினார் பாலாஜியோ ராதாபுரம் பகுதியில் எனக்கு வீடிருக்கின்றது. அதுபோக இது திருக்கோவில் சொத்தும் அல்ல என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். விசாரணை யில், ரூ 100 கோடி சொத்துப் பதிவிற்கு பிறகே அவசர அவசரமாக ராதாபுரம் பகுதியில் நயினார் பாலாஜி பெயரில் வீடு வாங்கப்பட்டிருந்தது தெரிய வர... 20-ஆம் தேதி வியாழக்கிழமை, நெல்லை மண் டல பத்திரவுப் பதிவு துறைத் தலைவரால் ரூ100 கோடி மதிப்பி லான மோசடிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

இந்திய தண்டனை சட்டம் 463, 470-ன் படி வழக்குப் பதிவு செய்து விரைவில் நயினார் பாலாஜி கைதுசெய்யப்படலாம் என் கின்றன அரசியல் வட்டாரங்கள்.

-நாகேந்திரன்

காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்து விடாததால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு குறித்தும், தமிழகத் திற்குரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வ-யுறுத்தியும் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகா வத்துக்கு 20-07-2023 அன்று அவசர கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டா-ன். முதல்வர் எழுதிய கடிதத்தை அமைச்சர் ஷெகாவத்தை டெல்-யில் சந்தித்து கொடுத்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன். தமிழகத்துக்கு ஜூலை 1 முதல் 17-ந்தேதி வரை, உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி யுள்ள அட்டவணையின்படி 26.32 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டி ருக்க வேண்டும். ஆனால், வெறும் 3.78 டி.எம்.சி. நீர் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது. 22.54 டி.எம்.சி.நீர் திறக்கப்பட வில்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டியதுடன் தமி ழகத்திற்குரிய நீர் பங்கினை கர்நாடக அரசு திறந்து விடாததால் தமிழகத்தில் ஏற் பட்டுள்ள விவசாய பாதிப்பு களையும் விரிவாக தனது கடிதத்தில் விவரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டா-ன்.

-இளையர்