நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எதிர்பார்த்தது போலவே மூன்றாவது முறை வெற்றி பெற்றுவிட்டார். இண்டியா கூட்டணி வெற்றிக்கோட்டை நெருங்கிய நிலையில் தோல்வியடைந்துள்ளது. இப்போதுள்ள சூழலில், ஆட்சியமைக்க முடியாத இண்டியா கூட்டணியைவிட, மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள மோடிதான் பெருத்த மன உளைச்சலில் இருக்கிறார். ஆம், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ஆதார் என்றெல்லாம் உதார் விட்டுக்கொண்டிருந்த மோடி, தற்போது தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க முடியாமல், கூட்டணிக்கட்சிகளின் தயவை நாடவேண்டிய சூழல்.
கடந்த இரு ஆட்சிக்காலத்திலும் பெரும்பான்மை பலத்துடன் இருந்ததால், திடீரென பணமதிப்பிழப்பை அறிவித்தார், ஜி.எஸ்.டி. கொண்டுவந்தார், மக்களைப் பிளவுபடுத்தும் சட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்தார்... ஒரு சர்வாதிகாரியைப்போல் விருப்பம்போல் செயல்பட்டார். ஆனால் தற்போது தனி மெஜாரிட்டி இல்லாததால் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போன
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எதிர்பார்த்தது போலவே மூன்றாவது முறை வெற்றி பெற்றுவிட்டார். இண்டியா கூட்டணி வெற்றிக்கோட்டை நெருங்கிய நிலையில் தோல்வியடைந்துள்ளது. இப்போதுள்ள சூழலில், ஆட்சியமைக்க முடியாத இண்டியா கூட்டணியைவிட, மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள மோடிதான் பெருத்த மன உளைச்சலில் இருக்கிறார். ஆம், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ஆதார் என்றெல்லாம் உதார் விட்டுக்கொண்டிருந்த மோடி, தற்போது தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க முடியாமல், கூட்டணிக்கட்சிகளின் தயவை நாடவேண்டிய சூழல்.
கடந்த இரு ஆட்சிக்காலத்திலும் பெரும்பான்மை பலத்துடன் இருந்ததால், திடீரென பணமதிப்பிழப்பை அறிவித்தார், ஜி.எஸ்.டி. கொண்டுவந்தார், மக்களைப் பிளவுபடுத்தும் சட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்தார்... ஒரு சர்வாதிகாரியைப்போல் விருப்பம்போல் செயல்பட்டார். ஆனால் தற்போது தனி மெஜாரிட்டி இல்லாததால் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போன்ற நிலை தான்! எதுவானாலும் கூட்டணிக்கட்சிகளைக் கலந்தாலோசித்துதான் முடிவெடுத்தாக வேண்டும். முக்கிய அமைச்சர் பொறுப்புக்களை அவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற நெருக்கடியில் மன உளைச்சலில் இருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இதே நிலை தான்.
இண்டியா கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், கவுரவமான வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக, எக்ஸிட் போல் ரிசல்ட் என்ற பெயரில், மோடிக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட அனைத்துக் கருத்துத் திணிப்புக்களையும் உடைத்தெறிந்து, பா.ஜ.க. கூட்டணியையே தண்ணி குடிக்க வைத்துவிட்டது. காங்கிரஸ் மட்டுமே 99 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 47 இடங்கள் கூடுதலாக வென்றுள்ளது. பா.ஜ.க. 63 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. பாரத ஒற்றுமை நடைபயணம் வெர்ஷன் 1, வெர்ஷன் 2 என இந்தியா முழுக்க ராகுல் காந்தி நடைபயணமாகச் சென்று ஆதரவு திரட்டினார். மோடி நுழைவதற்கு பயந்த மணிப்பூருக்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். ராகுல்காந்தியின் நடைபயணத்தால் எழுந்த எழுச்சியைப் பார்த்து, உத்தரபிரதேசத்தினுள் ராகுல்காந்தியின் நடைபயணத்துக்கு யோகி அரசு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தது. அவற்றையெல்லாம் மீறித்தான் பயணித்தார். அதேபோல் பாராளுமன்றத்திலும் மோடி அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விவாதித்தார் ராகுல். இதற்காக ஒரு கட்டத்தில் எம்.பி. பதவியையே இழந்து, பின்னர் நீதிமன்றத்தின் மூலம் தனக்கான நீதியைப் பெற்றார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கினார்கள். அந்த கூட்டணியின் சார்பாகவே பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார்கள். இந்த கூட்டணியில், கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிக்கல்கள் எழுந்தபோதும், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இண்டியா கூட்டணியின் பலம் வெற்றியைத் தேடித்தந்தது.
தற்போது நடந்துமுடிந்த தேர்தல், மோடி அசைக்கமுடியாத தலைவர் என்ற பிம்பத்தை நொறுக்கியுள்ளது. மோடியே தனது தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து பின்னர்தான் மீண்டார். அதேபோல், அவரால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. மிகமுக்கியமாக, அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியிலும் சரி, உத்தரபிரதேச மாநிலத்திலும் சரி, பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்துள்ளது. ராகுல்காந்தி -அகிலேஷ் யாதவ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே அடுத்த ஐந்தாண்டு காலத்தில், புத்துணர்வோடு முழுநேர அரசியல்வாதியாக ராகுல்காந்தி செயல்பட வேண்டும். பாராளுமன்றத்தில் மோடி அரசு கொண்டுவரும் மக்கள்விரோத சட்டங்கள் அனைத்தையும் வலுவாக எதிர்த்து வாதிட வேண்டும். ஏற்கெனவே கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அக்னி வீரர்கள் திட்டத்துக்கு நிதீஷ்குமாரே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆக, இத்திட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரலெழுப்பினால், பீகாரிலும் மக்கள் செல்வாக்கை ராகுல்காந்தி அதிகரிக்க முடியும். இதேபோல், நடப்பு தேர்தலில் காங்கிரஸôல் வெற்றிபெற இயலாத மாநிலங்களில் காங்கிரûஸ வளர்த்தெடுப்பதற்கான திட்டமிடலில் ஈடுபட வேண்டும்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு துடிப்பான அரசியலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவோடு மேலும் பல மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி, அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 200+ சீட்டுகள் என்ற இலக்கில் வெற்றியைப் பெறுவதற்கான முயற்சியை ராகுல்காந்தி முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, காங்கிரஸ்காரர்களாக இருந்து, பா.ஜ.க.வுக்கு மாறிய மக்களுக்கு, காங்கிரஸ் மீது நம்பிக்கையூட்டி, மீண்டும் தங்கள் கட்சிக்கு கொண்டுவரும் பெரும்பணியை ராகுல் காந்தி செய்துமுடித்தால், அடுத்த பிரதமராக உருவெடுப்பது சாத்தியமே!