தூத்துக்குடியின் வரலாற்றில் இது போல் ரூ.28 கோடி மதிப்புள்ள வெளி நாட்டுப் போதைச் சரக்கான ஹெராயின் பிடிபட்டதில்லை என்று மாநகரக் காக்கிகளே திகைத்து நிற்கிறார்கள். அத்தனை பெரிய மெகா கேட்ச் அப் என்று வாய்விட்டுச் சொல்லுபவர்கள், "ஆரம்பத்தில் நாங்கள் இந்தளவுக்குப் போகும் என்று எண்ணவில்லை, கிடைத்த புள்ளி வழியாகப் போனபோது கையில் விலாங்கு மீன் கிடைக்கும் என்பார்களே, அது போலதான் இந்த பம்பர் அயிட்டம் சிக்கியது" என்கிறார்கள்.

hh

Advertisment

கடந்த வாரம் பின்னிரவின் போது தூத்துக்குடி எஸ்.பி.யான ஜெயக்குமாரின் செல்போன் சிணுங்கியிருக்கிறது. அந்த நேரத்திலும் அட்டெண்ட் செய்த எஸ்.பி.யிடம் மறுமுனையில் பேசிய ஆட்டோ டிரைவர் ஒருவர், "ஐயா, ரெண்டு மூணு நாளா அண்ணாநகர், டூவிபுரம் ஏரியாவுல ரெண்டு மூணு வாலிபப் பையங்க பவுடர் பொட்டலம் விக்கிறானுவ. அதச் சாப்பிட்ட பசங்க கொஞ்ச நேரத்தில போதைல தடுமாறிப் போய் கெறக்கத்தில் இருக்காங்கய்யா" என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த நொடியே அலர்ட் ஆன எஸ்.பி., நகரின் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் தேர்ந் தெடுக்கப்பட்ட 8 பேர் கொண்ட தனிப்படை அமைத்து, அவர்களைச் சாதாரண மனிதர்களைப் போல் களத்தில் இறக்கியிருக்கிறார். நடவடிக்கை யில் இறங்கியதும், குறிப்பிட்ட சில பகுதிகளைத் தங்களின் ஷேடோவுக்குள் கொண்டு வந்தவர் களுக்கு உழைப்பு வீண் போகவில்லை. டூவிபுரம் ஏரியாவின் பரபரப்புப் பகுதியில் சந்தேகத்திற்கிட மாகத் தெரிந்த அண்ணா நகரின் அன்சார்அலி, காலனிப் பகுதியின் மாரிமுத்து, டூவிபுரம் ஏரியாவின் இம்ரான்கான் ஆகிய மூவரையும் பிடித்து ரெண்டு தட்டு தட்டியபோது, அவர்களின் அண்டர் வேரிலிருந்து 162 கிராம் எடையுள்ள வெள்ளைப் பவுடர் போன்றிருந்த பாக்கெட்கள் விழுந்திருக்கின்றன.

Advertisment

hh

போலீஸ் தன் பாணியில் விசாரிக்கையில், ஒரு வாரமாக விற்பனை செய்வதாகவும், அதனைத் தருவைக்குளம் அந்தோணிமுத்து விற்கச் சொன்ன தாகவும் அவரைக் கை காட்டியிருக்கிறார்கள். அடுத்ததாக, அந்தோணிமுத்து வீட்டிற்குச் சென்ற தனிப்படை, அங்கே திமிங்கலம் சிக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சோதனையில் அத்தனை பெரிய பண்டல்கள்... ஏறத்தாழ 19 பாக்கெட்களில் மிகவும் சேஃப்டியாகப் பேக் செய்யப்பட்ட 21 கிலோ ஹெராயின் போதைப் பவுடர் சிக்கியது கண்டு வியர்த்துப் போனார்கள். ஏனெனில், இதுபோன்ற வெளிநாட்டுப் போதைச் சரக்கான ஹெராயினை இதுவரையில் தூத்துக்குடி வட்டாரத்தில் கண்டதில்லையாம்.

தனிப்படையின் ஆரம்பகட்ட உபசரிப்பி லேயே அவர்களுக்கு வேலை வைக்கவில்லை. அந்தோணிமுத்து தனக்கு மீன் பிடிப்பதே தொழில் என்றவர், ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய படகில் லட்சத்தீவுப் பக்கம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் பெரிய பார்சல் ஒன்று மிதந்து வந்தது. அதை வீட்டிற் குக் கொண்டு வந்து பார்த்தபோது, பேக்கிங் செய்யப்பட்ட 27 பார்சல்களில் 32 கிலோ பவுடர் இருந்தது. அது என்ன பொருளென்று எனக்குத் தெரியாது. அதை இங்கு வைத்திருந் தால் பிரச்சினை என்பதால் தனக்கு நெருக்கமான உறவினர் வீட்டில் பதுக்கி வைத்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே ஆட்கள் மூலம் விற்பனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார்.

tt

அதையடுத்தே பிடிபட்ட மொத்தச் சரக்கையும், அன்சார் அலி, மாரிமுத்து, இம்ரான்கான், முக்கியப் புள்ளியான அந்தோணிமுத்து, அவரது அல்லக்கைகளான பிரேம் சிங், கசாலி உட்பட ஆறு பேர்களையும் எஸ்.பி. ஜெயக்குமா ரிடம் சரண்டர் செய்த தனிப்படையினர் நடந்தவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். மிகப்பெரிய கைப்பற்றலை நடத்திய தனிப்படையைப் பாராட்டியிருக்கிறார் எஸ்.பி.

தென்மாவட்டப் போதை சேஸிங்கில் இது பெரிய முதலை என்று காவல்துறையில் பேசப்படுகிறது. இதுகுறித்து தனிப்படையின் முக்கிய அதிகாரி மற்றும் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பு அதிகாரிகளிடம் பேசியபோது தான், இதில் வெளிநாட்டு போதை மாஃபியாக்களின் நெட் ஒர்க் இருப்பதையறிந்து அதிர்ச்சியானோம்.

"கடந்த மார்ச் மாதம், எங்களின் தென்மாவட்டக் கடலோரக் கப்பல் படை மற்றும் மத்திய அரசின் கப்பல் படை சகிதம் மத்திய அரசின் போதை தடுப்பு பிரிவு படையான என்.சி.பி.யினர், கிடைத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி கடல் மார்க்கத்தையொட்டிய அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகளை ஒட்டியுள்ள மினிக்காய் தீவுப்பக்கம் சிறிய கப்பலைப் போன்ற படகில் சென்றபோது, இலங்கை யைச் சேர்ந்த மூன்று பேர் சிக்கினர். அவர்களின் படகைச் சோதனையிட்ட தில், அவர்கள் விட்டுவைத்த, மறந்து போன சிறிய அளவிலான போதைச் சரக்கு கிடைத்திருக்கிறது.

அவர்களை முறையாக என்.சி.பி. யினர் விசாரித்தபோது, தங்களின் விசைப்படகை காவல் படை சேஸ் செய்வதையறிந்து பயத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த பெரிய பெரிய ஹெராயின் போதைப் பண்டல்களைக் கடலில் தள்ளி விட்டதாகத் தெரிவித்தவர்கள், இந்தச் சிறிய பார்சலை மறந்து விட்டோம் என்றிருக்கிறார்கள். பின்னர் படகுடன் இலங்கைக் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். அப்படி அவர்கள் கடலில் தள்ளி விட்ட பெரிய பார்சல் களில் ஒன்று தான் அந்தோணிமுத்து வசம் சிக்கியது. பொதுவாக தூத்துக்குடிக் கடல் மார்க்கத்தையொட்டிய லட்சத்தீவு, மினிக்காய்தீவு கடல் பகுதிகளில் சர்வதேச போதை மாஃபியாக் களின் நடமாட்டம் உண்டு. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தயாரிப்பான ஹெராயின் போதை அங்குள்ளவர்களால் கடத்தப்பட்டு கடல் மார்க்கமாக லட்சத்தீவு, மினிக்காய் தீவுகளின் பக்கம் கொண்டுவரப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் குட்டிக் குட்டித் தீவுகள் அதிகம். நேவிக்காரன் சேஸ் செய்தால் மாஃபியாக் கள் மிகச் சுளுவாகத் தப்பித்து ஏதாவது ஒரு குட்டித் தீவில் பதுங்கிவிடலாம். தவிர, மறைவு களைக் கொண்ட பகுதி என்பதால் கடத்தலுக்கும், ஷிப்ட் பண்ணவும் ஏற்ற பூகோள அமைப்பைக் கொண்டது. இந்த வழியில் கொண்டு வரப்படும் உலக போதைச் சரக்குகள், இப்பகுதியில்தான் டான்களுக்குக் கை மாற்றப்படுகின்றன. பின்னர் அவை அங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மாலத்தீவு, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து போன்ற உலகின் பிற நாடுகளுக்குக் கடத்தப்படுகின் றன. இது தெரிந்துகொண்டுதான் மத்திய என்.சி.பி. பிரிவினர் மினிக்காய் தீவு வந்தபோது தப்ப நினைத்த கடத்தல்காரர்கள், மொத்தச் சரக்கையும் கடலில் தள்ளியிருக்கிறார்கள். தொடர்ந்து, இன்றளவும் மினிக்காய் தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேசப் போதைக் கடத்தல் மாஃபி யாக்களின் டிரான்ஷிப்மெண்ட் பாயின்ட்டாக உள்ளன. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு கடல் மார்க்கமாக விரைவில் கொண்டுசெல்லக் கூடிய கடலமைப்பு இருப்பதாலேயே சர்வதேச டான்கள் இங்கே சங்கமிக்கிறார்கள்" என்றார் விரிவாக.

yy

பிடிபட்ட மொத்த ஹெராயினின் இந்திய மதிப்பு ரூ.28 கோடி என்றால், இதன் சர்வதேச மதிப்பு ரூ.40 கோடியாகும். இலங்கைக் கடத்தல் காரர்களால் தள்ளிவிடப் பட்டுக் கடலில் மிதந்த சரக்கைக் கொண்டுவந்த அந்தோணிமுத்துவுக்கும் அவனது வகையறாக்களுக் கும் இது போதைச் சரக்கா, என்ன மாதிரியான சரக்கு என்பது தெரியாது. சிக்கியதை அந்தோணி முத்துவால் வெளியே சொல்லமுடியவில்லை. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியோ இங்கே விற்க முயற்சி செய்திருக்கிறார்கள். இரண்டு மூன்று மாதமாக இதுதான் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான், போதைச் சரக்கின் புரோக்கரான அண்ணாநகரின் முருகன், விலைமதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்களின் விவரத்தைச் சொல்லாமலேயே பாக்கெட் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்து வாங்கவும், அந்தோணிமுத்து அசந்து விட்டான்.

குஷியான அந்தோணிமுத்து, இந்த விஷ யத்தை அமுக்க, அந்த பணத்தைக்கொண்டு தன் சகாக்களுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம்னு கொடுத் திருக்கான். புரோக்கர் முருகனோ பாக்கெட் ஒன்றை ஒரு லட்சத்திற்கும் மேல் விற்றிருக்கிறான். ஏழே பாக்கெட்களில் பம்பர் அமவுண்ட் அடிச்சிருக்கான். இவர்கள் போதைக் கடத்தல்காரர்களாக இருந்தால், சரக்கு கிடைத்த ஓரிரு நாட்களிலேயே பல கைகள் கடந்திருக்கும். விவரம் தெரியாததால்தான் ஒன்பது மாதமாகச் சரக்கை வைத்திருக்கிறார்கள்" என்கிறார் தனிப்படை அதிகாரி.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமா ரிடம் பேசியபோது, "எங்களுக்குக் கிடைத்த தகவலடிப்படையில் தொடர்ந்து விசாரித்ததில் சிக்கிய பெரிய அளவிலான ஹெராயின். பாக்கெட் களில் ப்ரென்ஞ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அதையும் சரிபார்த்து விட்டோம். இதில் புரோக் கர் முருகனைத் தேடுகிறோம். அவர் சிக்கினால் பெரிய விஷயங்கள் கிடைக்கும். மேலும் இது தூத்துக்குடி வழியாகக் கடத்தப்படவில்லை. விற்பனைக்குப் போயிருக்கிறது. போதைக் கடத்தல்காரர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டம்தான்'' என்றார். உலக போதைக் கடத்தல் மாஃபியாக்களின் சங்கமமாகிறது தூத்துக்குடிப் பகுதி கடல் மார்க்கம்.