உலக அளவில் ஹெராயின் உள்ளிட்ட முதல் தர போதைப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தியும் செய்யும் நாடாக இருக்கிறது ஆப்கானிஸ்தான். போதைப் பொருள் உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆப்கானிஸ்தான் தயாரிக்கிறது. ஆப்கான் நாட்டின் அதிபராக அஷ்ரப் கனி இருந்தவரை ஹெராயின் போதை பொருள் உற்பத்தியை ஓரளவு தடுத்து வைத்திருந்தார்.
ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நிதி உதவியையும் ஆதரவையும் அளிக்க மறுத்துவிட்ட நிலையில் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது ஆப்கான். இதனால், போதைப் பொருள் உற்பத்தியை துவக்கி சர்வதேச நாடுகளுக்கு கடத்தத் துவக்கியிருக்கிறார்கள் தலிபான்கள். அந்த வகையில் தலிபான்கள் குறி வைத்த நாடுகளில் மிக முக்கியமானது இந்தியா.
அதன்படி, ஈரான் வழியாக இந்தியாவின் குஜராத்திலுள்ள முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை மடக்கியிருக்கிறார் கள் இந்திய அதிகாரிகள். இந்த கடத்தல் தொடர்பாக சென்னையில் பதுங்கியிருந்த சுதாகர்-வைசாலி தம்பதி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரு.21,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணிகள் குறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தோம்.
இந்தியாவின் நட்பு நாடுதான் ஈரான். ஆனாலும் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து குஜராத்தில் தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முந்த்ரா
உலக அளவில் ஹெராயின் உள்ளிட்ட முதல் தர போதைப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தியும் செய்யும் நாடாக இருக்கிறது ஆப்கானிஸ்தான். போதைப் பொருள் உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆப்கானிஸ்தான் தயாரிக்கிறது. ஆப்கான் நாட்டின் அதிபராக அஷ்ரப் கனி இருந்தவரை ஹெராயின் போதை பொருள் உற்பத்தியை ஓரளவு தடுத்து வைத்திருந்தார்.
ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நிதி உதவியையும் ஆதரவையும் அளிக்க மறுத்துவிட்ட நிலையில் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது ஆப்கான். இதனால், போதைப் பொருள் உற்பத்தியை துவக்கி சர்வதேச நாடுகளுக்கு கடத்தத் துவக்கியிருக்கிறார்கள் தலிபான்கள். அந்த வகையில் தலிபான்கள் குறி வைத்த நாடுகளில் மிக முக்கியமானது இந்தியா.
அதன்படி, ஈரான் வழியாக இந்தியாவின் குஜராத்திலுள்ள முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை மடக்கியிருக்கிறார் கள் இந்திய அதிகாரிகள். இந்த கடத்தல் தொடர்பாக சென்னையில் பதுங்கியிருந்த சுதாகர்-வைசாலி தம்பதி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரு.21,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணிகள் குறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தோம்.
இந்தியாவின் நட்பு நாடுதான் ஈரான். ஆனாலும் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து குஜராத்தில் தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்துக்கு, முகப்பூச்சு பவுடர் பொருளை இறக்குமதி செய்யும் கண்டெய்னர்கள் அடிக்கடி வந்ததால் அதன் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு சந்தேகம் வந்தது. குறிப்பாக, மத்திய உளவு அமைப்புகளில் ஒன்றான ரா அதிகாரிகள் இந்த சந்தேகத்தை தங்களின் மேலிடத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த தகவல், வருவாய் புலனாய்வு துறையின் இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பாஸானது. உடனே தனது துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோ சனை நடத்தியிருக்கிறார் சஞ்சய் மிஸ்ரா. அந்த ஆலோசனையில்தான், சம்மந்தப்பட்ட கண்டெய்னர்கள் ஈரானிலிருந்து வருகிறதா? அல்லது ஈரான் வழியாக வருகிறதா? என தெரிய வேண்டும் என விவாதிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து, தங்களின் மேலதிகாரிகளுக்கு இதனை தெரியப்படுத்த... அவர்களும் ஈரானில் விசாரித்தபோதுதான் அந்த கண்டெய்னர்கள் ஆப்கானில் இருந்து தரை மார்க்கமாக ஈரான் வந்து, ஈரானிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது என்கிற தகவலை பெறுகிறார்கள். இந்த தகவல் சஞ்சய் மிஸ்ராவுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம். அதில், முகப் பவுடர்களுக்கான மூலப்பொருள் ஆப்கானில் பெரியளவில் கிடைக்காதபோது அங்கிருந்து அதனை அடிக்கடி எப்படி இறக்குமதி செய்ய முடியும்? என்ற சந்தேகம் வலுத்த நிலையில்தான், முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த 40 டன் கொள்ளளவு கொண்ட 2 கண்டெய்னர்களை சோதிப்பது என முடிவு செய்து களத்தில் இறங்கியிருக்கிறது வருவாய் புலனாய்வுத்துறை.
வருவாய் புலனாய்வுத்துறையினரும் போதைப்பொருள் தடுப்புத்துறையினரும் இணைந்து கண்டெய்னர்களைச் சோதனை செய்தபோது, முகப்பவுடர்களுடன் ஹெராயின் போதைப் பொருள் பாக்கெட்டுகளும் இருந்தன. ஒரு கண்டெய்னரில் 1999.579 கிலோ ஹெராயினும், மற்றொரு கண்டெய்னரில் 988.64 கிலோ ஹெராயினும் என சுமார் 3,000 கிலோ எடையுள்ள போதைப் பொருளை கைப்பற்றினர். இன்றைய சர்வதேச மார்க்கெட்டில் 1 கிலோ ஹெராயின் 7 கோடிக்கு விற்பனையாவதால் தற்போது பிடிபட்டுள்ள ஹெராயின் மதிப்பு 21,000 கோடி. இந்த கண்டெய்னர்களை ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் இருக்கும் ஆஷி டிரேடிங் கம்பெனி இறக்குமதி செய் திருப்பதற்கான ஆவணங்களும், இந்த பார்சல்கள் விஜயவாடாவுக்கு செல்லாமல் டெல்லிக்கு செல்லவிருப்பதற்கான ஆவணங்களும் கிடைத்தன. இதனையடுத்து ஒரு டீம் விஜயவாடாவுக்கும், ஒரு டீம் டெல்லிக்கும் சென்று சம்பந்தப்பட்ட முகவரியில் விசாரித்திருக்கின்றன.
டெல்லி முகவரியில் இருந்த 4 ஆப் கானிஸ்தானியரும் ஒரு உஸ்பெஸ்கிஸ்தானிய ரும் கைது செய்யப்பட்டார்கள். அதேபோல விஜயவாடாவில் அதிகாரிகள் சோதனையிட்ட போது அந்த நிறுவனத்துக்கும், சென்னை கொளப்பாக்கம் வ.உ.சி.தெருவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுதாகருக்கும், அவரது மனைவி வைசாலிக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். சென்னை காவல்துறையின் உதவியுடன் சுதாகரையும் அவரது மனைவியையும் கைது செய்து குஜராத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டுள்ள அவர்களை போலீஸ் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வுத்துறையும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது ‘ என்கிறது உளவுத்துறை வட்டாரம்.
மேலும் நாம் விசாரித்தபோது, ‘’சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கும் சுதாகர், விஜயவாடாவை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு சென்னையில் செட்டிலாகியிருக்கிறார். இந்தியாவில் உள்ள சில ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களில் மேனேஜராக பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் சுதாகருக்கு இருக்கிறது. பணிபுரிந்த காலத்தில், இந்த தொழிலிலுள்ள அனைத்து நெளிவு சுளிவுகளையும் கற்றுக் கொண்டிருக்கிறார். தனியாக பிசினெஸ் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று திட்டமிட்டு ஆஷி டிரேடிங் கம்பெனியை துவக்கியிருக்கிறார் சுதாகர்.
ஆனால், இந்த கம்பெனியின் மூலம் கண்டெய்னர் களை வரவழைப்பதும், அதனை குறிப்பிட்ட முகவரியில் டெலிவரி செய்வதும்தான் இவரது வேலையாக இருந்துள்ளது. கண்டெய்னரில் என்ன பொருள் இருக்கிறது என்பது சுதாகர் தம்பதிக்கு தெரியாது. அதாவது க்ளியரிங் அண்ட் ஃபார்வேடிங் வேலையை மட்டுமே இவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதனைத்தான் திரும்பத் திரும்ப விசாரணை அதிகாரிகளிடம் சுதாகர் தம்பதியினர் சொல்லி வருவதாக தகவல் வருகிறது ’என்றும் உளவுத்துறை வட்டாரங்களில் பரவியுள்ளது.
இதற்கிடையே, அதானி துறைமுகம் வழியாக போதைப் பொருள் கடத்தப்பட்டிருப்பதால் அந்த துறைமுகத்திலிருந்து க்ளியரிங் செய்யப்பட்ட கண்டெய்னர்களை ஆராய்ந்துள்ளது போதைப் பொருள் தடுப்பு பிரிவு. அதில், ஆப்கானிலிருந்து ஈரான் வழியாக வந்த கண்டெய்னர்களை மட்டும் பிரித்து விசாரிக்கப்பட்டதில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்ட அளவிலான ஹெராயின் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். அந்த ஹெராயின் எங்கெல்லாம் பயணப்பட்டுள்ளது என்பதை விசாரிக்கத் துவங்கியுள்ளது போதை பொருள் தடுப்பு பிரிவு.
இந்த நிலையில், அதானியின் முந்த்ரா துறைமுகம் மூலமாக இதற்கு முன்பு சுதாகர் தம்பதியினர் இறக்குமதி செய்த முகப்பவுடர்கள் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் உண்மையானதா என்பதை கண்டுபிடிக்கவும் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரிக்க களத்தில் இறங்கியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
சுதாகர் தம்பதியினர் சோலார் சிஸ்டம் என்கிற கம்பெனி ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார்கள். அதன் மூலம் இந்திய துறைமுகங்கள் மூலமாக வெளிநாடு களுக்கு ஏதேனும் கண்டெய்னர்கள் அனுப்பப்பட்டிருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.
தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு முந்த்ரா துறைமுகம் உதவியிருப்பதால், மத்திய அரசுக்கு எதிரான சர்ச்சைகளை கிளப்பி வருகிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சி.
இதனால் இது குறித்து விளக்கமளித் திருக்கும் அதானியின் துறைமுக நிறுவனம், "முந்த்ரா துறைமுகம் எங்களுக்கு சொந்த மானதுதான். எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனாலும், துறைமுகத்துக்கு வரும் கண்டெய்னர்களை சோதனை செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த அதிகாரம் அரசு அதிகாரி களுக்குத்தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அதானி நிறுவனத்தை தொடர்புபடுத்தி கூறப்படும் செய்திகள் தவறானவை; உள்நோக்கம் கொண்டவை'' என்று மறுத்திருக்கிறது.
போதைப்பொருள் மூலம் இந்தியாவின் சந்தையை குறிவைத்து ஆப்கான் தீவிரவாதிகள் விரித்திருக்கும் வலை ஆபத்தானது. அந்த வலையை அறுத்தெறிவதற்கான தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது வருவாய் புலனாய்வுத்துறை என்கிறார்கள்.