தமிழகமே பிரச்சினைக்கு மேல் பிரச்சினையில் சிக்கிக் கிடந்தாலும் மாதம் இருமுறையாவது சேலத்திற்கு விசிட் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு சேலம் வந்தவரை உற்சாகமாக வரவேற்றார் கலெக்டர் ரோகிணி.
மறுநாள் காலை எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர், அதற்கடுத்த நாளில் சேலம் மாநகராட்சி சார்பில், 12 இடங்களில் ரூ.5.07 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமைவெளி பூங்காக்களைத் திறந்துவைத்தார். அம்மாபேட
தமிழகமே பிரச்சினைக்கு மேல் பிரச்சினையில் சிக்கிக் கிடந்தாலும் மாதம் இருமுறையாவது சேலத்திற்கு விசிட் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு சேலம் வந்தவரை உற்சாகமாக வரவேற்றார் கலெக்டர் ரோகிணி.
மறுநாள் காலை எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர், அதற்கடுத்த நாளில் சேலம் மாநகராட்சி சார்பில், 12 இடங்களில் ரூ.5.07 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமைவெளி பூங்காக்களைத் திறந்துவைத்தார். அம்மாபேட்டை பூங்காவில், “"இறகுப்பந்து மைதானத்தின் பயன்பாட்டைத் தொடங்கி வைங்கண்ணே...'’என ர.ர.க்கள் கேட்டதும், மறுப்பேதும் சொல்லாமல் களத்தில் குதித்தார் எடப்பாடி. எதிரில் அவரது நிழல் இளங்கோவன் களமிறங்க ஆட்டத்தால் மைதானமே களைகட்டியது.
செப்டம்பர் 1-ம் தேதி அனுப்பூரில் அம்மா உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, உடற்பயிற்சியும் செய்துகாட்டி அசத்தினார். மார்பை விரித்தும், ஆர்ம்ஸை மடக்கியும், ‘மோடியின் 56 இன்ச் மார்பளவுக்கே டஃப் கொடுப்பார்போல’ என்கிற ரேஞ்சுக்கு கெத்துக்காட்டினார். அதேபோல், கருமந்துறையில் அரசு விழாவில் கலந்துகொண்ட பின், மலைக்கிராமமான அருணாவில் பழங்குடியின மக்களைச் சந்தித்து, கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி அவர்கள் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தார்.
மண்ணின் மைந்தர் என்கிற ரீதியில் சேலத்தின்மீது கூடுதல் அக்கறை செலுத்துவதில் தவறில்லை. ஆனால், நூறு நாட்களாக தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதும், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் செல்லாத முதல்வர்தானே, சேலத்திற்கு சண்டிங் அடிக்கிறார்’’ என்கிற விவாதம் எழுந்திருக்கிறதே.
சேலத்தின் மீதான எடப்பாடியின் அக்கறை குறித்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “""சார்... இனிமேலும் நாம ஆட்சியைப் பிடிப்போமா என்கிற எண்ணம் அவரை வாட்டுது. அதனாலதான் கொங்குமண்டலத்து செல்வாக்கையாவது காப்பாத்திக்க நினைக்கிறாரு. சொந்தத் தொகுதியையாவது தன்னோட கோட்டையாக ஆக்கிக்கணும்னு அண்ணனுக்கு ஆசை''’என சொல்லியபடி சுற்றும்முற்றும் பார்த்தவர், மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
""இதுல இன்னொரு சங்கதியும் இருக்கு சார். அம்மாபேட்டையில் ஒரு மருத்துவமனை, ஸ்பின்னிங் மில், சூரமங்கலத்துல ஒரு ஹோட்டல்னு பினாமிகளின் சொத்து கூடிக்கிட்டே போகுது. அண்ணன் சேலத்துக்கு வந்தா ஒரு சொத்து கிரயம் ஆகுதுன்னு புரிஞ்சிக்கலாம். அதுலேயும் ஒரு கிளவர்னஸ் உண்டு. சொத்தோட லாபம் மட்டும் பினாமிகள் கணக்குக்கு வர்ற மாதிரி டெக்னிக்கை ஃபாலோ பண்றாங்க. மார்க்கெட் ரேட்டுக்குதான் எல்லா சொத்துகளையும் வாங்குறாங்க. திடீர்னு ஆட்சிமாற்றமோ, பா.ஜ.க. காலை வாரிவிட்டு ஐ.டி.ரெய்டோ வந்தால்கூட நேரடியா சிக்கிவிடக்கூடாதுன்னு அண்ணன் ஜாக்கிரதையா இருக்காரு''’என்றார்.
-இளையராஜா