வ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் சென்னையின் அடையாளமாகத் திகழும் ஒரு கட்டிடத்தில் மாற்றம் ஏற்படும். ஜெயலலிதாவின் ஆட்சியில் சென்னையின் முதல் மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்கு என புகழ்பெற்ற சஃபையர் திரையரங்கு சசிகலா வகையறாக்களால் வாங்கப்பட்டது. இப்போதைய ஆட்சியில், சென்னையின் மற்றொரு அடையாளமான அடையார் கேட் என்கிற நட்சத்திர ஓட்டல் விற்பனைக்கு வந்திருக்கிறது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஹோட் டல் சென்னையிலுள்ள சோழா ஹோட்டலை நிர்வகித்துவந்த ஷெரட்டான் குரூப் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பார்க் ஷெரட்டான் என அழைக்கப்பட்டு வந்தது. அதை 2015-ஆம் ஆண்டு இன்டர் கான்டினன்டல் குரூப் எனப் படும் ஒரு குரூப் வாங்கி அடையார் கேட் என்ற பழமை யான பெயரை மாற்றி க்ரவுன் ப்ளாசா என்கிற புதிய பெயரை சூட்டியது. இந்த ஹோட்டலில் உலகப் புகழ்பெற்ற காப்பூசின்னி என்கிற காஃபி ஷாப் ஆன் தி ராக்ஸ் என்கிற சர்வதேச உணவகம், தக்ஷின் என்கிற உண வகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

d

286 அறைகள் மற்றும் மாநாடு நடத்தும் கூடங்கள் நிறைந்த இந்த ஹோட்டலில் ஒரே நேரத்தில் 250 கார்களை நிறுத்தலாம். சென்னைக்கு வரும் கிரிக்கெட் வீரர்கள், சர்வ தேசப் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ள இந்த ஹோட்டல், போட்கிளப் பகுதியில் அமைந்துள்ளது. இது, சென்னையிலேயே ரியல் எஸ்டேட் வணிகத்தில் அதிக விலைபோகும் பகுதி. ஒரு சதுர அடி 17,500 ரூபாய். இந்த ஹோட்டலை புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமான சீப்ரோஸ் (CEEBROS) வாங்கப் போவதாக 2021-ஆம் ஆண்டு முதல் செய்திகள் வெளிவருகின்றன. இந்த நிறுவனம் ஏற்கெனவே ரெய்ன்ட்ரீ என்ற பெயரில் இரண்டு ஹோட்டல்களை சென்னையில் நடத்திவருகிறது.

2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சிக்கு முன்பு தொடங்கிய இந்த வணிக ஒப்ப ந்தம் முடிய நீண்ட காலம் ஆனது. 2022 ஜனவரியில் சீப்ரோஸ் நிறுவனம், இந்த ஹோட்டலை வாங்கப்போவ தாக அறிவித்தது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் சில நூறு கோடி ரூபாய்கள் சென்னை மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்திருந்தது. இதை யார் ஏற்றுக்கொள்வது என்பதில் ஹோட்டலை தற்சமயம் கையில் வைத்திருக்கும் கோயல் என்பவருக்கும் சீப்ரோஸ் நிறுவன உரிமையாளர் சுப்பாரெட்டிக்கும் இடையே விரிசல் வந்தது. அதனால் இந்த விற்பனை ஒப்பந்தம் முற்றுப்பெறவில்லை.

ஒருகட்டத்தில், 2022 ஏப்ரல் மாதம் கோயல், நாங்கள் ஹோட்டலை விற்கப்போவதில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் ஹோட்டல் விற் பனையில் ஒரு புதிய நிறுவனம் இடையில் புகுந்தது. அந்த நிறுவனம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஓ.பி.எஸ்., தொழில் துறை மந்திரி சம்பத், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருக்கு நெருக்கமாக இருந்த நிறுவனம் பாஷ்யம். சென்னை கோயம் பேடு பக்கத்தில் இந்த நிறுவனம் 30 ஏக்கர் நிலம் வாங்கியது. அ.தி.மு.க. ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் நடந்த இந்த நில விற்பனையில் ஏகப்பட்ட புகார் க ள் எழுந்தன. அப்பொழுது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார், அரசுக்குச் சொந்தமான நிலத்தை பாஷ்யம் நிறுவனத் திற்கு சட்டவிரோதமாகத் தாரைவார்த்தார் என தி.மு.க. உட்பட எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் குற்றம்சாட்டின.

இந்த நிலப்பரிவர்த்த னைக்கு ஒத்து வரவில்லை என்பதால் அப்பொழுது வீட்டு வசதித்துறைச் செயலாளராக இருந்த ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆவணக்காப்பகத் திற்கு தூக்கியடித்தார் துணை முதல்வரான ஓ.பி.எஸ். அவருக் குப் பதில் அந்த இடத்திற்கு கார்த்திகேயன் என்கிற தற்போதைய உயர்கல்வித் துறை செயலாளர் வந்தபிறகு டீல் ஓ.கே. ஆனது. ஆனாலும் பிரச்சினைகள் முடியவில்லை.

கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனையே பாஷ்யம் ரயில்வே ஸ்டேஷன் என பெயர் மாற்றம் செய்யுமளவுக்கு நடந்த இந்த நிலப் பரிமாற்றம், இன்றள விலும் ஏகப்பட்ட பிரச்சனைக் குள்ளாகியுள்ளது. இந்த நிறுவனம் தற்பொழுது தி.மு.க. தரப்புக்கு நெருக்கமாகிவிட்டது. தி.மு.க. பிரமுகர்களுக்கு வேண்டிய ஜிஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், பாஷ்யம் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் சிக்கல்களைத் தீர்க்க முன்வந்துள்ளது. சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் முக்கியத்துவம் பெற்ற கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை தொடங்கி பெங்களூரு வரை தனது வணிகக் கரங்களை விரிவாகப் பரப்பியுள்ளது ஜிஸ்கொயர் நிறுவனம்.

இந்த நிறுவனம், பாஷ்யம் நிறுவனத்துடன் சேர்ந்து கிரவுன் ப்ளாசா என்றழைக்கப்படும் அடையார் கேட் ஹோட்டலை வாங்கத் திட்டமிட்டு பேரம் பேசி வருகின்றது. அதனால்தான் சீப்ரோஸ் நிறுவனம், அடையார்கேட் ஹோட்டலை வாங்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்கிறார்கள் ரியல் எஸ்டேட் வணிகத்தில் இருப்பவர்கள். கொரோனாவால் வீழ்ந்திருந்த ரியல் எஸ்டேட் மார்க்கெட் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஆரம்பகட்ட அறிகுறிதான் இந்த ஹோட்டல் விற்பனை. இது தொழில் வளர்ச்சிக்கான ஒரு பாசிட்டிவ் அடையாளம் எனச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

Advertisment