தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகித்த பல தலைவர்கள், திரைத்துறையில் முத்திரையை பதித்து, அந்த அடையாளத் துடன் அரசியலில் நின்று களம் கண்டவர்கள்தான். நடிகர் விஜய் செப்டம்பர் மாதம் அரசியல் கட்சியைத் தொடங்க திட்ட மிட்டுள்ளதாகவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ’தளபதி 68’ படத்தை முடித்து விட்டு முழு அளவில் அரசியலில் இறங்கப் போவதாகவும் அவரது ரசிகர்கள் கூறிவரு கின்றனர்.
இது ஒருபுறமிருக்க விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளில் சிலர் தவறான பல பிரச்சனைகளில் ஈடுபட்டு, விஜய் அரசியலில் பிள்ளையார் சுழி போடும்முன்பே வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசாரத் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த ஸ்பாவில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமிதேவி என்பவரும் மேலும் இரண்டு பெண்களும் இருந்தனர். சோதனை செய்த போது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடை பெறுவது தெரியவந் துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவ காரம் தொடர் பாக மேலாளர் லட்சுமிதேவி கைது செய்யப் பட்டுள்ளார். கைதான லட்சுமிதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர்தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக உரிமை யாளர் செந்தில்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில், தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் திருச்சி நகர் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செய்துவருகிறார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவிலும் கலந்துகொண்டவர். இந்த சர்ச்சையை அடுத்து தனது ரசிகர் மன்றத்தின் பொறுப்பில் இருப்ப வர்களின், பின்னணியைப் பற்றி விசாரிக்கவும், சர்ச்சையான பின்னணி கொண்டவர்களை முக்கியப் பொறுப்பிலிருந்து மாற்றவும் விஜய் உத்தரவிட்டுள்ளா ராம்.