Advertisment

வணக்கத்துக்குரிய ஆட்டோ டிரைவர்! -கும்பகோணம் மேயர் ஜாக்பாட்!

ad

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆட்டோ டிரைவ ருக்குக் கிடைத் திருப்பதில் கும்பகோணம் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

Advertisment

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 48 வார்டுகளில் அ.தி.மு.க. 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறமுடிந்தது. தி.மு.க. கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. நகரப் பொறுப்பாளரான சு.ப.தமிழழகனே மேயராவார் என பேசப்பட்டு வந்தது.

aa

இந்நிலையில் 3 வார்டுகளில் போட்டியிட்டு 2 வார்டுகளை ம

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆட்டோ டிரைவ ருக்குக் கிடைத் திருப்பதில் கும்பகோணம் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

Advertisment

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 48 வார்டுகளில் அ.தி.மு.க. 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறமுடிந்தது. தி.மு.க. கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. நகரப் பொறுப்பாளரான சு.ப.தமிழழகனே மேயராவார் என பேசப்பட்டு வந்தது.

aa

இந்நிலையில் 3 வார்டுகளில் போட்டியிட்டு 2 வார்டுகளை மட்டுமே கைப்பற்றிய காங்கிரசுக்கு மாநகர மேயர் பொறுப்பை ஒதுக்கி, ஆட்டோ ஓட்டுனரான சரவணனை மேயராக்கியிருப்பது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியையும், எதிர்க்கட்சி யினருக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது. இதுகுறித்து தி.மு.க.வினர், "துணைமேயருக்குதான் குட்டி, தெட்சுணாமூர்த்தி, ஒ.செ. அசோக்குமார் என பலர் போட்டியில் இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் முதல் மேயர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளது" என்கிறார்கள் ஆதங்கத்துடன்.

குடந்தை மாநகரின் முதல் மேயராக பதவியேற்ற சரவணனிடம் பேசினோம், “"என்னுடைய குடும்பம் பெரிய பணக் கார குடும்பமெல்லாம் கிடையாது. தாத்தா குமாரசாமி 1976-ல் நகராட்சி உறுப்பினராக இருந்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் விசுவாசமாக எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தேன். அதற் குக் கிடைத்த பரிசுதான் இது. இருபது வருட மாக ஆட்டோ ஓட்டுகிறேன். இன்று வரை வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். முதல்வரும், எங்கள் கட்சித் தலைவரும் என்மீது நம்பிக்கை கொண்டு பெரும் பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அதற்குப் பங்கம் வராதபடி மக்களுக்கான தேவைகளை ஓடோடி நிறைவேற்றுவேன்''’என்கிறார்.

மேயர் பதவியேற்பில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “"எளிமையான ஆட்டோ டிரைவரை மேயராகத் தேர்வுசெய்துள் ளார் முதல்வர். தி.மு.க. உறுப்பினர்கள் அதிகமாக வெற்றிபெற்ற கும்பகோணம் மாநகரின் கழக உறுப்பினர்கள் எந்தவிதக் கூச்சலும் இல்லாமல் எங்களுக்கு ஒத்துழைத்தது என்பது அதைவிட சிறப்பானது. உண்மையான சமுக நீதியை காக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்''’என்றார்.

தஞ்சை மாவட்ட தி.மு.க. பிரமுகர் ஒருவர், "கும்பகோணம் மேயர் பொறுப்பு காங்கிரசுக்குப் போனதற்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் காரண மில்லை. கே.என்.நேருவும்தான். கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன், திமுக மா.செ. கல்யாணசுந்தரம் என பலரது உள்ளடி அரசியல் இதில் மறைமுகமாக இருக்கிறது. தமிழழகன் கும்பகோணம் மேயராகி விட்டால், சிட்டிங் எம்.எல்.ஏ. அன்பழகன், மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரத்தை மிஞ்சிவிடுவார் என இருவரும் ஒன்றாகி காங் கிரஸுக்கு ஒதுக்கச்செய்துவிட்டனர். இவர் கள் இருவரும் பிடிவாதமாக இருந்திருந்தால் நிச்சயம் ஸ்டாலின் நியாயத்தை உணர்ந்து மாற்றிக் கொடுத்திருப்பார்''’என்கிறார்.

nkn120322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe