வெற்றிநடை போடும் தமிழகம்' என்கிற வாக்கியத்தோடு தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இதற்காக விதவிதமாக விளம்பரங்களை செய்துவருகின்றன. தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு கோயில் ஊழியர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் என விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி, ஓ.பி.எஸ். படங்களோடு அர்ச்சகர் ஒருவரின் படம் பிரதானமாக இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்டித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டன குரல் எழுப்பியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk-advt.jpg)
2006-ல் கலைஞர் முதல்வரானபோது, "அனைத்து சாதியினரும் அர்ச்சகராக என்ன செய்ய வேண்டும்' என நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அதன் அறிக்கையை வாங்கி அதன்படி "அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி னார். அந்த நிகழ்வில் கலைஞர் பேசும்போது, "பெரியார் நெஞ்சில் குத்திய முள்ளை இன்றுதான் நீக்கினேன்' என நெகிழ்ச்சியோடு அறிவித்தார். அப்படி அவர் சொல்லக் காரணம், 1970-ஆம் ஆண்டு ஆலய கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்தார் பெரியார். "நடப்பது பெரியார் ஆட்சி, அவரது ஆட்சியில் அவர் கேட்பது கிடைக்கும்' எனச் சொன்னார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார். இதனை எதிர்த்து சேசம்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். "தகுதியான நபர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும்' என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். "என் நெஞ்சில் குத்திய முள்' என மனம் நொந்து போய் விமர்சனம் செய்தார் பெரியார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக மீண்டும் சட்டத்தை இயற்றியதோடு நிற்காமல், தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகங்களில் சைவ முறை பள்ளிகளும், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் வைணவ முறைப்படி அர்ச்சகர் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. இந்த 6 பள்ளி களில் பல சாதிகளை சேர்ந்த 210 இளைஞர்கள் ஆர்வமாக சேர்ந்தனர். அவர்களுக்கு, ஆகம விதிகளின்படி பூஜை செய்வது, வேதமந்திரம் ஓதுவது போன்றவற்றை தமிழ், சமஸ்கிருதம் என்ற இரண்டு மொழியில் பாடம் நடத்தினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk-advt1.jpg)
திருக்குறள், சிவபுராணம், சைவ சமயத்தின் அனைத்து தெய்வங் களுக்கான 108 போற்றிகள் பன்னிரு திருமுறைகள், 63 நாயன்மார் வரலாறு, தமிழ் இலக்கணங்கள், திருக்கோயில் பூஜை முறைகள் ஜோதிடம், சிறப்பு நாட்கள் (திதி, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம்) பஞ்சாங்கம் என அனைத்தையும் கற்று தந்தனர். கருவறைக்குள் சென்று பூஜை செய்ய தீட்சை தந்தனர். கற்றதை அறிய எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு நடந்து அதில் 206 பேர் வெற்றி பெற்றனர். இந்த சட்டத்தையும், அரசாணை, பள்ளி செயல்படுதலை எதிர்த்து மதுரை ஆதிசைவ சிவாச் சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதனால் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்காமலே அந்த பள்ளிகள் இழுத்து மூடப் பட்டன. இந்நிலையில்தான் இதில் வெற்றி பெற்றதாக விளம்பரம் செய்கிறது அ.தி.மு.க. அரசு.
இதுபற்றி அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் நம்மிடம், ""ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அந்த வழக்கில் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. நாங்கள் போராடி வழக்கை உச்சநீதிமன்றத்தில் எடுக்கவைத்து தீர்ப்பு பெற்றோம். அந்தத் தீர்ப்பின்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மதுரையைச் சேர்ந்த மாரிச்சாமிக்கு அங்குள்ள கோயிலில் பணி நியமன ஆணையை வழங்கியது தமிழக அரசு. அதனை இப்போது தேர்தல் விளம்பரத்துக்கு பயன் படுத்துகிறது
அ.தி.மு.க. அரசாங்கம். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணையை, சட்டத்தை ரத்து செய்யவில்லை, எந்தந்த கோயில்களில் என்ன மாதிரியான ஆகம விதிகளை கடைப்பிடிக் கிறார்களோ அதன்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.
அதன்படிதான் மாரிச்சாமியை நியமனம் செய்தது அராங்கம். அதே அரசாங்கத்தின் கட்டுப் பாட்டின் கீழ் ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. சிறிய கோயில்கள் முதல் பெரிய கோயில்கள்வரை பல அர்ச்சகர் பணியிடங்கள்
காலியாகவுள்ளன. அந்த காலிப்பணியிடங்கள் சிலவற்றை நிரப்ப பொதுவிளம்பரம் தந்தும், விளம்பரம் தராமலும் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அப்படி நியமனம் செய்யப் படும் அர்ச்சகர் பதவிகளில் "தகுதியோடு உள்ள எங்களையும் நியமனம் செய்யுங்கள்' என்றுதான் கேட்கிறோம். அனைத்துத் தகுதிகளும் உள்ள எங்களுக்கு ஏன் இந்த அரசாங்கம் பணி வழங்காமல் உள்ளது, ஒருவருக்கு மட்டும் வேலை தந்துவிட்டு அனை வருக்கும் வேலை தந்ததுபோல் விளம்பரம் செய்வது எந்த விதத்தில் நியாயம்? ஒருவருக்கு வேலை தந்துவிட்டு எல்லாருக்கும் தந்ததாக ஏமாற்றுகிறார்கள்'' என்றார்.
மேலும்... ""இப்போது ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் சமூக நீதி, சமத்துவம் பற்றி பேசுகிறது. கோயில்களில் அனைத்து சாதியினரும் சமமாக நடத்தப் படுகிறார்களா என்பது நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும். முறையாக அர்ச்சகர் பயிற்சி முடித்த நாங்கள் கருவறைக்குள் சென்று சுவாமிக்கு அலங்காரம் செய்து அர்ச்சனை செய்யும் போது நிச்சயம் சமத்துவம் வரும், அனைத்து சாதியின ருக்கும் மரியாதை கிடைக்கும். இதனை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு கோயில்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி தர வேண்டும், அதேபோல் மீண்டும் அனைத்து சாதியினருக்கான பயிற்சி பள்ளிகளை தொடங்க வேண்டும், அங்கு படிப்பவர் களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/admk-advt-t.jpg)