ந்த உலகமே ஸ்தம்பித்து நின்றது அந்த ஒரு நாளில்.

பெண்கள் மார்பிலடித்துக்கொண்டு அழுக, கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளும் காதில் கேட்க முடியாத தடித்த புதிய வார்த்தை களைக் கண்டறிந்து தங்கள் நாவுகளில் இருந்து கொட்டினார்கள்.

ஆண்களும், கல்லூரி, பள்ளி மாணவர்களும், “"இல்லை ப்ரோ... அவனுகளை நடு ரோட்டில் நிக்க வச்சு, அரபு நாடுகள்ல பண்ற மாதிரி தண்டனை குடுக்கணும் ப்ரோ' “எனவும், "ஏ... ப்ரோ, இந்த மாதிரி ஒரு சம்பவம் நம்மவீட்டு பொண்ணுகளுக்கு நடந் திருந்தா, அவனுகளை கண்ட துண்டமா வெட்டிப் போட்ருப்பமில்ல ப்ரோ...?' என இந்த சீறல் குரல்கள் உலகம் முழுக்க ஒலிக்கக் காரணம், கோவை பொள்ளாச்சியில் பாலியல் சித்திரவதைக் குள்ளான இரண்டு சின்னஞ்சிறு பெண்களின் கதறல் குரல்கள்தான்.

far

Advertisment

அந்த முதல் குரல் வீடியோவில், "ரிஸ்வந்த்...ஏன் இப்படி பண்ணினே? நானும் உன்ன நம்பித்தானே வந்தேன்...' என அரை நிர்வாணக் கோலத் தில், கண்ணீரோடு கட்டிலில் அமர வைக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண் கதறுகிறாள்.

அந்த படுபாதகனோ... தன் பின்னால் பதுங்கி இருக்கும் சாம்பல் ஓநாய்களை கை சைகை மூலம் வீட்டிற்குள் அழைக்க... "அய்யோ...' என அந்த இளம்பெண்ணின் பெருங் கதறலோடு முடியாமல் முடி கிறது அந்த வீடியோ.

இரண்டாவது கதறல் குரல் வீடியோ.

லெக்கீன்ஸ் அணிந்த அந்த இளம் பெண்ணின் நடுங்கும் கால்கள் வானிற்கும், பூமிக்கு மாய் நடுங்குகின்றன.

அவளைச் சுற்றி நிற்கும் சாம்பல் ஓநாய்கள், துணிகளை கழட்டச்சொல்லி பெல்ட்டால் அடிக்கின்றன.

"அண்ணா ப்ளீஸ் அண்ணா.. பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா. நானே ட்ரெஸ்சை கழட்டிர்றேன் அண்ணா' என ட்ரெஸ்சை கழற்ற... சாம்பல் ஓநாய்களின் கேமரா கண்கள் அதை படம் பிடிக்கின்றன.

இந்த இரு வீடியோக்கள் தான் கடந்த எம்.பி. தேர்தலின்போது வெளியாகி, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பொள்ளாச்சி இலைத்தரப்பு வி.ஐ.பி.யும், அவரது மகன் பெயரும் அடிபட்டன.

ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில்... அதே பொள்ளாச்சித் தொகுதியில் 1700 ஓட்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது அ.தி.மு.க. வாக்கு வித்தியாசம் குறைவு என்றாலும், மிகப் பெரிய வாக்கு வித்தி யாசத்தில் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி, பொள்ளாச்சி யில் எப்படி வென்றது என் பதுதான் தமிழகத்தில் உள்ள பல தரப்பினரின் கேள்வி.

அதற்கான விடையை பொள்ளாச்சி மக்களிடம் கேட்டோம்.

"சார்... இந்த பொள்ளாச்சி மக்கள் உண்மையாத்தான் ஓட்டு போட்டோம். தி.மு.க. வேட் பாளரா நின்னாரே டாக்டர் வரதராஜன். அவரை வேட் பாளரா அறிவிக்கும் கூட்டத்துல என்ன பேசினாரு? அண்ணன் பொள்ளாச்சி ஜெயராமன் மேல மட்டும் இப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டு விழாமல் இருந்திருந்தால் அவரை ஜெயிக்க இங்கே யாருமே கிடையாது. எனக்கென்னமோ அப்படி ஒரு சம்பவம் இங்கே நடந்த மாதிரியே தெரிய லையேன்னு பேசினாரே..? எதிர் வேட்பாளர் எந்த பெயர்னால பேர் கெட்டு நிக்கிறாரோ, அதைய இல்லைன்னு சொன்னா அவரை எப்படி நம்புவாங்க?

ஒவ்வொரு ஓட்டுக்கும் வாக்காளர்களுக்கு பெரும் பணம் கொடுத்த அ.தி.மு.க., தன் பக்கம் தி.மு.க. ஓட்டை வாங்கித் தர்றேன்னு சொன்னவங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கும்? இரண்டு முறை ஜெயராமனை எதிர்த்து நின்று தோற்றுப்போன தி.மு.க. தமிழ்மணியும், மா. பொறுப்பாளரான தென்றல் செல்வராஜும் எந்தளவு களப் பணியாற்றினார்கள் என வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

அவுங்க ரெண்டுபேர் இருக்கற மகாலிங்கபுரம், லாரிப் பேட்டை பகுதியிலயும் தி.மு.க.வுக்கு ஓட்டு ரொம்ப கம்மியா விழுந்துச்சே..? இப்படிப் பலவற்றையும் ஆராய்ந்தால்தான் உண்மை வெளி வரும். அதை விட்டுட்டு...'' என சடைந்துகொள்கிறார்கள் பொள்ளாச்சி மக்கள்.

இந்த நிலையில் ..பொள்ளாச்சியில் அ.தி.மு.க. ஜெயித்ததைப் பற்றி கோபமாய் சமூக ஊடகம் மூலம் பேசிய ஒரு பெண்... "பொள்ளாச்சியில் ஓட்டுப் போட்ட அத்தனை மக்களையும் வணங்குகிறேன்... தலைவணங்குகிறேன். உங்கள் வீட்டுப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டதை எண்ணி, இந்த தமிழ்நாடே கொந்தளிச்சு, கண்ணீர்விட்டு கதறி அழுதாங்க பாருங்க. அவுங்களுக்கெல்லாம் சரியான செருப்படி கொடுத்திருக்கீங்க. பொள்ளாச்சிப் பெண்களின் கற்புக்கு காணிக்கையா வெற்றியக் குடுத்துட்டு, தமிழ் நாட்டு மக்களுக்கு அவமானத்தை தேடித் தந்திருக்கீங்க?

"அண்ணா என்னைய விட்ருங்க அண்ணா... என்னைய விட்ருங்க'ன்னு ஒரு பொண்ணு கதறுச்சே.. அது இப்ப எப்படி என் காதுக்கு கேட்குதுன்னா... "அண்ணா... என்னைய எத்தனை பேரு வேணாலும் ரேப் பண்ணிக்குங்க... ரேப் பண்ணிக்குங்க...'ன்னு'' கனத்த மனதோடு பேசுவது.. இதயமுள்ளவர்களை இரும்பால் அடிக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரன்களை ஜனநாயக வழியில் தண்டித்திட வாக்காளர்கள் முன்வந்தபோதும், அதனை ஒருங்கிணைக்காமல் உள்குத்துகளாலும் ரகசிய டீலிங்குகளாலும் வீணடித்திருக்கிறது தி.மு.க.