தூத்துக்குடி மாவட்டத்தில், அ.தி.மு.க. தெற்கு, வடக்கு என்று பிரிக்கப்பட்டு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மா.செ.வாக ஸ்ரீவைகுண்டத்தின் எக்ஸ். எம்.எல்.ஏ. சண்முகநாதனையும், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளைக் கொண்ட வடக்கு மா.செ.வாக கோவில்பட்டியின் எம்.எல்.ஏ.வான கடம்பூர் ராஜையும் அ.தி.மு.க.வின் ஆட்சிக் காலத்திலேயே எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

tt

வ.மா.செ.வாக நியமனம் செய்யப்பட்ட சண்முகநாதன் பொறுப்பிற்கு வந்த உடனேயே மாநகரின் 60 வார்டுகளிலுள்ள அ.தி. மு.க.வின் முன்னாள் அமைச் சர் சி.த.செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்களான சீனியர் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு அதில் தனக்கு வேண்டியவர்கள், மாற்றுக் கட்சியிலிருந்து அண்மை யில் வந்தவர்களைப் பொறுப்பி லமர்த்தியதுடன் கட்சியின் மாநகர சீனியர்களை உதாசீனப்படுத்திய தால் ஆத்திரமான கட்சியினர், எக்ஸ் அமைச்சர் செல்லப் பாண்டியனின் தலைமையில் திரண்டனர்.

மா.செ. சண்முகநாதன் வசம் தூத்துக்குடி இருப்ப தால்தான் இந்த ஆட் டம்போடுகிறார். தூத்துக்குடி மற் றும் கடம்பூர் ராஜு வச முள்ள ஒட் டப்பிடாரம் இரண்டை யும் பிரித்து மாநகர, மாவட்டமாக்கி அதற்கு சி.த.செல்லபாண்டியனை மா.செ.வாக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தி லேயே குரலெழுப்பியவர்கள், தவறினால் தேர்த லில் வேலை செய்யமாட்டோம். கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்படுவார் என்று வெளிப்படையாகவே அறி வித்தார்கள்.

Advertisment

இதனால் மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி, "விபரீத முடிவு வேண்டாம். தேர்தலுக்குப் பின் தொகுதி யைப் பிரித்து செல்லப் பாண்டியனை மா.செ.வாக்கிவிடு கிறேன்'' என்று சமா தானப்படுத்தினார். இதனால் பதறிப்போன மா.செ. சண்முகநாதன் "எனது அரசியல் வாழ்க்கையும், கௌரவமும் தூத்துக் குடியைக் கொண்டது. என்னிடமிருந்து தூத்துக்குடியை பிரிக்கக்கூடாது'' என்று எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்தார்.

இந்தச் சூழலில் ஆட்சி மாறிய பின்பு எடப்பாடி, ஓ.பி.எஸ்., என்று இரண்டு கூறாகப் பிரிந்ததால் கட்சியின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்று கேள்வியானது. விவகாரம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று போனதில் இரட்டை இலை சின்னம் எடப் பாடி வசம் வர, கட்சியும் அவர் வச மானது. எடப்பாடியின் இருப்பு கெட்டியானது..

இதனிடையே இ.பி.எஸ். ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் என்று வேறுபட்டதில், எடப்பாடி தரப்பில் மாநிலத்தில் கட்சியைப் பொறுத்து வளர்ச்சிக்காகவும் மா.செ. உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்களை நியமிக்கவேண்டிய கட்டாய நிலை. ஆனால் கட்சியின் நிர்வாகிகள் நியமன விஷயம் தொடர்பானது நீதிமன்றத் தீர்ப்பிலடங்கியதால் எடப்பாடி அதற்காகக் காத்திருக்கவேண்டிய கட்டாயம்.

Advertisment

இந்நிலையில்தான் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மா.செ.க்களின் பதவி காலியாகி உள்ள தால் அவற்றைக் குறிவைத்து அந்த மாவட்டங் களின் முக்கிய புள்ளிகள் எடப்பாடியிடம் படையெடுத்திருக்கிறார்கள்

tt

கடந்த வாரம் எடப்பாடியைச் சந்தித்த செல்லப்பாண்டியன், பேச்சுப்படி ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி இரண்டையும் பிரித்து தன்னை தூத்துக்குடி மாநகர மா.செ.வாக்க வேண்டுமென் றும், இல்லையென்றால் நான் வேற முடிவு எடுக்கநேரிடும் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்திருக்கிறாராம்.

இதையறிந்த எம்.எல்.ஏ. கடம்பூர்ராஜு, எக்ஸ் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், இளங்கோ உள்ளிட்ட தனது ஆதரவாளர்கள் பத்துப் பேருடன் சென்று எடப்பாடியைச் சந்தித்து, ஒட்டப்பிடாரத்தை தன்னிடமிருந்து எடுக்கக் கூடாது. அனுமதிக்கமாட்டேன் என்று குரலெழுப்பியிருக்கிறார். ஒட்டப்பிடாரத்தில் அள்ளப்படுகிற மணலில் மூன்றில் ஒரு பங்கு, மா.செ. என்ற வகையில் கடம்பூர்ராஜிற்குப் போவதால் அவர் அந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதனால்தான் ஏரியாவை விடமறுப்பதாகச் சொல்கிறார்கள் ர.ர.க்கள்.

இரண்டு மாதம் முன்பு நடந்த பேச்சு வார்த்தையில் ஒட்டப்பிடாரத் தைத் தர சம்ம தித்த கடம்பூர் ராஜு, இப் போது ஏன் மறுக்கிறார், மிரட்டுகிறார். அப்ப ஒரு பேச்சு. இப்ப ஒரு பேச்சா என்று செல்லப்பாண்டியன் கொந்தளிக்க, எடப்பாடியோ திணறினார்.

"கொஞ்சம் பொறுப்பா. முதல்ல தூத்துக் குடிய ஒத்துக்க. எப்படியும் ஒட்டப்பிடாரத்தை உனக்கு தர ஏற்பாடுகளைச் செய்வேன். என்னை நம்பு, வரும் ஜூலை 28 அன்று கோர்ட் முடிவு வரும். மறுநாள் நான் மா.செ.வாக அறிவித்து விடுகிறேன்''’என்று அரும்பாடுபட்டு செல்லப் பாண்டியனை சமாதானம் செய்வதற்குள் எடப்பாடிக்கு மூச்சுவாங்கிவிட்டதாம்.

மா.செ. சண்முகநாதன் ஜூலை 5 அன்று எடப்பாடியைச் சந்திப்பதற்காகப் போயிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே, “"உங்கமேல ஏகப்பட்ட புகார் வருது. யாரையும் எடுத்தெறிஞ்சு பேசுறீகளாம். கட்சித் தொண்டர்களையும், சீனியர்களையும் அரவணைச்சுப் போறதில்லையாமே. இப்படி இருந்தா சரிப்பட்டு வராது'' என்று எடப்பாடி கடுப்பை வெளிப்படுத்த மனம் நொந்துபோய் திரும்பியிருக்கிறாராம் சண்முகநாதன்.

நெல்லை மாநகரத்தில் சுதாபரமசிவன், சங்கரலிங்கம், கல்லூர் வேலாயுதம் மூன்று பேரும், தச்சை கணேஷ்ராஜாவிடமிருந்து நெல்லை, பாளையைப் பிரித்து தங்களை மா.செ.வாக்க வேண்டுமென குஸ்தி போட்டுவருகிறார்கள்.

இந்த நெருக்கடியான சூழலில்தான் எடப்பாடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக ஜூலை 8 அன்று வர, அதுசமயம் கோவில்பட்டி பகுதியின் சீனிராஜ், எடப்பாடியை வரவேற்று நாளிதழில் விளம்பரம் கொடுத்திருந்தார். எம்.எல்.ஏ. பதவியைக் குறிவைத்து இந்த விளம்பரத்தைக் கொடுத்திருந்த சீனிராஜுக்கும் கடம்பூர் ராஜூக்கும் ஏர்போர்ட் டிலே தகராறாக போலீஸ் புகுந்து இரு தரப்பையும் விலக்கிவிட்டிருக்கிறது.

இப்படி பதவிப் போட்டியில் தன்னை நெருக்குபவர்களின் இடியாப்பச் சிக்க லை தீர்க்கமுடி யாமல் கைபிசைந்து கொண்டிருக் கிறார் எடப்பாடி.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்