மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய வழியில், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் எங்கு பார்த்தாலும் ‘மஞ்சள் மயம்’ ஆகிவிட்டது.

yellowshirt

ஆளுந்தரப்பில் சீட் போட்டி கடுமையாக உள்ள விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில், மேற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் விஜயகுமரன், அமைச்சரிடமிருந்து தனக்கு வரவேண்டிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அமைதியாக இருக்கிறார். ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பலரும், விஜயகுமரனின் பின்னால் உள்ளனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கோகுலம் தங்கராஜ், ‘விருதுநகர் தொகுதியில் எல்லாருடைய வீட்டிலும் நான் கொடுத்த அரிசிப்பை இருக்கிறது.’ என்று பால் பண்ணை நிர்வாகிகளோடு தொகுதியைச் சுற்றி வருகிறார்.

Advertisment

விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரவனோ, அமைச்சருடனான நெருக்கம், எப்படி மாவட்ட பொறுப்பை தனக்கு பெற்றுத் தந்ததோ, அதுபோலவே எம்.எல்.ஏ. சீட்டும் கிடைத்துவிடும் என்று காய் நகர்த்தி வருகிறார். தமிழக அளவில் நாடார் சமுதாயப் பின்னணி உள்ள இவர், அதிமுக வழிகாட்டும் குழுவிலுள்ள மனோஜ் பாண்டியனுக்கு நெருக்கமானவர்.

தன்னைப் போலவே மஞ்சள் சட்டையில் சீட்டுக் காக முட்டி மோதும் மூவரையும் வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

-ராம்கி