அ.தி.மு.க.வில் ஐ.டி. விங் துவக்கப்பட்ட போது அதன் செயலாளராக அஸ்பயர் சாமிநாதனை நியமித்தார் ஜெயலலிதா. பின்னர் ஜெ.வாலேயே நீக்கப்பட்டு, ஜெ. மறைவுக்குப் பிறகு, மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டவர். சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை அ.தி.மு.க. இழந்த நிலையில், அதிலிருந்து விலகியவர், தற்போது தி.மு.க.வில் இணைவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார்.

it

இந்த நிலையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் அஸ்பயர் சாமிநாதனுக்கு எதிராக சில மோசடி புகார்களை கொடுத்துள்ளார் பிசினஸ் மேன் ஆர்.வி.ராம். அந்த புகார்கள் நமக்கும் கிடைக்க, இது குறித்து ஆர்.வி.ராமிடம் பேசிய போது, "தகவல் தொழில்நுட்பத் துறையில் கல்லூரி மாணவர்களுக்கான திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை 2002 முதல் சென்னையில் நடத்திக்கொண்டிருக் கிறேன். எனது மனைவி அர்ச்சனா மூலம் 2017-ல் எனக்கு அறிமுக மாகிறார் அஸ்பயர் சாமிநாதன். தன்னைப் பற்றியும் தனக்கு பிரபலங்களிடமுள்ள செல்வாக்கு பற்றியும் விவரித்துப் பேசினார்.

என் மனைவியின் வலியுறுத்தலால் எனது நிறுவனத்தின் பங்கு தாரராக அஸ்பயர் சாமிநாதனை இணைத்துக்கொண் டேன். வெளிநாட்டிற்கு நான் செல்லவேண்டி யிருந்ததால் நிறுவனத்தை என் மனைவியும் சாமிநாதனும் பார்த்துக்கொள்ள அனுமதித்தேன். சென்னைக்குத் திரும்பிய நிலையில், நிறுவனத்தின் வரவு செலவுகளையெல்லாம் சோதிக்க ஆரம்பித் தேன். அப்போது சுமார் ரூ.3 கோடிக்கும் அதிகமான தொகையை சாமிநாதன் கையாடல் செய்திருந்த தோடு, பெரும்பாலான பங்குகளை தன் பெயருக்கு மாற்றி, திவாலாக்கியிருக்கிறார். இந்த மோசடிக்கு என் மனைவியும், அலுவலக ஜி.எம். நரேஷும் உடந்தையாக இருந்தது கண்டு அதிர்ந்துபோனேன். மூவரும் சேர்ந்து என்னை மிரட்டினார்கள்.

வெளிநாடு சென்றபோது என்ன நடந்தது என நான் விசாரிக்கையில்தான், என் மனைவியை சாமிநாதன் மயக்கி வைத்திருப்பதையும், இருவரும் நெருக்கமாக இருப்பதையும் அறிந்து அப்செட்டானேன். என் மனைவியின் சித்தியிடம் நியாயம் கேட்டபோதும் எனக்கு அவமரியாதைதான் கிடைத்தது.

Advertisment

IT

சட்டரீதியாக கம்பெனியை மீட்டெடுத்தேன். குடும்பத்தை சீரழித்த சாமிநாதனின் மோசடி முகத்தை அ.தி.மு.க. தலைவர் களுக்குத் தெரியப்படுத்த முயற்சித்தபோது, அப் போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். இருவரும் என்னை சந்திக்க மறுத்தனர். இதனையடுத்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை பலமுறை சந்தித்து முறையிட்டேன். எதுவும் நடக்கவில்லை.

இதனையடுத்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் நான் புகார் கொடுக்க... "அ.தி.மு.க.வின் கொள்கையை வகுப்பவன் நான்தான்; இன்னும் 15 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. ஆட்சிதான்; ஸ்டாலின் முதல்வராக முடியாது' என்றெல்லாம் போலீசாரிடம் சொல்லி, தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டார் சாமிநாதன். ஆட்சி மாறியதால், நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை வைத்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் சாமிநாதனுக்கு எதிராக மோசடிப் புகார் கொடுத்துள்ளேன்''‘என்கிறார் ஆர்.வி.ராம்.

இந்தநிலையில்... அஸ்பயர் சாமிநாதனிடம் நாம் பேசியபோது, ’"அவர்தான் எனக்கு 3 கோடியே 14 லட்சம் ரூபாய் தரவேண்டும். அதை எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரம் என் னிடம் இருக்கிறது. இதுகுறித்து ஒரு வழக்கும் இருக்கிறது. அதனை தராமல் மோசடி செய்வதற்காக இப்படி பொய்ப் புகார்களை கொடுத்துவருகிறார். அன்றைக்கு அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்தேன். இப்போ தி.மு.க.வுக்கு வொர்க் பண்ணிக்கொண்டி ருக்கிறேன்.

மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு பிரச்சினை பண்ணுவேன் என்பதற்காக அதே பெட்டிசனை இப்போதும் கொடுக்கிறார். இதைப்பத்தி என்னிடம் விசாரித்தார்கள். இது என்னுடைய பெர்சனல் மேட்டர். கட்சிக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை எனச் சொன்னேன். நுங்கம்பாக்கம் போலீசும் நான் கொடுத்த டாகுமெண்டை பார்த்துட்டு, புகாரில் அடிப்படை உண்மை இல்லை எனக்கூறி பெட்டிசனை முடித்து வைத்துவிட்டனர்.

அவரது பெட்டிசனை படித்தால், அவரது மனைவியை மட்டு மல்லாமல், பல பெண்களுடன் இணைத்து என்னை குற்றம்சாட்டு கிறார். அவரது மனைவியை என்னோடு மட்டுமல்ல; ஊரில் இருக்கும் பலரோடும் சேர்த்து பேசியிருக்கிறார். இதனால் அவரது மனைவி டொமஸ்டிக் வயலன்ஸ் புகார் கொடுத்திருக்கிறார். அந்த நபர் மீது பல வழக்குகளை நானும் போட்டிருக்கிறேன்'' என்கிறார்.

Advertisment

IT

இதுகுறித்து ஆர்.வி.ராமிடம் கேட்டபோது,”"எனக்கு 3 கோடி கொடுத்ததாக அவர் சொல்வது பொய். 2017, டிசம்பர் 1-ந் தேதி முதல் 2019 ஆகஸ்ட் 2 வரை என் மனைவியும் அஸ்பயர் சாமிநாதனும்தான் கம்பெனியின் டைரக்டர்களாக இருந்தனர். கம்பெனியில் இல்லாத எனக்கு எப்படி 3 கோடி தந்திருக்க முடியும்? கொடுத்ததாக வைத்துக்கொண்டால், அவ்வளவு தொகையை செக் மூலமாகவோ, ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் மூலமாகவோதான் கொடுத்திருக்க முடியும். அப்படியானால் அதற்கான ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள்.

23 சதவீத பங்குகளை திருப்பித் தந்த வகையில், பணம் கொடுக்க வேண்டுமென அவர் சொல்லுவார். அதாவது, கம்பெனியில் அவரை சேர்க்கும்போது, 2,300 பங்குகளை வாங்கினார். ஒரு ஷேரின் விலை 10 ரூபாய் என கணக்கிட்டு 23,000 ரூபாய் பெற்றேன். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத் தில் இந்த ஷேர்களை விற்க நினைத்தால் அதனை என்னிடம்தான் விற்க வேண்டும், அதே 23,000 ரூபாய்க்குத்தான் விற்க வேண்டும் என அக்ரி மெண்ட் போடப்பட்டது. அதை ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறோம். இதற்கு அவர் ஒப்புக்கொண்டதால்தான் கம்பெனியின் டைரக்டராக நியமிக்கப்பட்டார்.

கம்பெனியை அவர்களிடமிருந்து நான் மீட்டபோது, அவருக்கு 23,000 ரூபாயை கொடுத்துவிட்டு ஷேர்களை வாங்கிக்கொண்டேன். ஷேர்களுக்காக நான் எந்த பணமும் அவருக்கு தரவேண்டியதில்லை. நான் அவருக்கு ஒரு கடிதம் கொடுத்ததாக என் கையெழுத்தை அவர்களே போர்ஜரியாக போட்டு ரெடி பண்ணி வைத்திருக்கிறார்கள். இதற்கு என் மனைவியும், நரேஷும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளனர். என் கையெழுத்தை போர்ஜரியாக போட்டு கடிதம் தயாரித்ததற்காக அவர்கள் மீது வழக்குப்போட வக்கீல்களிடம் பேசிவருகிறேன். அவர்கள் செய்த அத்தனை தில்லுமுல்லுகளுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. தேவையெனில், எனது கம்பெனியை ஒரு ஆடிட்டரை வைத்து செக் பண்ணுங்கள். அவர்கள் என்னை மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் கிடைக்கும். அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி தப்பிக்கிறார் சாமிநாதன்''’என்கிறார் ஆவேசமாக.

நாம் மேலும் விசாரித்தபோது, இரு தரப்புமே சில ஆடியோ, வீடியோக்களை காட்டி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்னிறுத்துகிறார்கள். அதனால், அரசியல் பின்புலத்தோடு இதனை போலீஸ் அணுகாமல், இரு தரப்பையும் நேரில் வைத்து விசாரிக்கிறபோதுதான், உண்மை வெளிப்பட்டு, யார் மீது குற்றம் என்பது அம்பலமாகும். இதுதொடர்பான வழக்குகளின் விசாரணை விரைவில் வரவிருப்பதால், வில்லங்க விவகாரம் பூதாகரமாக வெடிக்கக்கூடும் என்கிறார்கள் விசயமறிந்த அ.தி.மு.க.வினர்.