திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த போளூர், ஆரணி, செய்யாறு, வந்த வாசி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செஞ்சி, மயிலம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள் ளடக்கியது ஆரணி மக்களவைத் தொகுதி. இது சாதிப் பாசம் தூக்கலாக உள்ள தொகுதி.

கடந்த 2014 தேர்தலில் வெற்றிபெற்ற செஞ்சி ஏழுமலைக்கே மீண்டும் அ.தி.மு.க.வில் சீட் கிடைத்திருக்கிறது. ஆனால், செஞ்சி ஏழுமலை தனது பதவிக்காலத்தில் கட்சி நிர்வாகிகளின் நல்லது, கெட்டதுகள் எதிலும் கலந்துக்கொள்ளா தவர். மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளிலும் 80 சதவிதம் கலந்து கொண்டதேயில்லை. இப்படிப்பட்டவருக்கு மீண்டும் சீட் கொடுத்ததை அ.தி.மு.க.வினரே எதிர்க்கிறார்கள். இதையறிந்த ஏழுமலை "நான் எந்த தப்பு செய்திருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க. இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன். என்னை மீண்டும் வெற்றிபெற வைங்க' என கட்சிக் கூட்டத்தில் கையெடுத் துக் கும்பிட்டுக் கெஞ்சினார்.

tmalai

இவருக்காக அமைச்சர் சேவூர் ராமச் சந்திரனும், வடக்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வு மான தூசி.மோகனும் "அவரை மன்னிச் சிடுங்க... இனிமே நல்லா செய்வார்' என்று வாக்குறுதி தருகிறார்கள்.

"இந்தமுறை நாமே நின்றிருந்தால் ஈஸியா ஜெயிச்சியிருக்கலாம். இப்படி கூட்டணிக் கட்சிக்கு தந்துட்டாங்களே' என்கிற வருத்தம் தி.மு.க.வின ரிடம் உள்ளது. அதிலும் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் விஷ்ணுபிரசாத் வேட்பாளர் என்றதும் காங்கிரசை விட தி.மு.க.வினர் சோர்ந்துவிட்டனர். விஷ்ணுபிரசாத்தோட அப்பா இந்த தொகுதியில் இரண்டுமுறை வெற்றி பெற்று எம்.பி.யா இருந்திருக்கார். அவரும் பெருசா இந்த தொகுதிக்கு எதுவும் செய்யல, விஷ்ணுபிரசாத் செய்யாறு எம்.எல்.ஏ.வா இருந்திருக்கார். செய்யாறுக்காக சில திட்டங்கள் செய்து தந்தார், அதைத்தவிர பெருசா எதையும் சாதிக்கல. "மக்க ளிடம் நெருக்க மில்லாத இவரை எப்படி கரை சேக்குறதுன்னு தெரியல' என்கி றார்கள். விஷ்ணு பிரசாத்தோ எ.வ.வேலுவையே நம்பியுள்ளார். அவர் தொகுதிக்கு வந்து கட்சியினருக்கு பூஸ்ட் தந்துவிட்டுப்போக... அதிருப்திகளுக்கு மத்தியிலும் தி.மு.க. நிர்வாகிகள் விஷ்ணுபிரசாத்தை தோளில் சுமக்கத் தொடங்கியுள்ளனர்.

அ.ம.மு.க. வேட்பாளராக தொகுதிக்கும், மாவட்டத்துக்கும் சம்மந்தமில்லாத முன்னாள் அமைச்சர் செந்தமிழன் வேட் பாளராக போட்டியிடுகிறார். இங்கு அ.ம.மு.க. சார்பில் யார் நின்றாலும் ஜெயிக்க முடியாது என்பதால்தான் சென்னையைச் சேர்ந்த செந்தமிழனை இங்கு நிறுத்தியிருப்பதாக அ.ம.மு.க. வினரே கூறுகிறார்கள். "சுவர் விளம்பரம் எழுதக்கூட இன்னும் சரியாக பணம் தரவில்லை' என்று புலம்பும் நிலை இருக்கிறது. அதேசமயம், அ.ம.மு.க.வைவிட தொண்டர் செல்வாக்கும், மக்கள் செல்வாக்கும் இல்லாத மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்தில் முந்துகிறது. அந்தக் கட்சி வேட்பாளராக விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்தை சேர்ந்த ஷாஜி என்கிற 8-வது வரை மட்டுமே படித்த, தொழிலதிபர் போட்டியிடுகிறார். "தொகுதியில் கணிசமாக உள்ள இஸ்லாமிய வாக்குகளை வாங்கி கவுரவமாக தோற்க வேண்டும்' என நினைக்கிறார் என்கிறார்கள்.

மொத்தத்தில் அ.தி.மு.க.வுக் கும் காங்கிரஸுக்குமே நிஜமான போட்டி நிலவுகிறது. இங்கும் அ.ம.மு.க. எவ்வளவு வாக்குகளை பிரிக்கும் என்பதிலேயே வெற்றி, தோல்வி இருக்கிறது.

-து. ராஜா