Advertisment

ஊழலைப் பாதுகாக்கும் அ.தி.மு.க. அரசு! -வருமா லோக் அயுக்தா?

lokayuk

1966-ல் முடிவெடுக்கப்பட்டும் இன்றுவரை தமிழ்நாட்டிலும் வடகிழக்கு மாநிலங்களிலும்தான் லோக்அயுக்தா அமைக்கப்படவில்லை. அப்படி அந்த அமைப்பைப் பார்த்து தமிழ்நாடு பயப்படும் அளவுக்கு ஆபத்தானதா?

Advertisment

ஆபத்தானது என்றால் 1971-லேயே மகாராஷ்டிரா எப்படி அதை அமைத்தது? ஒடிஸா, ராஜஸ்தான், பிகார், உத்தரப்பிர தேசம், கர்நாடகா, மத்தியப்பிர தேசம், குஜராத், கேரளா, டெல்லி ஆகியவை இந்த லோக்அயுக்தாவை அமைத்துள்ளன.

Advertisment

lokayukஇந்த அமைப்பில் அப்படி என்ன அச்சுறுத்தல் இருக்கிறது? வேறு ஒன்று மில்லை, அரசு அதி காரிகளோ, அமைச்சர்களோ மற்றும் முதல்வரோ தவறு செய்ததற்கு ஆதாரம் இருந்தால் போதும். சாமானியனும் புகார்கொடுத்து அவர்களை கூண்டிலேற்ற இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அத்துடன், விசாரணையையும் இழுத்தடிக்க முடியாது.

லோக் அயுக்தாவை யார் அமைக்க வேண்டும்? மாநில அரசு சட்டப்பேரவையில் மசோதாவாக தாக் கல் செய்து நிறைவேற்ற வேண்டும். ஆளுநர் ஒப்புத லோடு

1966-ல் முடிவெடுக்கப்பட்டும் இன்றுவரை தமிழ்நாட்டிலும் வடகிழக்கு மாநிலங்களிலும்தான் லோக்அயுக்தா அமைக்கப்படவில்லை. அப்படி அந்த அமைப்பைப் பார்த்து தமிழ்நாடு பயப்படும் அளவுக்கு ஆபத்தானதா?

Advertisment

ஆபத்தானது என்றால் 1971-லேயே மகாராஷ்டிரா எப்படி அதை அமைத்தது? ஒடிஸா, ராஜஸ்தான், பிகார், உத்தரப்பிர தேசம், கர்நாடகா, மத்தியப்பிர தேசம், குஜராத், கேரளா, டெல்லி ஆகியவை இந்த லோக்அயுக்தாவை அமைத்துள்ளன.

Advertisment

lokayukஇந்த அமைப்பில் அப்படி என்ன அச்சுறுத்தல் இருக்கிறது? வேறு ஒன்று மில்லை, அரசு அதி காரிகளோ, அமைச்சர்களோ மற்றும் முதல்வரோ தவறு செய்ததற்கு ஆதாரம் இருந்தால் போதும். சாமானியனும் புகார்கொடுத்து அவர்களை கூண்டிலேற்ற இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அத்துடன், விசாரணையையும் இழுத்தடிக்க முடியாது.

லோக் அயுக்தாவை யார் அமைக்க வேண்டும்? மாநில அரசு சட்டப்பேரவையில் மசோதாவாக தாக் கல் செய்து நிறைவேற்ற வேண்டும். ஆளுநர் ஒப்புத லோடு லோக் அயுக்தா அமையும். பின்னர் இந்த அமைப்பை மாநில அரசேகூட கலைக்க முடியாது.

இப்போது பல மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்பு செயல்பட்டாலும் மகாராஷ்டிராவில் உள்ள லோக்அயுக்தா அமைப்புதான் மிகவும் பலவீனமானது. அங்கு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் குற்றவாளிகளின் பெயர்களை அரசு வெளியிடாமல் தவிர்க்க முடியும். இருப்பதிலேயே பவர்புல் லோக்அயுக்தா கர்நாடகாவில் இயங்குவதுதான் என்கிறார்கள்.

தென்மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் லோக்அயுக்தா அமைப்பு நிறுவப்படவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சமயங்களில் குரல் கொடுத்தாலும், அ.தி.மு.க. அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்நிலையில்தான், லோக்அயுக்தா அமைக்க வேண்டும் என்றுகூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் குருநாதன் என்பவர் வழக்குத் தொடர்ந் தார்.

"லோக்அயுக்தா சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர மத்தியஅரசு திட்டமிட்டிருக்கிறது. அந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டவுடன் தமிழகத்தில் லோக்அயுக்தா நிறுவப்படும்' என்று தமிழகஅரசின் வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

lokayuk

எனவே, குருநாதன் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில்தான் "ஜூலை 10-ஆம் தேதிக்குள் தமிழக அரசு லோக்அயுக்தாவை அமைக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, குருநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தனிடம் பேசினோம்.…

""லோக்பால் சட்டத்தில் 66 பிரிவின்கீழ் எல்லா மாநிலங்களும் லோக் அயுக்தாவை கட்டாயம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு லோக்அயுக்தாவை அமைக்காமல் காலங்கடத்துவதாக, 2016-ஆம் ஆண்டு மதுரைக்கிளையில் பொதுநல வழக்கை தொடர்ந்தோம். மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டுவந்த பிறகு லோக்அயுக்தா அமைக்கப்படும் என்கிற வாதம் அரசுத்தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருத்தங்கள் மத்திய அரசுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மாநிலங்கள் லோக் அயுக்தாவை அமைக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. என்றாலும் தமிழக அரசு லோக்அயுக்தாவை உருவாக்கத் தயாராக இல்லை. எனவேதான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். தமிழகம் தவிர லோக்அயுக்தா அமைக்காத மாநிலங்கள் சார்பிலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்குகளுடன் எங்கள் வழக்கும் சேர்க்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு முன் லோக்அயுக்தா அமைக்காத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அனைவரும், இதுகுறித்து என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது.

2014-ஆம் ஆண்டு முதல் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற வாதத்தை நாங்கள் முன்வைத்தோம்.

lawyer-anandhநீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி பானுமதி ஆகியோர் விசாரணை நடத்தினர். "மத்திய அரசு சட்டத்திருத்தம் என்பது வேறு மாநிலங்களுக்கு என தனியாக சட்டம் இருக்கிறது. தமிழகத்தில் ஜூலை 10-ஆம் தேதிக்குள் லோக்அயுக்தாவை அமைத்து அதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது, இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.விஜயகுமாரிடம் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். "லோக்அயுக்தாவை அமைக்க தமிழக அரசு தயாராக இல்லை என்பது தெரிகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆர்வம் இல்லை. அவர்களைக் காப்பாற்ற அரசு துணைபோவதாகத் தோன்றுகிறது' என நீதிபதிகள் குறிப் பிட்டனர்.

"நீதிமன்றம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் லோக்அயுக்தாவை அமைக்கவிட்டால் தலைமைச் செயலாளர் ஆஜராக நேரிடும்' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்'' என்றார்.

ஊழல் வழக்கில் பல்கலைக்கழக துணை வேந்தர் தொடங்கி காவல் துறை அதிகாரிகள்வரை தொடர்ந்து கைது செய்யப் பட்டுவரும் நிலையில் இந்தச் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

Lokayukta
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe