"ஹலோ தலைவரே, கோட்டைத் தரப்பில் அதிக பரபரப்பு தெரியுது.''”
"ஆமாம்பா, தமிழக காவல்துறை பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசுக்கு புகார் அனுப்பி இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஒன்றிய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கும் கவர்னர் ரவி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு நடுவே தற்போது சட்டவிரோத போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து இருப்பதோடு, பள்ளி மாணவ- மாணவியரையும் இது தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. போதைப்பொருள் பிஸினஸில் மாதம் சுமார் 1000 கோடி ரூபாய் வரை புழங்குகிறது. இதனைத் தடுக்க வேண்டிய தமிழக காவல்துறையினர், குற்றவாளிகளோடு நெருக்கமாக இருக்கிறார்கள் என்று தீவிரக் குரலில் குற்றம் சாட்டியிருக்கிறார். உடனடியாக இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு மாநில உளவுத்துறை கொண்டுவர... ஷாக்கான அவர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை 10-ந் தேதி கூட்டி, அதிகாரிகளைக் கடுமையாக எச்சரிச் சிருக்கார். கூட்டத்தில் பல்வேறு விவாதங் களும் நடந்திருக்கு.'
"ஹலோ தலைவரே, கோட்டைத் தரப்பில் அதிக பரபரப்பு தெரியுது.''”
"ஆமாம்பா, தமிழக காவல்துறை பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசுக்கு புகார் அனுப்பி இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஒன்றிய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கும் கவர்னர் ரவி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு நடுவே தற்போது சட்டவிரோத போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து இருப்பதோடு, பள்ளி மாணவ- மாணவியரையும் இது தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. போதைப்பொருள் பிஸினஸில் மாதம் சுமார் 1000 கோடி ரூபாய் வரை புழங்குகிறது. இதனைத் தடுக்க வேண்டிய தமிழக காவல்துறையினர், குற்றவாளிகளோடு நெருக்கமாக இருக்கிறார்கள் என்று தீவிரக் குரலில் குற்றம் சாட்டியிருக்கிறார். உடனடியாக இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு மாநில உளவுத்துறை கொண்டுவர... ஷாக்கான அவர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை 10-ந் தேதி கூட்டி, அதிகாரிகளைக் கடுமையாக எச்சரிச் சிருக்கார். கூட்டத்தில் பல்வேறு விவாதங் களும் நடந்திருக்கு.''”
"அப்படி என்ன விவாதிக்கப் பட்டது?''”
"சென்னை கலைவாணர்அரங்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அதிகாரிகள் தரப்பை எச்சரித்ததோடு, தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படும் குற்றச் சாட்டு கவலையை அளிக்கிறது என்றும், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை ஒப்பிடுகையில் இங்கு குறைவு என்றாலும், இதை நாம் அனுமதிக்க முடியாது. இதை முற்றிலும் தடுத்தே ஆகவேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களின் சொத்துக்களைத் தயவு தாட்சண்யமின்றிப் பறிமுதல் செய்யவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தி இருக்கிறார். அதிகாரிகளோ, முந்தைய ஆட்சியில் அதிகரித்திருந்த போதைப் பொருள் புழக்கத்தை இப்போது வெகுவாகக் குறைத்துள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் முதல்வர் முகத்தில் திருப்தி தெரியவில்லையாம்.''’
"அ.தி.மு.க.வின் மறைந்த முதல் எம்.பி. என்ற பெருமைக்குரியவரான திண்டுக்கல் மாயத்தேவருக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி போகலையே?''”
"அவர் அஞ்சலி செலுத்த முதலில் ஆயத்தமாக இருந்தார். ஆனால் கட்சியின் சீனியர்களோ, ஓ.பி.எஸ்.ஸும், சசிகலாவும் அங்கே செல்வார்கள் என்று சொல்ல, இந்த சூழலில் நான் அங்கு சென்றால் சலசலப்புதான் ஏற்படும்னு உடனே தயக்கத்தைக் காட்டியிருக்கிறார் எடப்பாடி. இதை ஆமோதித்த சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர், உங்கள் சார்பில் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம் என்று அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றோர், மாயத்தேவருக்கு அஞ்சலி செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்துவது போல என்று சொன்னபோதும் அங்கே செல்வதைத் தவிர்த்துவிட்டார் எடப்பாடி.''’
"ஓ.பி.எஸ்.ஸும் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி இருக்கிறாரே?''”
"எடப்பாடியால் பதவி பறிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு. ஓ.பி.எஸ். தன் டீமில் பதவிகளைப் போட்டுக் கொடுத்திருகிறார். எனினும், அவர்களுக்கு எந்த செயல் திட்டத்தையும் அவர் கொடுக்கலையாம். இது குறித்து, அவர்கள் தங்கள் ஆதங்கத்தை ஓ.பி.எஸ்.ஸின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால், அவர்களை எல்லாம் சென்னைக்கு வரச்சொல்லி 9-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஓ.பி.எஸ். எடப்பாடி கூட்டிய பொதுக்குழு பற்றி நாம் போட்ட வழக்கில், ஒரு தெளிவான தீர்ப்பு வந்தபிறகு, உங்களுக்கான பணிகள் குறித்துச் சொல்வேன். எப்போதுமே இறுதி வெற்றி நமக்குத்தான். துரோகிகள் வீழ்வார்கள் என்றெல்லாம் அவர் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். தங்கள் அணியின் பலத்தைக் கூட்ட ஓ.பி.எஸ்., விரைவில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாராம்.''”
"சரிப்பா, இங்குள்ள அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருக்காங்களே?''”
"தங்களது நீண்ட கால கோரிக்கையை தி.மு.க. அரசும் கண்டுக்கலைங்கிற அதிருப்தியில் அரசு ஊழியர்கள் இருக்காங்க. இந்தச் சூழலில் முதல்வர் ஸ்டாலினை, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றி யத்தின் தலைவர் சண்முகராஜன் சந்திச்சிப் பேசி இருக்கார். தங்கள் சங்கத்தின் 54-ஆவது மாநில மாநாட்டை அக்டோபரில் அவர் நடத்துகிறார். இதற்கு முதல்வரை அழைக்கணும் என்பது சங்கத்தின் ஆர்வம். அதற்காக அப்பாயின்மென்ட் கேட்டும், இழுத்தடிக்கப்பட்ட நிலையில்தான், அரசு ஊழியர்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் விமர்சித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தை, அரசு அலுவலர் ஒன்றியம் அறிவித்து, அதற்கான ஆயத்தத்தில் இருந்தது. இதற்கிடையில்தான் முதல்வரின் சந்திப்பு நடந்திருக்கு.''’
"இது தொடர்பாக நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். 8-ந் தேதி அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டம் தொடங்க இருந்ததைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின், அதே நாளில் சண்முகராஜனை சந்திச்சிருக்கார். அப்ப, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில், அவர்களின் அகவிலைப்படியை விரைவில் உயர்த்தித்தருவதாக வாக்குறுதி கொடுத்ததோடு, மற்ற கோரிக்கை களையும் படிப்படியா நிறைவேற்றுவ தாகச் சொல்லி, அவர்கள் தரப்பை மனம் குளிர வைத்திருக்கிறார். அதோடு, அவர்களை விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைக் கண்டிப்ப தாகவும் முதல்வர் சொல்லி இருக்கிறாராம்.''’