ட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டச் செயலாளர்களை மாற்ற அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் னோடியாக தமிழகம் முழுவதும் 90 போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது அ.தி.மு.க அரசு.

இந்த மாற்றங்களை செய்தவர் தற்போது முதல்வரின் அரசியல் ஆலோசகராக இருக்கும் முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி. முதல்வருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுக்கும் சுனில், சென்னை சூளைமேடு பகுதியில் ஒரு அலுவலகத்தை திறந்துள்ளார். அந்த அலுவலகத்திற்கு தினமும் காலையில் சத்தியமூர்த்தி வந்துவிடுகிறார். அவருடன் முதல்வரின் மகன் மிதுன் இணைகிறார். இந்த மூவரும் சேர்ந்து எந்தெந்த போலீஸ் அதிகாரிகளை எங்கு நியமிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள்.

p

ஸ்ரீநாதா என்பவர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி. அவர் சத்தியமூர்த்தியிடம் தொலைபேசியில் பேசுகிறார். அவரிடம் நீங்கள் அதிமுகவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் தேர்தல் கமிஷன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கும். திமுக கொடுக்கும் விதிமுறை மீறல்கள் பற்றிய புகார்கள் அடிப்படையில் தேர்தல் கமிஷ்னர் சில சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க சொல்வார்.

Advertisment

கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பணம் கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்டது. வங்கீதா பாண்டே என்கிற போலீஸ் அதிகாரி, அதிமுகவுக்கு நெருக்கமான அன்புநாதன்என்பவர் வீட்டில் நடந்த பண விநியோகத்தை கையும் களவுமாக பிடித்தார். ஆனால், இதுபோல வரும் தேர்தல் நேரத்தில் நீங்கள் எதையும் செய்யக்கூடாது. திமுகவினரின் செயல்பாடுகளை முடக்க வேண்டும், அதிமுகவினரின் செயல்பாடுகளை கண்டுக்கொள்ளக்கூடாது என ஸ்ரீநாதாவிடம் சத்தியமூர்த்தி ஒரு உறுதிமொழி கேட்டுள்ளார். அதனை அவர் ஏற்றுக்கொண்டவுடன் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக நியமித்துள்ளார்.

செந்தில்பாலாஜிக்கு செக் வைக்க கரூருக்கு பகலவன், அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு செக் வைக்க திருச்சிக்கு ஜெயச்சந்திரன், எ.வ.வேலுவுக்கு ஃபைட் கொடுக்க திருவண்ணாமலைக்கு அரவிந்தன், பொன்முடிக்கு ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரத்திற்கு சண்முகப்பிரியா என எஸ்.பி.க்களை பொறுக்கி எடுத்து இம்மூவரும் நியமித்துள்ளனர்.

அதே நேரத்தில் அதிமுக பலமாக உள்ள கவுண்டர் பெல்டில் கடந்த மூன்று வருடமாக பணி செய்த அதிகாரிகளை பக்கத்து பக்கத்து மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். ஈரோட்டில் இருந்த சக்தி கணேஷ் நாமக்கல்லுக்கும், நாமக்கல்லில் இருந்து அருளரசு கோயம்பத்தூருக்கு மாற்றப்பட்டார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

Advertisment

இந்த மூவர் கூட்டணி நியமனத்தில் டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாவட்ட அமைச்சர்கள் என யாருடைய தலையீடும் வரக்கூடாது என ஸ்பெஷல் உத்தரவுபோட்டு நடைமுறைப்படுத்தியுள்ளார் எடப்பாடி என்கிறது தலைமைச் செயலக வட்டாரங்கள்.

-தாமோதரன் பிரகாஷ்