ங்களது நீலகிரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புத்திசந்திரன் இந்த உதகை மார்க்கெட்டை சிறப்புடன் நடத்துகிறார். உங்கள் மனக்குறைகளை அவர் சரி செய்து கொடுப்பார்...'' எனச் சொல்லி இந்த பொன்னாடையை அவருக்கு அணிவிக்கிறேன்... என புத்திசந்திரனுக்கு பொன்னாடையை இன்முகத்தோடு போர்த்தினார்கள் முஸ்தபாவும், ரவிகுமாரும்.

velumani

இப்படி பாராட்டி, சீராட்டி பேசிய இருவரும் அதிமுகவினர் அல்ல.

முஸ்தபா தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினரும், தி.மு.க.வின் தொழில் நுட்ப அணியின் அமைப்பாளரும் ஆவார். ரவிகுமார் நீலகிரி தி.மு.க.வின் மாவட்ட துணை செயலாளர் என்பதுதான் அதிர்ச்சி கலந்த வேடிக்கை.

Advertisment

அ.தி.மு.க. மாவட்ட செயலாளரை தி.மு.க.வினர் எதற்காக பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்? லோக்கல் அ.தி.மு.கவினர் நம்மிடம், ""இந்த ஊட்டி மார்க்கெட்டில் 2000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்த கடைகளுக்கு ரொம்ப காலமாகவே வாடகை உயர்த்தப் படவில்லை. மாதம் 3 கோடி ரூபாய் வாடகையாக நகராட்சிக்கு வருகிறது.

இந்த வாடகை உயர்த்தப்படாத விஷயம் எஸ்.பி வேலுமணியின் கவனத்துக்கு தெரிய வந்த போது, பல கட்ட ஆய்வுக்கு பின், கடைகளுக்கு வாடகையை உயர்த்தி மாதம் 12 கோடி ரூபாய் நகராட்சிக்கு வரும்படி செய்துவிட்டார். இந்த திடீர் வாடகை உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட கட்சி வியாபாரிகள் வேலுமணியிடம் முறையிட்டனர். அமைச்சர் வேலுமணியும் சரி குறைக்கப் பார்க்கிறேன் என உறுதி கொடுத்தார்.

இந்த நிலையில்தான் புத்திசந்திரன் மார்க்கெட்டுக்குள் தலையிட ஆரம்பித்து பெரும்பான்மையான கடைகளை தி.மு.க. நிர்வாகிகளான முஸ்தபா, ரவிகுமாரின் கட்டுப்பாட்டில் மேல் வாடகைக்கு விட்டு விட்டார். வாடகையை குறைத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என புத்திசந்திரன் எங்கள் கட்சி வியாபாரிகளிடம் கறாராய் சொல்லி விட்டார்.

Advertisment

அடுத்த நாளே, புத்திசந்திரன் தலைமையில் அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் ராஜாமுஹமது, ரவிகுமார், முஸ்தபா ஆகியோர் நஹார் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையில்... ""மாத வாடகை 12 கோடி என்பது அதிகம் என பலரும் சொல்கின்றனர். நீங்கள்தான் அதிக கடைகளை எடுத்து இருக்கறீர்கள். அமைச்சர் வேலுமணியிடம் பேசி 6

dd

கோடியாக குறைக்கிறேன். இப்போது 6 கோடி ரூபாயை கொடுங்கள். அமைச்சரை சரிக்கட்டி விடுகிறேன். ஒருமுறை தானே கொடுக்கிறீர்கள். பின்னர் மாதா மாதம் வசூலாகும் 6 கோடியில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்குமல்ல'' எனச் சொல்லி இருக்கிறார் புத்திசந்திரன். இதை ஆமோதித்த முஸ்தபாவும், ரவிகுமாரும்தான் பொன்னாடைகளில் பொங்கி விட்டனர்.

இவர்கள் கூட்டணி எங்கள் அ.தி.மு.க.வின ருக்குத் தெரிய வர, மார்க்கெட்டுக்குள் புத்திச்சந்திரன் வரக் கூடாது, வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் எனப் பொங்கிவிட்டனர். ஆனால் திடீரென கடந்த ஜூன் 22-ந் தேதி 86 கடைகள் தீக்கிரையாகி விட்டன. இதை சாதகமாய் பயன்படுத்த நினைத்த புத்தி, எரிந்த கடைகளின் உரிமை கொண்டவர்களுக்கு தலா 5000 ரூபாயை கொடுத்தார். ஆனாலும் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அத்தனை பேரும் சேர்ந்து புத்திக்கு எதிராக எதிர்ப்பு காட்டிக் கொண்டே இருக்கின்ற னர்... என்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.

இதுகுறித்து கேட்க நாம் தி.மு.க. ரவிகுமாரை தொடர்பு கொண்ட போது... தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்றே அலைபேசி சொல்கிறது. பின் தி.மு.க. முஸ்தபாவை தொடர்பு கொண்டோம்.

அவரோ, ""எங்கள் உதகை மார்க்கெட்டில் 86 கடைகள் தீக்கிரையான போது, புத்திசந்திரன் 5000 ரூபாய் பணம் கொடுத்ததோடு, இன்னும் ஒரே மாசத்தில் எரிந்துபோன கடைகளை சரி செய்து கொடுப்பேன் என உறுதி அளித்தார். அதனால் தான் சங்கத்தின் சார்பாக பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தினோம். இதில் அரசியல் இல்லை'' என்றார் பதற்றமான குரலில்.

அ.தி.மு.க. நீலகிரி மாவட்ட செயலாளர் புத்திசந்திரனை தொடர்பு கொண்டு, அமைச்சர் வேலுமணிக்கு கொடுக்க வேண்டும் என திமுக பிரமுகர்களிடம் 6 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுகிறதே எனக் கேட்டோம். அவரோ, ""நான் எதுக்கு சார் பணம் கேட்கணும்? நான் பண்ணிய செயல்களைப் பார்த்து நீங்கள் சொல்லும் இருவரும் பாராட்டிப் பேசினார்கள். அது எங்கள் அ.தி.மு.க. கட்சியின் ஆட்சிக்கு கிடைத்த சாதனை என கருதுகிறேன். அமைச்சர் வேலுமணிக்கு கொடுக்க வேண்டும் என நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை'' என மறுத்தார்.

காய்கறி மார்க்கெட்டில் ஏதோ கள்ள மார்க்கெட்தனம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

-அ.அருள்குமார்