Advertisment

அ.தி.மு.க. காணாமல் போகும்! - கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேச்சு!

ss

தி.மு.க. மாநில வர்த்தகர் அணி சார்பில் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில், கடந்த நவம்பர் 26, ஞாயிறன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை, கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட 'கலை இலக்கிய நாடகத் திருவிழா' நடைபெற்றது. மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம், துணைத்தலைவர் பழஞ்சூர் கே.செல்வம், இணைச்செயலாளர் திண்டுக்கல் வி.ஜெயன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி. செழியன், திருச்சி மத்திய மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சிங்காரம் ஆகியோர் விழாவை சிறப்பாக நடத்தினர். திருச்சி மேயர் அன்பழகன், தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில், திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கி

தி.மு.க. மாநில வர்த்தகர் அணி சார்பில் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில், கடந்த நவம்பர் 26, ஞாயிறன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை, கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட 'கலை இலக்கிய நாடகத் திருவிழா' நடைபெற்றது. மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம், துணைத்தலைவர் பழஞ்சூர் கே.செல்வம், இணைச்செயலாளர் திண்டுக்கல் வி.ஜெயன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி. செழியன், திருச்சி மத்திய மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சிங்காரம் ஆகியோர் விழாவை சிறப்பாக நடத்தினர். திருச்சி மேயர் அன்பழகன், தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில், திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கலைஞரின் எழுத்தில் உருவான படைப்புக்களிலிருந்து சிலப்பதிகாரக் காட்சி, பராசக்தி, மனோகரா திரைப்படக் காட்சிகள், புறநானூற்று காட்சிகள் போன்றவற்றை மேடை நாடகங்களாக மிகவும் உணர்வுப்பூர்வமாக பேராசிரியர் கி.பார்த்திபராஜா குழுவினர் நடித்தனர்.

Advertisment

kk

விழாவில் பேசிய மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி.முத்து மாணிக்கம், "வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன்சிங் என நான்கு பிரதமர்களை தந்து, காமராஜர் போல் கிங்மேக்கராக திகழ்ந்தவர் கலைஞர். அதிக எழுத்துக்கள் எழுதியவர், அதிக நாட்கள் முதல்வராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தன் ஆட்சிக்காலத்தில் அதிக சாதனைகளைச் செய்தவர் கலைஞர்.

உலகிலேயே காலை உணவை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் தந்து, வாழும் காமராஜராய், வாரத்திற்கு 5 முட்டை தந்த கலைஞராய் திகழ்பவர் தளபதி ஸ்டாலின். சுதந்திர தினத்தில் கொடி ஏற்றிட அனைத்து முதல்வர்களுக்கும் உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். வாக்குரிமை இல்லாத, ரேஷன் கார்டு இல்லாத பிச்சைக்காரர்களுக்கு, தொழுநோயாளிகளுக்கு முகாம் அமைத்தவர், தொழுநோயை ஒழித்தவர் கலைஞர். கொரோனா காலத்தில் வார்டு வார்டாக சென்று கொரோனாவை விரட்டியவர் ஸ்டாலின்.

kk

Advertisment

நம் மாநில அரசுக்கு தீங்கு செய்துவரும் கவர்னர், தேர்தல் முடிந்தவுடன் விரட்டப்பட வேண்டும். வழக்கு என்றவுடன் எதற்கு அவசரமாக 10 மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும்? ஒப்புதல் கொடுத்திருக்க லாமே! "எங்களிடம் வழக்கு வந்தவுடன் அவசரமாக திருப்பி அனுப்பினீர்களே, 2 ஆண்டு காலம் என்ன செய்தீர்கள்?'' என குட்டியது உச்சநீதிமன்றம். முதல் நாள், அமைச்சர் பொறுப்பிலிருந்து செந்தில் பாலாஜி யை நீக்குகிறேன் என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளே முதல்வரின் கடும் கண்டனத்துக்கு பயந்து அறிவித்த ஆணையைத் திரும்பப்பெறுகிறார்.

தமிழ்நாட்டை இனி தமிழ்நாடு என்று சொல் லவே கூடாது என்பதும், அத்துடன், குடியரசு விழா அழைப்பிதழிலும் 'தமிழகம்' என்று போட்டதுடன் கோபுர இலச்சினையை எடுத்துவிட்டு மத்திய அரசின் இலச்சினையை போட்டார். டெல்லி கூப்பிட்டு சத்தம் போட்டபின் மாற்றினார்.

kk

'திராவிட நாடு' கி.பி. 600வது ஆண்டிலேயே நடைமுறையில் இருந்தது. ஆனால் கவர்னரோ வெள்ளைக்காரன் உருவாக்கியது என்றார், பின் எதிர்ப்பு வரவும் அடங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கு வதைத் தடுத்து திருப்பியனுப்பி, பின் தமிழ்நாட்டு மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை, ராஜாஜிக்குப்பின் சுதந்திரா கட்சி எப்படி ஆனதோ, அப்படித்தான் அ.தி.மு.க.வும் இந்தத் தேர்தலோடு காணாமல் போகும். தமிழகம் இன்னும் அரை நூற்றாண்டு காலம் தலைவர் ஸ்டாலின் புகழ்பாடும். வரும் 17 டிசம்பர் சேலம் மாநாட்டில் சந்திப்போம், திரண்டு வாருங்கள்!'' என்று தமிழ்நாடு கவர்னரையும், அ.தி.மு.க.வையும் தனது பேச்சில் ஒரு பிடிபிடித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நலிவுற்ற நாடகக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல மாவட் டங்களிலிருந்து 5,000 பேருக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

dd

nkn071223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe