திர்க்கட்சி வரிசையிலிருக்கும் போதுதான் ஒரு கட்சியின் அசல் பலம் தெரியவரும். ஆட்சியிலிருக்கும்போது அதிகாரத்திற்கும் ஆதாயத்துக்காகவும் கூட இருக்கும் பலர், எதிர்க்கட்சியானதும் நழுவ ஆரம்பிப்பார்கள். அணி தாவத் தொடங்கு வார்கள். அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்பின் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இரட்டை இலை சரிவைச் சந்தித்து வருவதாக உண்மைத் தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

vaa

தஞ்சை மாவட்டத்திலிருந்து மட்டும் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு அதிகளவில் கட்சித் தாவல் செய்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானதால், அதற்கான காரணம் குறித்து விசாரிக்க களத்தில் இறங்கினோம். பல்வேறு தொண் டர்களிடமும் கட்சி நிர்வாகி களிடமும் பேசியபோது, மக்கள் மத்தியில் அ.தி.மு.க. செல்வாக்கிழக்க யார் காரணம் என கேட்டபோது பல விரல்கள் ஒரேதிசை நோக்கி நீண்டன. தொண்டர்களும் கட்சியினரும் சொன்னதன் தொகுப்பே இது:

தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், அ.தி.மு.க. கழக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப் பினருமான ஆர்.வைத்திலிங்கம். அமைச்சராக இருந்த காலகட்டத்தில், கட்சிரீதியாக எந்த இடத் திலும் மற்ற நிர்வாகிகளை அங்கீகரிக்க மாட்டார். அவர்களோடு எந்த இடத்திலும் இணைந்து செயல்படவே மாட்டார். அவருக்கு என்று ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டு, அவர்கள் மட்டுமே அ.தி.மு.க. நிர்வாகிகள் என்ற சிந்தனையோடு வலம் வருகிறவர்.

Advertisment

நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்றும் சென்னையிலேயே தங்கியிருக்கும் அவர், தன்னு டைய தொகுதிக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை. அப்படியே தொகுதிக்கு வந்தாலும், தனது பர்சனல் தொடர்பாக யாரையாவது சந்திக்க வருவார். சமீ பத்தில் தஞ்சைக்கு வந்துவிட்டு சென்றபோதெல் லாம், தன்னுடைய சொத்துக்கு பினாமியாக இருப்பவர்களை அழைத்து அவர்களிடமுள்ள சொத்துக்களை எழுதிவாங்கும் பணிதான் அதிகபட்சமாக நடைபெற்றுள்ளது.

தஞ்சை நீலகிரி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பரசுராமன், வைத்திலிங்கத் தின் மூத்தமகன் பிரபு இருவரும் இணைந்து வைத்திலிங்கத்தின் மனைவி பெயரில் (தங்கம் நகர்) ரியல் எஸ்டேட் தொழில் நடத்திவந்தனர். கணக்கு வழக்கு அனைத்தும் பரசுராம் பெயரி லேயே இருந்தது. வைத்திலிங்கம் தான், பரசுராமுக்கு பாராளுமன்ற சீட்டு வாங்கிக் கொடுத்தார்.

vav

Advertisment

இதனிடையே பரசு ராமின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவரிடமுள்ள அனைத்து சொத்துக்களை யும் வைத்தி லிங்கம் எழுதி வாங்கிவிட் டார். இதனால் விரக்தியடைந்த அவர் அ.தி. மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோருடன் சென்னைக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

கல்லணையைக் கட்டிய மாமன்னர் பெயர் கொண்ட தன்னுடைய பங்காளியான ஒருவரிட மிருந்தும் பினாமி சொத்துக்களை எழுதி வாங்கி விட்டார். விசுவாசமாக உழைத்து திருச்சி மணப் பாறையில் ஒரு பெரிய தனியார் பள்ளி, சென்னை மகேந்திரா சிட்டியில் ஒரு பள்ளி, ஆந்திராவில் பார்மா நிறுவனம் என்று அதிகளவில் சொத்து சேர்த்துக் கொடுத்த தன்னிடமுள்ள சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிவிட்டு, துரோகம் செய்துவிட்டாரே என்ற விரக்தியில் இப்போது அவர் வைத்திலிங்கத்தை விட்டு சற்றே தள்ளியிருக்கிறார்.

வைத்திலிங்கத்தின் பினாமியும் சம்பந்தியு மான தவமணியின் பெயரில் தஞ்சையிலுள்ள பெரும்பாலான ஓட்டல்கள் இருந்தன. அந்த சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய இரண்டாவது மகன் பெயரில் மாற்றியெழுதி வைத்துவிட்டார். தவமணி காவல்துறையில் பணியாற்றியவர். தன்னுடைய பணியை உதறிவிட்டு முழுநேரமாக சம்பந்தி வைத்திலிங்கத்திற்காகவும், அவருடைய சொத்துக்களைப் பாதுகாப்பதற் காகவும் பணியாற்றியவர்.

அதேபோல் தஞ்சை மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்த ஆர்.காந்திதான் வைத்தி லிங்கத்திற்கு வலதுகரம், பி.ஏ. எல்லாமுமாக இருந்தவர். கடந்த 10 வருட காலமாக டாஸ்மாக் உற்பத்தி செய்வதிலிருந்து கடைகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும் வரை தமிழகம் முழுவதும் பயன் படுத்தப்பட்ட லாரிகள் அனைத்தையும் தற்போது காந்தியிடமிருந்து எழுதி வாங்கிக்கொண்டார். தற்போது அந்த லாரிகள் அனைத்தையும் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆனால் காந்தியின் பெயரிலேயே அதற்கான வரியையும் செலுத்தியதோடு, இடைத்தேர்தலில் அவருக்கு சீட்டு வாங்கித் தருவதாக கூறி அவர் சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் செலவுசெய்ய வைத்துள்ளார். தன்னை இக்கட்டான நிலைக்கு தள்ளியதால், வைத்திலிங்கத்திடமிருந்து காந்தி விலகிக்கொண்டார். டெல்டா மாவட்டத் தைப் பொறுத்தவரை தன்னைவிட வேறு யாரும் முன்னிலையில் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தும் வைத்திலிங்கம், யாரையும் வளர்த்துவிட விரும்பவில்லை. கட்சியில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் காந்தத்தின் எதிர்த் துருவம்போல தொண்டர்களையும் நிர்வாகிகளை யும் ஈர்ப்பவராக இருக்கவேண்டும். ஒத்த துருவம்போல விலக்குபவராக இருக்கக்கூடாது.

தற்போது 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் பணிக்குழுவில் வைத்திலிங்கத்தின் பெயர் இடம்பெறவில்லை. தன்னைவிட யாரும் வளர்ந்து விடக்கூடாது என்ற சுயநல அரசியலை முன்னெடுக் கும் வைத்திலிங்கத்தால்தான் அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என அதிகளவில் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு கட்சி தாவியுள்ளனர் என்ற உரத்த குற்றச்சாட்டுக் குரல் தொண்டர்கள் மத்தியிலிருந்து எழுகிறது.