Advertisment

அ.தி.மு.க. பிரமுகர் கொலை! அலட்சியம் காட்டும் ஆளுங்கட்சி!

dd

டைகழிநாடு பேரூராட்சி முன்னாள் அ.தி.மு.க. துணைத்தலைவர் அரசு என்கின்ற ராமச்சந்திரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் அ.தி.மு.க அரசே அலட்சியம் காட்டுவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வருத்தமடைய வைத்துள்ளது.

Advertisment

m

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள இடைகழிநாடு பேரூராட்சியின் முன்னாள் அதிமுக துணைத் தலைவராக இருந்தவர் அரசு (எ) ராமச்சந்திரன்.

பா.ம.க.வைச் சேர்ந்த கணபதி என்பவர் அப்பகுதியின் முன்னாள் கவுன்சி

டைகழிநாடு பேரூராட்சி முன்னாள் அ.தி.மு.க. துணைத்தலைவர் அரசு என்கின்ற ராமச்சந்திரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் அ.தி.மு.க அரசே அலட்சியம் காட்டுவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வருத்தமடைய வைத்துள்ளது.

Advertisment

m

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள இடைகழிநாடு பேரூராட்சியின் முன்னாள் அதிமுக துணைத் தலைவராக இருந்தவர் அரசு (எ) ராமச்சந்திரன்.

பா.ம.க.வைச் சேர்ந்த கணபதி என்பவர் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர். சில அரசு டெண்டர்களை எடுத்துவந்துள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டும் தார்ச்சாலைக்கான டெண்டர் விடப்பட்டதில் அ.தி.மு.க. துணைத்தலைவரான அரசு, டெண்டர் எடுத்துள்ளார். இதில் சில பிரச்சனைகள் எழுந்தன. அடுத்தகட்டமாக 3 கோடியில் டெண்டர் ஒன்று வருவதாகவும் அந்த டெண்ட ருக்கும் அரசு மீண்டும் போட்டியாக வருவார் என்பதாலும் கணபதி ஆத்திரமடைந்துள்ளார்.

Advertisment

வேம்பனூர் பகுதியில் தார்ச்சாலை போடும் பணியை முடித்துவிட்டு, தனது கட்சி பிரமுகர் மதுரவீரன் படத்திறப்பு விழாவிற்கு போகும்முன், தனது வீட்டுக்குச் சென்றுவிட்டுப் போகலாம் என்று நினைத்துள்ளார் அரசு (எ) ராமச்சந்திரன். தனது வீட்டிற்குச் செல்லும் சுடுகாட்டுப் பாதையில் வந்த அரசுவை தெருவிளக்கை அணைத்துவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தில் மாரி முத்து, விக்னேஷ் என்பவர்கள் அரசின் நடமாட்டத்தை வேவுபார்த்துச் சொல்ல, பாண்டிச்சேரி ரவுடிகள் காரியத்தை முடித்துள்ளனர். சத்தம்கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், அரசுவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வழியிலே உயிரிழந்துள்ளார்.

mm

இதுதொடர்பாக அரசு (எ) ராமச்சந்திரனின் தம்பி கமலிடம் கேட்டபோது, ""எங்க அண்ணனை திட்டமிட்டே கொலைசெய்துள்ளனர். கொலை செய்தவர்கள் பா.ம.க. பின்னணியில் செயல்பட, அ.தி.மு.க. பிரமுகர்கள் அவர்களுக்குத் துணைபோகிறார்கள். காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்.தான் என் அப்பா திருமணத்தையே நடத்திவைத்தார். இப்போ அதே அ.தி.மு.க. எனது அண்ணனின் கொலையில் குற்றவாளிமீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறது'' என்றார்.

முதலில் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் தாரனேஷ்வரி மாரிமுத்து, விக்னேஷ் இருவரையம் பிடித்து விசாரித்ததில் “சம்பவத்தில் ஈடுபட்டது பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு வழிமட்டும்தான் காட்டினோம்’’என்று ஒப்புக் கொண்டுள்ளனர். கணபதிமேல் வழக்குப் பதிவுசெய்த நிலையில், மேலிடத்திலிருந்து எஸ்.பி. வரை அழுத்தம்வரவே வழக்கை நிறுத்தி வைத்துள்ளனர்.

சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் தாரனேஷ் வரியை கேட்டபோது, ""வழக்கு விசாரணை சென்றுகொண் டிருப்பதால் இப்போது பேசமுடியாது'' என்றார். பலமுறை முயன்றும் எஸ்.பி கண்ணனை தொடர்புகொள்ள முடியவில்லை.

-அ.அருண்பாண்டியன்

nkn260920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe