ssநாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ. க.வில் களமிறங்கியுள்ள முக்கியமான 5 பேர் ஜெயிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், பா.ஜ.க.வின் சுப்பிரமணிய சாமி, "மோடியே தோற் பார்; தமிழக பா.ஜ.க.வில் நயினார் நாகேந்திரன் மட்டுமே ஜெயிப்பார்' என்று அதிரடியாக பேசியிருப்பது, தமிழக பா.ஜ.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதி களில் அவசரம் அவசர மாக ஒரு சர்வே டீமை இறக்கியிருக்கிறது பா.ஜ.க. வின் தேசிய தலைமை! மக்களோடு மக்களாக கலந்து ரகசியமாக அந்த சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. ஆறு நாட்களில் சர்வேயை முடித்துக் கொடுக்கவேண்டும் என்றும் சர்வே டீமிடம் அறிவுறுத்தியுள்ளது பா.ஜ.க.

eps

இந்த நிலையில், "நயினார் மட்டும்தான் ஜெயிப்பார்' என்கிற சு.சாமியின் ஸ்டேட்மெண்ட் டின் பின்னணி குறித்து விசாரிக்க மத்திய உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Advertisment

இது பற்றி நாம் விசாரித்தபோது, "நயினார் நாகேந்திரனுக்காக எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரே ஏமாற்றிய வில்லங்கமும், அவருக்காக தொழிலதிபர் ஒருவர் களமிறங்கியுள்ள விவகாரமும் உள்ளிட்ட பகீர் தகவல்கள் கிடைக்கின்றன.

நெல்லை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் ராபர்ட் புரூஸ், அ.தி.மு.க.வில் ஜான்சிராணி, பா.ஜ.க.வில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க.வில் முதலில் அறிவிக்கப்பட்டவர் சென்னையை சேர்ந்த சிம்லா முத்துச்சோழன். அவரை மாற்றிவிட்டுத்தான் ஜான்சிராணியை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இதுபற்றி அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "அதிமுக மா.செ. இசக்கி சுப்பையா, வி.வி.மினரல்ஸ் தொழிலதிபர் வைகுண்டராஜன் இருவரும் நயினாருக்காக இந்த தேர்தலில் கைகோர்த்துள்ள னர். நயினாரே பெரிய தொழிலதிபர். தேர்தல் வெற்றிக்காக ஏகப்பட்ட தில்லாலங்கடி செய்பவர். அப்படியிருந்தும் அவருக்காக களத்தில் இறங்கி யிருக்கிறார் வைகுண்டராஜன்.

Advertisment

d

மீண்டும் மோடி ஆட்சியில் உட்காரும்போது, ஜெயித்தாலும், தோத்தாலும் நான் மத்திய அமைச்சராவேன் எனும் பெரிய நம்பிக்கை யில் காய்களை நகர்த்திவரும் நயினார் நாகேந்திரன், நெல்லை அ.தி.மு.க. மா.செ. இசக்கி சுப்பையாவிடமும் வைகுண்டராஜனிட மும் வேட்பாளராக, தான் அறிவிக்கப் படுவதற்கு முன்பே ஆலோசிக்கிறார்.

அப்போது, நெல்லை தி.மு.க.வில் நடக்கும் உள்கட்சி பிரச்சனைகளால் இந்தமுறை தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. தள்ளிவிட்டு விடும். காங்கிரஸ் கட்சியிலும் எம்.பி. தேர்தலில் போட்டியிட வைக்கிற அளவுக்கு வலிமையான உள்ளூர் வேட்பாளர் யாரும் கிடையாது. வெளியூரிலிருந்துதான் யாரேனும் ஒருவரை இறக்குவார்கள். எப்படியிருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் நமக்கு போட்டி யாக வரமுடி யாது. ஆனால், அ.தி.மு.க. வேட் பாளர் உள்ளூர் வேட்பாளராக இருக்கக்கூடாது. அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என இசக்கியிடம், நயினார் விவாதிக்க... "நான் பார்த்துக்கொள்கிறேன்' என உறுதி தந்திருக்கிறார் இசக்கி. அதனடிப்படையில்தான் எடப்பாடியிடம் பேசவேண்டிய விதத்தில் பேசி, சிம்லா முத்துச்சோழனை அறிவிக்கச் செய்தார் இசக்கி சுப்பையா.

ஆனால், சிம்லா அறிவிக்கப்பட்டதுமே நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் கொந் தளித்துவிட்டனர். உடனே எடப்பாடியை தொடர்புகொண்ட மாவட்ட கழகத்தினர், வெளியூர் நபருக்கெல்லாம் வேலை பார்க்க முடியாது. அதுவும் கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே வாய்ப்புத் தரப்படுகிறது எனில் என்ன அர்த்தம்? நயினாரை ஜெயிக்க வைக்க, அவருடனும் வைகுண்டராஜனுடனும் சேர்ந்து கொண்டு இசக்கிசுப்பையா நடத்திய தில்லு முல்லுக்கு தலைமையும் உடந்தையாக இருக்கிறதா?

நெல்லையில் பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்க எடப்பாடி துணைபோகிறார்; பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு சொல்லிட்டு நயினாரை ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை எடப்பாடி இறக்கியிருக்கிறார்னு தி.மு.க. உள்பட மாவட்டத்தில் எல்லோரும் உங்களுக்கு எதிராக பேசுகிறார்கள். நம்ம கட்சியிலும் (அ.தி.மு.க.) அப்படித்தான் பேச்சு இருக்கிறது. அதனால், வேட்பாளரை மாத்துங்க; இல்லைன்னா எங்களால் வேலை செய்ய முடியாது'' என மாவட்ட ர.ர.க்கள் கறாராக பேசியிருக்கிறார்கள்.

dss

அப்போதுதான், இசக்கிசுப்பையா வால் ஏமாற்றப்பட்டுள்ளோம்னு எடப்பாடிக்கே தோணுகிறது. அதன் பிறகே சிம்லாவை மாற்றிவிட்டு, புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளரான திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணியை அறிவித்தார் எடப் பாடி பழனிச்சாமி''’என்று விவரிக்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தினர்.

தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்த போது, ‘’"தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு தொழில் ரீதியாக மத்திய அரசில் பல பிரச்சினைகள் இருக்கிறது. நயினார் நாகேந்திரன் ஜெயித்து மந்திரியாகிவிட்டால், அவர்மூலம் தனது தொழில் சிக்கல்களை சரிசெய்து விடலாம் என கணக்குப்போட்டே நயினாரை ஜெயிக்கவைக்க அவருடன் நெருக்கமாகியிருக்கிறார் வைகுண்ட ராஜன். அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக நயினார் நாகேந்திரன் உறுதி தந்திருக்கிறார்.

ஆனால், எங்கள் கட்சியின் தேசிய தலைமையின் கணக்கே வேறாக இருக்கிறது. நயினாரின் ஆசை நிராசையாகும். நயினாரின் அனைத்து காய் நகர்த்தல்களையும் தெரிந்து வைத்திருக்கிறார் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. அதற்கு கடந்த நக்கீரன் இதழில் வந்த ஸ்டோரியும் ஒரு காரணம்.

இதுமட்டுமல்ல; மோடிக்கும் அமித்ஷா வுக்கும் எதிரியான சுப்பிரமணியசாமி, நயினாருக்காக வாய்ஸ் கொடுத்திருப்பதன் மூலம், நயினாருக்கும் சு.சாமிக்குமான நெருக்கத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அதனால், நயினாரின் திட்டம் பலிக்காது''’ என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.

பா.ஜ.க. தலைமையிடம் லாபிசெய்து நெல்லை தொகுதியை நயினார் கைப்பற்றியதன் பின்னணியில் இருந்த டெல்லி சீக்ரெட் விவகாரத்தை கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். நமது செய்தி பா.ஜ.க.விலும் உளவுத்துறை வட்டாரங் களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில்... நயினாருக்காக லாபி செய்தவர்களைப் பற்றி ஆராயத் தொடங்கியிருக்கிறது அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம்.